விவசாயிகளின் விவசாய புரட்சியை மையமாக கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சிதான் இந்திய சமூக கட்டமைப்புக்கு பொருத்தமானது என்பதை முன் வைத்தது மார்க்சிய லெனினிய இயக்கம்.

தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சி, அதன் பிறகு நக்சல்பாரி உழவர்கள் எழுச்சி வரிசையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக போராடிய பஞ்சாப் ஹரியானா விவசாயிகளின் எழுச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்றிணைக்க போராடி வருகிறது சி பி ஐ எம் எல் (நியூ டெமாக்ரசி).

அவர்களின் விவசாய அமைப்பான AIKMS நடத்துகின்ற நான்காவது அகில இந்திய மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் நக்சல்பாரி அரசியலைக் கொண்டு செல்கின்ற புரட்சிகர விவசாய அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அதன் மாநில பொருளாளர் தோழர் கே.செல்வராசு கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அவருடன் அந்த அமைப்பின் முன்னணியாளர்களும் பங்கெடுக்க உள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் நகரில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

விவசாயிகளே! தொழிலாளர்களே!
தங்களையும் இந்த பேரணி– பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று அறை கூவி அழைக்கின்றோம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி.

தமிழ்நாடு.

1 COMMENT

  1. AIKMS அகில இந்திய மாநாடு வெற்றி
    அடைய புரட்சிகர வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here