‘ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க’
என்று கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில் அடிக்கடி உபயோகப்படுத்தினார் என்பதை நாடறியும்.
அதற்கான குறைந்தபட்ச நியாயத்தையும் அவர் விரிவாக ஏதும் எடுத்து இயம்பவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு, ஏற்கனவே ஸ்டாலின் அரசாங்கம் என்னென்ன திட்டங்களை அறிவித்து இருந்ததோ, அந்தத் திட்டங்களுக்கு எல்லாம் வேறு பெயர் மாற்றி லேபிள் ஒட்டும் வேலையை மட்டும் செய்து, சாதனையாளனாகத் தன்னைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வாறு பெயர் மாற்றி அண்மையில் லேபிள் ஒட்டிய திட்டம் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ என்பதை பெயர் மாற்றி ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என்பதாக பெயர் சூட்டினார்.(ஏற்கனவே இருந்த முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்பது தற்போதைய முதல்வருக்கும் பொருந்தும் தானே? அவர் என்ன ‘ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம்’ என்றா பெயர் வைத்திருந்தார்?)
மேலும் படிக்க: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!
இதற்கு முன்பு ‘நான் முதல்வன் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ உட்பட இன்னும் பல ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றினார். இன்னும் கலைஞர் ஆட்சி காலத்து – ஸ்டாலின் ஆட்சி காலத்து என்னென்ன திட்டங்களுக்கு என்னென்ன பெயர்களை மாற்றி சூட்டி அசிங்கங்களை உருவாக்கிக் கொள்ளப் போகிறாரோ இந்த குரங்குச் சேட்டை நடிகர் விஜய்… ‘யாமறியோம் பராபரனே’!
ஊழல் பெருச்சாளிகள் ஜெயா – அமித்ஷா
கட்சிகள் இனிப்பது ஏன்?
இவ்வாறு பெயர் சூட்டும் கோமாளி நடிகர் விஜய், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த மாபெரும் ஊழல் புகாரில் பெங்களூர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்கா அவர்கள் ஜெ. ஜெயலலிதா, வி கே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைவாசமும் ரூ.10 கோடி அபராதமும் வழங்கித் தீர்ப்பளித்தார்.
இதனால் சில நாட்கள் சிறையில் இருந்த நிலையில், பின்னர் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து குன்காவின் தீர்ப்பை ரத்து செய்து ‘நீதிபதி’ குமாரசாமி மூலம் விடுதலை பெற்றார்.
பின்பு இந்த ஜெயலலிதா & கோ மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில் ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கு நான்காண்டு சிறைவாசம் உறுதிப்படுத்தப்பட்டது. அதற்குள் ஜெயலலிதா ‘சொர்க்கம்’ சென்று விட்டதால் அவர் மட்டும் சிறைவாசத்தை ‘அனுபவிக்க’வில்லை. சில நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இன்னும் சசிகலா குடும்பத்தினர் சிலருக்கும் சிறைவாசம் அளிக்கப்பட்டதை அறிவோம்.
ஆனால் அப்படிப்பட்ட ‘உத்தமி’யின் ‘அம்மா உணவகம்’ உள்ளிட்ட அதிமுகவின் பல திட்டங்களுக்கு இந்த நடிகர் விஜய் பெயர் மாற்றம் செய்யாதது ஏன்?
காரணம் என்ன?கொள்கை கோட்பாடு-வெங்காயம் ஏதும் இல்லை. கூத்தாடி விஜய்க்கான ‘அரசியல் எதிரி’ ஸ்டாலினும் திமுகவும் தானாம். கிடந்து விட்டுப் போகட்டும்.
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?
தற்போது 575 அரசுப் பேருந்துகளுக்கு த.வெ.க. கொடி நிறத்தில் வண்ணம் அடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருப்பது இந்த கோமாளி நடிகருக்கு அசிங்கமாகப்பட வில்லையே, ஏன்? இது, ‘ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்வது’ என்பதில் அடங்காதா விஜய் ப்ரோ? உங்கள் பட்டினம்பாக்கம் வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்ட ரூ.1200 கோடி மக்கள் பணத்தை ஒதுக்குவது ”ஊரான் வீட்டு நெய்யில் உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்வது” என்றாகாதா விஜய் ப்ரோ?
ஜெயலலிதா காலத்தில் பச்சை நிற பேருந்துகள் & மினி பேருந்துகள்! விஜய் ஆட்சி காலத்தில் மஞ்சள் – காவி இரண்டும் கலந்த நிறத்திலான – (ஏறத்தாழ இந்துத்துவ காவிக் கும்பலுக்கு இசைந்த) பேருந்துகள்! மீனவர்கள் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கி வீட்டருகிலேயே தலைமைச் செயலகம்! எவ்வளவு கேலிக் கூத்து இது?
இவையெல்லாம் இளசுகளான இருபால் Genz விசில் கூட்டத்திற்கு தவறாகப் படாதுதான்! அவர்கள் சில காலம் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கி நீடிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் ‘முற்போக்குவாதிகள்’ என வலம் வரும் திருமா, வைகோ மற்றும் விஜய் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து காத்து நிற்கும் மாணிக்க தாகூர், காதர் மைதீன் போன்றோரின் வன்மையானக் கண்டனக் குரல்களைக் காணோமே, ஏன்?
இடதுசாரிகளும் கூட இதற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இழி செயலுக்கு எதிராக பலமான குரல் எழுப்புவோம்! வீதிப் போராட்டங்கள் நடத்துவோம்!
எழில்மாறன்







