ருதய நோயாளியான மன்னன் ஒருவனுக்கு மெய்க் காப்பாளனாக பணிபுரிந்து கொண்டிருந்தவனுக்கு நாம் ஏன் இவரை போல மன்னனாகி அதிகாரத்தை கைப்பற்ற கூடாது என்ற ஆசை வந்தவுடன், அவரைப் போலவே அனைத்து வித்தைகளிலும் தன்னை தேர்ந்தவனாக காட்டிக் கொண்டான். தன்னுடன் சில மந்திரிகளையும் சேர்த்துக் கொண்டான். பிறகு மெல்ல மெல்ல அந்த மன்னனுக்கு கொடுக்கும் மருந்துகளை குறைத்தும், கூட்டியும் கொடுத்து சீக்கிரம் ‘சொர்க்கத்திற்கு’ அனுப்பியும் வைத்தான். மன்னன் மரணத்தில் விழுந்தவுடன் சூழ்ச்சி செய்து அவன் விரும்பியபடியே அதிகாரத்தையும் கைப்பற்றினான்” என்று கர்ண பரம்பரை கதை ஒன்று உள்ளது. அந்தக் கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது பாசிச கோமாளி விஜய் பிரதமராக முயற்சிக்கின்ற நடவடிக்கைகள்.

ரூட் மாஃபியா கும்பலும், பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலும், தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒரு பிரிவும் இணைந்து தமிழகத்தின் முதல்வராக ஆக்கிய பாசிச கோமாளி விஜய்-க்கு தற்போது பிரதமர் பதவி ஆசையையும் மூட்டியுள்ளனர். ‘இன்றைய தமிழக முதல்வர் நாளைய இந்தியப் பிரதமர்’ என்றும், இந்தியாவின் பிரதமராக, அடுத்து அமெரிக்க ஜனாதிபதியாக மாறப்போகிறார் என்றும் அவரது அடிப்பொடிகள் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளனர்.

அமைச்சர் சரத்குமார், செங்கோட்டையன், ஸ்ரீநாத் மற்றும் ஜெகதீஸ்வரி என்று ஒரு கூட்டம் பல்வேறு காலகட்டங்களில் இந்த துதி பாடல்களைப் பாடி வருகின்றனர். பாசிச ஜெயா ஆண்ட போது அவரது மனதில் இடம் பிடிக்க மண் சோறு முதல் ‘மலச்சோறு’ வரை தின்று விசுவாசத்தைக் காட்டிய அதிமுக தொண்டர்கள் வழியில் த.வெ.க ரசிகர் கூட்டம் இறங்கியுள்ளது.

“ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் நீங்கள், நாளைய இந்தியாவின் பி.எம்” – கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் சரத்குமார் இவ்வாறு பேசினார். த.வெ.க அமைச்சர்கள் பலரும் “வருங்கால பி.எம்” என முதலமைச்சர் ஜோசப் விஜயை மையப்படுத்திப் பேசி வருகின்றனர். இதன் மூலம் கூட்டணி கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் ராகுல் காந்திக்கு டப் கொடுக்க முயற்சிக்கின்றனர்.

சினிமாவில் கடைசி காட்சி வரை காமுகனாகவும், பொறுக்கி-ரவுடியாகவும் நடித்த ஒருவன் கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென்று ஞானோதயம் பெற்று உத்தமனாக நடிப்பது போல, நிஜ வாழ்க்கையில் இந்த பாசிச கோமாளி விஜய் ஆட்சியில் அரசியலற்ற அரசியல் என்ற முறையில் கதாநாயகத்தனம் மேலோங்கி வருகிறது.
தமிழகத்தில் விஜய்க்கு இருந்த ரசிக குஞ்சுகளின் ஆதரவை கட்சி அரசியலுக்கு மாற்றுவதற்கு எவ்வாறு ரூட் மாஃபியா மூலம் படிப்படியாக ரீல்ஸ்கள் போட்டு கருத்துக்களை உருவாக்கினார்களோ, அதே போல அகில இந்திய அளவில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ரீல்சுகள் மூலம் விஜய் பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட போவதாக கருத்துக்களை உருவாக்கி வருகிறார்கள்.

காங்கிரசுக் கட்சியின் மாணிக் தாக்கூர் போன்றவர்கள் விஜய் கட்சியினர் முன்வைக்கின்ற இந்த பிரச்சாரங்களை கண்டு ஆத்திரம் அடைந்து தேவைப்பட்டால் ஆட்சியில் நாங்கள் கொடுத்த ஆதரவை விளக்கிக் கொள்வோம் என்று மிரட்டி பார்க்கின்றனர்.

படிக்க: அரசியலற்ற அரசியலும்  கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக  பாசிசக் கோமாளி விஜய்!

சமீபத்தில் குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியிலும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

ஊடக மாமாக்களின் அரசியல் வேசித்தனம்!

தமிழகத்தின் முன்னணி செய்தி ஊடகங்களிலும், அகில இந்திய அளவில் சில சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் இந்த விவாதம் களைகட்டி வருகிறது.
மாநிலச் சமூக வலைதளங்களில் “அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பலரும் சுட்டிக்காட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனிடையே, இந்தியா டுடே & சி வோட்டர் ஆகிய தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் விருப்பமான பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் 9 சதவீத ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் 3-வது இடத்தைப்பிடித்தார். இந்த முடிவுகள் வெளியானதில் இருந்தே தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய அளவில் த.வெ.க கொண்டு செல்லும் யுக்தியாக இவ்வாறு பேசப்படுகிறதா?” என, த.வெ.க தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் சத்தியகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது.

படிக்க: கழுத்தில் கட்டிய கலயம் தற்போது அடையாள அட்டையில் அதிகாரப்பூர்வமாகிறது! பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில்

“பிரதமராக ஜோசப் விஜய் வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வாக்களிக்கும் மக்களில் கணிசமான அளவு ஜென் ஸி தலைமுறையினர் உள்ளனர். இவர்களின் தேர்வாக முதலமைச்சர் ஜோசப் விஜய் இருக்கிறார்” எனக் கூறுகிறார். “இவர்கள் வலுவான தலைவரை எதிர்பார்க்கின்றனர். தற்போதுள்ள மாநிலக் கட்சிகளில் வலுவான தலைவர்கள் இல்லை. அது விஜய்க்கு சாதகமாக மாறியுள்ளது” என்கிறார் அவர்.

இந்தியா கூட்டணியில் இருந்து பிரதம வேட்பாளராக முன்வைக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்திக்கு போட்டியாக பாசிச கோமாளி விஜய் இறக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் வேரோ, விழுதோ இல்லாத காங்கிரசு கும்பல் குதியாட்டம் போடுகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு அமைச்சரானதைப் போல தனது வாழ்நாள் கனவான தமிழக அமைச்சர் பதவியை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று துடித்துக் கொண்டுள்ள அரசியல் கோமாளி வைகோ. தனது திருவாயை திறந்து “இதுபோன்ற எண்ணங்கள் கற்பனையில் கூட முதல்வர் விஜய்க்கோ அமைச்சர்களுக்கோ இருக்காது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது தவறு. அமைச்சர்கள் பேசும்போது இதுகுறித்து நகைச்சுவையாக பேசக்கூடாது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். வேறு யாரும் இருக்கவும் முடியாது. இதுகுறித்து இனிமேல் பேசக்கூடாது என்று முதல் அமைச்சர் வலியுறுத்த வேண்டும்” என்று விஜய்யிடம் மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க: ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டும் நடிகர் விஜய்யின் ஆட்சி!

திமுக கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு இரண்டு எம்எல்ஏக்களையும், அதற்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனை எம்பியாகவும் மாற்றிய திருவாளர் வைகோ தமிழகத்தில் பச்சோந்தியான ராமதாஸுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜெகஜ்ஜாலக் கில்லாடியாகியுள்ளார். கூட்டணி தர்மத்திற்காக திமுகவை விமர்சிக்க மாட்டேன் என்றெல்லாம் கம்பு சுத்திய அவர் தற்போது வெளியில் வந்து விஜயின் நெஞ்சத்தில் மஞ்சம் விரிப்பதற்கு படாத பாடுபடுகிறார்.

ஜனநாயகத்தின் மக்களாட்சி தான் அதன் உயிர் நாடி! மக்கள் யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பிரதமராவதற்கு தகுதி உள்ளது. அதுமட்டுமின்றி 25 வயது நிரம்பிய யாரும் அமைச்சராகவோ, முதல்வராகவோ, பிரதமராகவோ ஆகலாம். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் மகிமை என்றெல்லாம் போலி ஜனநாயகத்தில் இருந்து பாசிச உள்ளடக்கம் கொண்டதாக மாறி கொண்டுள்ள ‘இந்திய ஜனநாயகத்தின்’ மீது நம்பிக்கை வைத்துக் கனவில் மிதந்துக் கொண்டுள்ளனர் அவரது ரசிக குஞ்சுகள்.

படிக்க: பாசிசமா பாயாசமா! பாசிசம் உள்ள பூந்திடும் என்று நக்கலடித்த அரசியல் அறிவிலிகளுக்கு!

கவர்ச்சி வாதமும், தெறிக்கின்ற உரைகளையும் முன்வைக்கின்ற பாசிச கோமாளிகள் வரலாறு நெடுக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டதும் சிலர் அதில் வெற்றி பெற்றதும், பலர் அதில் தோல்வி அடைந்ததையும் நாம் படித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் தான் உள்ளோம். பாகிஸ்தானில் இம்ரான், உக்ரைனில் ஜெலின்ஸ்கி போன்ற திடீர் தலைவர்கள் கார்ப்பரேட் நலனுக்காக அரசியல்வாதிகளாகவும், அதிபர்களாகவும் மாற்றப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இன்னொரு புறம் இது ஆர்எஸ்எஸ் பாஜகவின் அஜெண்டாக்களில் ஒன்று என்றும் செய்திகள் வெளியாகிறது. முதல் சுற்றில் அவர்கள் திமுகவை தமிழக சட்டமன்றத் தேர்தலில் இருந்து வெளியேற்றினார்கள்; பிறகு த.வெ.க தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் மற்றும் வலது, இடது கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மூலமாக ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்கச் செய்தார்கள்; தற்போதுள்ள சூழலில் ஆதரவு கொடுத்த கட்சிகளை கழட்டி விட்டு விட்டு தானே சர்வ அதிகாரங்களையும் எடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு வழிகாட்டுகிறது ஆர்எஸ்எஸ் என்கின்றனர்.

சட்டமன்ற. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதை இவ்வாறு சந்தி சிரித்து கொண்டுள்ளது. பாசிச எதிர்ப்பு என்ற முறையில் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவது கூட இத்தகைய கோமாளிகளின் அலப்பறைகளையும், அரசியலற்ற தற்குறித்தனங்களையும் அம்பலப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டிய கடமையை நமக்கு போதிக்கின்றது. இத்தகைய கோமாளிகளுக்கு இணையாக தாங்களும் கோதாவில் இறங்கி ‘தேர்தல் அரசியலில் மூழ்கி முத்துக்குளிப்போம்’ என்று சில அரசியல் தற்குறிகள் பேசிக் கொண்டுள்ளனர்.

பாசிச கோமாளி விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியது போல இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பேராசைப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

கணேசன்

புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. தோழர் கணேசன் அவர்களின் கட்டுரையில் தற்குறி கோமாளி நடிகர் அரசியலற்ற அரசியல்வாதி விஜய் அடுத்த இந்திய பிரதமராக மட்டுமல்ல; அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகளைப் பற்றி தவெக தற்குறி விசில் அணில் குஞ்சுகள் – அப்பட்டமான பிழைப்புவாதிகள் போட்டி போட்டுக் கொண்டு கூவுவது குறித்து அம்பலப்படுத்தி உள்ளதன் ஒரு பகுதி சரியானவையே. திரைப்படம் ஒன்றில் நடிகர் பிருத்திவிராஜ்-சை துதி பாடும் கும்பல் ஒன்று வரவேற்கின்ற பொழுது ‘வருங்கால பிரதமரே வருக! வருங்கால இந்திய ஜனாதிபதியே வருக!’ என்று முழக்கம் இடுகின்ற பொழுது அந்த நடிகரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படிப் பேசிக் கொள்வார்கள்: ‘அடங்கொக்க மக்கா, கொடுத்த காசுக்கு மேல ஓங்கிக் கூவுறான்ங்கடா!’… அதைப் போல் தான் தற்போது தமிழ்நாட்டில் நிஜத்தில் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

    இப்படிப்பட்ட நகைச்சுவையை அரசியலில் அடிச்சுவடியே தெரியாத தற்குறி விஜய்கூட கனவிலும் கூட எண்ணி இருக்க மாட்டார். ஏனெனில் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவிக் கும்பல் ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் என்ற நான்கு கால் பாய்ச்சலில் வெறியாட்டம் போட்டு பாசிச சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த துடித்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையில் போயும் போயும் தாம் பெற்று போட்டக் கள்ளக் குழந்தையாம் விஜய்யை இந்திய பிரதமராக்க எள்ளின் முனையளவும் அனுமதித்திடுமா என்ன? தொடை நடுங்கி, ஊழல் பெருச்சாளி, கருப்புப் பண முதலை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை குவித்துப் போட்டிருக்கக்கூடிய விஜய்யின் பிடிமானங்கள் அனைத்தும் அமித்ஷா டேபிளில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளது. திமுகவை தோற்கடித்து தாம் ஆட்சி பீடத்தில் ஏற (பாசிச) பாஜகதான் காரணம் என்பதை மற்ற எவரையும் விட மிக நன்கு அறிந்தவர் விஜய். மோடியை விட அமித்ஷாவை கண்டாலே தொடை நடுங்கும் விஜய் பிரதமராகுவதற்கு கனவில் கூட எண்ணிட மாட்டார்.
    அரசியல் வேடத்திற்காக பாஜக அனுமதியோடு பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்று சொல்லி நாடகமாடினாலும், அந்தக் கொள்கை எதிரிக்கு எதிராக ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்க முன் வர மாட்டார் இந்த கோமாளி நடிகர் விஜய். அதேபோல தவெக-வை முழுமையாக விழுங்கிச் சுவைக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருப்பதால் தற்போதைக்கு திமுகவை அகற்றிய வரையிலும் போதும்; கொஞ்சம் பொறுத்து இருப்போம்; என்ற முடிவில் பாஜக தரப்பில் மோடியோ அமித்ஷாவோ தமிழ்நாட்டில்அண்ணாமலையோ (திமுக காலத்தில் எந்நேரமும் குரைத்துக் கொண்டிருந்த) தமிழிசை, வானதி, குஷ்பூ, காயத்ரி உள்ளிட்ட எந்த ஜென்மங்களும் தவெக குறித்து – விஜய் குறித்து உரக்க விமர்சிப்பதில்லை.

    இந்த அடிப்படை அம்சங்களை நாம் புரிந்து கொண்டால் விஜய் மீது வலிந்து திணிக்கப்படும் ‘பிம்பங்கள்’ அனைத்தும் சுக்கு நூறாக நொறுக்கப்படும் என்பதனை தமிழ்நாடும் இந்தியாவும் மிக விரைவில் உணரும். இந்த உண்மைகளையும் சேர்த்தே கட்டுரையாளர் தமது படைப்பில் இணைத்திருந்தால் கட்டுரைக்கு இன்னும் மெருகு ஏறி இருக்கும். வாழ்த்துக்கள் தோழரே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here