
இன்று 08.1.2025 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கடலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தந்தை பெரியாரை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழின பிழைப்புவாதியான சீமானின் ‘சர்வாதிகார’ நடவடிக்கையால் அவரது கட்சியிலிருந்து பல்வேறு மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியை நோக்கி பயணிக்கின்றனர். இன்று கூட தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். “என் கட்சி; நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்; நான் கைகாட்டியவர் தான் வேட்பாளர், எனும் திமிர் பேச்சால் நாம் தமிழர் கட்சி இன்று கலகலத்து போயுள்ளது.
சீமானின் அரசியலற்ற உணர்ச்சி பூர்வமான பேச்சைக் கேட்டு பல்வேறு இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியை நோக்கி வந்தார்கள். ஆரம்பத்தில் நேர்மையான அரசியல்வாதியை போல் காட்டிக் கொண்ட காரணத்தினால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சீமானை அரசியல் மாற்றாக நினைத்து பெரும் தொகையை நிதியாக வழங்கினார்கள்.
ஆனால் காலம் செல்ல செல்ல சீமானின் குட்டு வெளிப்பட ஆரம்பித்து விட்டது. சுகபோகமான வாழ்க்கை; ஆடம்பர கார்; ஆடம்பரமான வீடு என தனது வாழ்க்கை முறையையே தொண்டர்கள் கொடுத்த நிதியிலிருந்து தன் குடும்பத்தை வளர்த்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பாஜக கட்சி வலுப்பெறுவதற்கு ஏற்ப சீமானின் செயல்பாடுகள் அமைந்தன. இன்று வரை தமிழ்நாட்டில் பார்ப்பனியமோ மத வெறியோ கோலோச்சாததற்கு காரணமாய் இருந்தது தந்தை பெரியாரும் அவருடைய திராவிட பகுத்தறிவு கருத்தியெலும், முற்போக்கு அரசியலுமே. இதனை மக்கள் மனதில் இருந்து அகற்றாமல் இங்கு மதவாத சக்திகளோ, இனவாத சக்திகளோ தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதை பாசிஸ்டுகளும் தமிழின பிழைப்புவாதிகளும் நன்கு அறிவர்.
படிக்க:
இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் பெரியார் பற்றிய அவதூறுகள் பொய்களாக பரப்பப்படுகிறது. அனைத்தும் பொய் என பலமுறை ஆதாரங்களுடன் நிறுவினாலும் தமிழ்நாட்டில் உள்ள பாசிச கும்பல் அதனை தொடர்ந்து பரப்பி வருகிறது.
அவர்களுக்கு பக்க பலமாக அதே வேலையை சீமானும் செய்து வருகிறார். நேரடியாக பாஜகவின் ‘வாயாகவே’ மாறிவிட்டார்.
அப்படியான நிகழ்வுதான் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பாரதியார் பிறந்தநாளை ஒட்டி நடந்த பொதுக் கூட்டத்தில் பெரியாரை அவதூறாக பேசியிருந்தார் சீமான். தற்போது கடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்த தவறான தகவலை செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
“உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டு சந்தோசமாக இரு” என பெரியார் பேசியதாக சீமான் மீண்டும் பொய்யை கட்டவிழ்த்து இருக்கிறார். இதை அடுத்து வேறு சில பொய்களையும் பேசி இருக்கிறார் சீமான்.
படிக்க:
🔴 சீமான் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது
இது தவறான தகவல் என்பதை YOUTURN உண்மை சரிபார்ப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தும் மீண்டும் மீண்டும் பெரியாரை பற்றி அவதூறு வரப்போவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார் சீமான்.
தமிழ்நாட்டில் இளைஞர்களை தவறான திசையில் செலுத்தும் பிழைப்புவாத பொறுக்கியான சீமான், அவரை நம்பி இருக்கும் இளைஞர்களையும் பாஜகவின் ஊது ஊழலாகவே மாற்றியுள்ளார். அவர்களின் முழு நேர பணியை திராவிட சித்தாந்தத்தை டேமேஜ் செய்வதும், சங்கிகளை வாட்சப்பில் பொய் தகவல்களை பார்வர்டு செய்வது தான்.
சீமான் பெரியாரைப் பற்றி பேசுவதும் நான் அப்படி பேசவே இல்லை எனக் கூறுவதும் புதிதில்லை. கடந்த 2022 டிசம்பரில் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசியிருந்த சீமான் அடுத்த சில நாட்களில் “பெரியாரை நான் இழிவாக பேசியதற்கு சான்று ஏதேனும் உள்ளதா? பெரியார் எங்கள் வழிகாட்டி” என்று பேசினார்.
அதே சீமான் தான் இன்று சமூகநீதிக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் அவரை தான் விஜய் கொள்கை வழிகாட்டி என்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என ஏறுக்கு மாறாக பேசி வருகிறார்.
சீமான் இப்படி பேசுவதை கண்டும் காணாமல் சென்று விட முடியாது பெரியாரைப் பற்றி அவதூறு என்றால் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன ஆதரவு ஊடகங்கள் இந்த செய்திகளை உண்மை தன்மையை ஆராயாமல் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி மக்கள் மனதில் பெரியார் குறித்த தவறான கருத்தை விதைக்கின்றன.
தமிழக பாஜகவின் ஹெச் ராஜா, இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத், நாம் தமிழர் சீமான் போன்ற பிழைப்புவாத பாசிச கும்பல்கள் ஒன்றிணைந்து தமிழ்நாட்டில் மத, இன கலவரங்களை உருவாக்க, ஆரிய பார்ப்பன சித்தாந்தத்தை விதைக்க நினைக்கிறார்கள். இதற்கு பெருந்தடையாக உள்ள பெரியாரை அவரது பகுத்தறிவு கொள்கைகளை ஒழித்துக் கட்ட திட்டமிடுகிறார்கள்.
இனிமேல் சீமானோ, ஹெச்.ராஜாவோ பெரியாரைப் பற்றி அவதூறாக பேசினால் அவர்களை அடித்து ஓட விட மக்கள் தயாராக வேண்டும். மீண்டும் நம்மை பார்ப்பனர்களின் அடிமையாக்க திட்டமிடும் இவர்களின் கனவுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்.
- சுவாதி