கடந்த வாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த வந்த சூழலில் சாதாரண சமூக ஊடக பயனாளிகள், ஊடகம் மட்டுமல்லாமல் அரசாங்கமும் ஏற்கனவே நடந்து முடிந்த போர் காட்சிகளை பகிர்ந்து வந்தனர். ஒவ்வொருவரும் தனது அரசியல் நிலைப்பாட்டிற்கு போலி காணொளிகளைப் பரப்பியதன் மூலம் உண்மை நிலையை மறைத்து பொய்களின் மூலம் கருத்துருவாக்கம் செய்ய முயன்றுள்ளனர்.
மே-7ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் ”ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்கு பிறகு இந்திய அரசு அது குறித்து தெரிவிப்பதற்காக புது டில்லியில் உள்ள தேசிய ஊடக மைய்யத்திற்கு பத்திரிக்கையாளர்களை அழைத்திருந்தது.
இந்நிகழ்வின் தொடக்கத்தில் 2001 முதல் இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களாகிய 2001- பாராளுமன்ற தாக்குதல்,2002 அக்ஷர்தன் கோவில் தாக்குதல், 2008- மும்பை தாக்குதல்,2016- உரி தாக்குதல், 2019-புல்வாமா தாக்குதல், 2025 பெஹல்காம் தாக்குதல் ஆகியவற்றின் ஒருங்கிணைக்கப்பட்ட காணொளி திரையிடப்பட்டது..
“உலகம் புதிய நூற்றாண்டில் நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தியா தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.” எனும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்வில் திரையிடப்பட்ட கானொலியில் 2019ல் நடந்த புல்வாமா தாக்குதல் கானொளி காட்சியில் 2008ம் ஆண்டு ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்பு காட்சி சேர்க்கப்பட்டிருந்தது.
மேற்கூறப்பட்ட காணொளியின் உண்மை தன்மை குறித்த செய்திகளை புல்வாமா தாக்குதல் நடந்த சில தினங்களிலேயே The Times of India, Indian Express, India Today, AltNews மற்றும் Quint உள்ளிட்ட பல இணைய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த பொருத்தமில்லாத காணொளி காட்சிகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத நிலைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தேசிய மற்றும் சர்வதே பார்வையாளர்களுக்கு விளக்கும் விதத்தில் இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட காணொளியில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த பிழையை சுட்டிக்காட்டி Scroll சார்பில் வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. வெளியுறவு துறை அமைச்சகம் இந்த செய்தியை பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் பொது தகவல் கூடுதல் இயக்குநகரத்திற்கு அனுப்பியுள்ளது.
அவர்களிடம் இருந்து பதில் வந்தால் இக்கட்டுரையில் சேர்க்கப்படும் என்று Scroll குறிப்பிட்டுள்ளது.
மேலே: இந்திய அரசாங்கத்தால் 2019 புல்வாமா தாக்குதலாகக் காட்டப்பட்ட ஒரு காணொளி. கீழே: 2007 இல் ஈராக்கில் இருந்து 2008 இல் யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட அசல் காணொளி.
இந்த முக்கியமான இராணுவ நடவடிக்கை குறித்த பதிவுகளில் தவறான தகவல் கலப்பிற்கு ஆளானது இந்திய அரசாங்கம் மட்டுமல்ல.
இந்த முக்கியமான இராணுவ நடவடிக்கை குறித்த பதிவுகளில் தவறான தகவல் கலப்பிற்கு ஆளானது இந்திய அரசாங்கம் மட்டுமல்ல.
இந்தியாவின் பத்திரிகையாளர்களும் வெளியீடுகளும் கூட முந்தைய நாளிலேயே இதைச் செய்திருந்தன. உதாரணமாக, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தாக்குதல்கள் பற்றிய ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டது, அதை தி இந்து அதன் X பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.
படிக்க:
🔰 இந்திய ஊடகங்களின் துணையுடன் பாகிஸ்தானை கைப்பற்றிய இந்திய இராணுவம்!
🔰 மார்க்சிய – லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி.
இந்த காணொளி உண்மையில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களைக் காட்டுகிறது, இது அக்டோபர் 2023 இல் ட்வீட் செய்யப்பட்டது.
இந்திய தாக்குதல்களின் காணொளிகள் எனப்படும் இத்தகைய வீடியோவை X இல் பகிர்ந்த முதல் பத்திரிகையாளர் ஆதித்யா ராஜ் கவுல் என்பது தெரிகிறது, தாக்குதல்களுக்கு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு
அதிகாலை 1.50 மணிக்கு ட்வீட் செய்தார். இது இப்போது சமூக ஊடக தளத்தால் ”சம்பந்தமில்லாத காணொளி”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை கவுல், PTI மற்றும் இந்து பத்திரிக்கை இநத் சம்பவத்திற்கு பொருந்தாத வீடியோக்களை அகற்றவில்லை.
தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக X தளத்தில் பாகிஸ்தானியர்களால் தவறான பதிவுகள் பகிரப்பட்டன.
பாகிஸ்தான் செய்தித்தாள் Dawn-ன் செய்தி படி, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தங்களது ஆயுதப்படைகள் ஒரு ரஃபேல் விமானம் உட்பட ஐந்து இந்திய ஜெட் விமானங்களை வீழ்த்தியதாகக் கூறினார்.
இந்திய அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ விளக்கக் குறிப்பில் இந்தக் கூற்றைப் பற்றி எதுவும் கூறவில்லை. இருப்பினும், புதன்கிழமை அதிகாலையில் பஞ்சாபின் பதிண்டா மாவட்டத்தில் ஒரு “அடையாளம் தெரியாத விமானம்” விபத்துக்குள்ளானதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று விமானங்கள் இந்தியப் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. Reuters “நான்கு உள்ளூர் அரசு தரப்பு ஆதாரங்களை” மேற்கோள் காட்டியது மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் “ஒரு இந்திய அதிகாரி” யிடமிருந்து பெறப்பட்ட தகவல் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கூற்றுக்கள் குறித்து சுயாதீனமான சரிபார்ப்பு என்று எதுவும் இல்லை, மேலும் இந்த விமானங்கள் இந்திய விமானங்களா அல்லது பாகிஸ்தானிய விமானங்களா என்பதும் தெரியவில்லை. நியூயார்க் டைம்ஸ் செய்தி இரண்டு “இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை” மேற்கோள் காட்டி, “சில இந்திய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக” கூறியது, எனினும் அவர்கள் விவரங்களை வழங்கவில்லை.
Alt நியூஸின் உண்மைச் சரிபார்ப்பாளரான முகமது ஜுபைர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு சமூக ஊடக பதிவர்களும் ஏதேனும் ஒரு நாட்டின் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோக்களை தவறாகப் பகிர்ந்துள்ளதைக் கண்டறிந்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி நிஷிகாந்த் துபே மற்றும் பாகிஸ்தானிய பத்திரிகையாளர் ஹமீத் மிர் ஆகியோர் தவறான தகவல்களைப் பெருக்குவதாகவும் ஜுபைர் குற்றம் சாட்டினார்.
தவறான தகவல்களை பரப்பும் முக்கிய வழிமுறையாக பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை சமீபத்திய சம்பவங்களுடன் பொறுத்தி தவறான தகவல்களுடன் பகிரும் முறை இருக்கிறது.
BBC பத்திரிகையாளர் ஷயான் சர்தாரிசாதே, 2024 அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதல்களின் வீடியோவை, பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதல்கள் என்று இந்திய பயனர் ஒருவர் பகிர்ந்து கொண்டதாக சுட்டிக்காட்டினார்.
மேலும் செப்டம்பரில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்படைந்த இந்திய விமானத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இன்று காலை பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஒரு பாகிஸ்தான் பயனர் செய்த வைரல் ட்வீட்டையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்: https://scroll.in/article/1082109/how-false-videos-blurred-fact-and-fiction-after-operation-sindoor
தமிழாக்கம்: தாமோதரன்