மார்க்சிய – லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி.

முதலாளித்துவ சுரண்டலால் ஆழமடைந்து வரும் நெருக்கடி நிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றை புகைத்திரைபோல மறைக்கும் திசை திருப்பலாகவே இது போன்ற ராணுவ நகர்வுகள் இருக்கின்றன.

மார்க்சிய – லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி.


ந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் போன்றவை பாசிச பாஜக நடத்துகின்ற பாகிஸ்தான் எதிர்ப்பு- தீவிரவாதிகள் எதிர்ப்பு போரை ஆதரித்து “தேச பக்தி” பஜனையில் இறங்கியுள்ளது.

மோடியின் பாசிச சர்வாதிகாரத்தை எதிர்ப்பதாக கூறிக் கொள்கின்ற காங்கிரசு கட்சி முதல் பிராந்தியக் கட்சிகளான திமுக, பாரதிய ராஷ்டிரிய சமிதி வரை அனைத்தும் இந்த நேரத்தில் மோடியுடன் ஒன்றிணைந்து நிற்போம் என்று அறிக்கை வெளியிடுகின்றனர்.

ஆர்எஸ்எஸ் பாஜக நடத்துகின்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீது கருத்து சொல்கின்ற அனைவரும் ஆதரித்து பேசலாமே ஒழிய மாற்றுக் கருத்து கூறினால், தேச விரோதிகள், தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகின்ற சூழலில் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை விருப்பு வெறுப்பின்றி பாட்டாளி வர்க்க உணர்வுடன் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய கலாச்சாரம் செய்திகள்

000

இந்தியா – பாகிஸ்தான் இடையே தீவிரமடைந்து வரும் இராணுவ பதற்றம் குறித்து பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி – மத்திய செயலகத்தின் அறிக்கை

“மார்க்சிய – லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியானது, இந்திய முதலாளித்துவ அரசால் தொடங்கப்பட்ட இராணுவத் தாக்குதலையும், பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தால் நடத்தப்பட்ட பதிலடி நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்டிக்கிறது. இவை விடுதலைக்கான போர்களல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக நடைபெறும் போர்களுமல்ல மாறாக, இது தொழிலாளர் வர்க்கத்தின் செலவில் முதலாளித்துவ ஆட்சிக் குழுக்களிடையே பிராந்திய ஆதிக்கத்திற்காக நடைபெறும் இராணுவப் போர்களாகும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஆளும் வர்க்கங்கள் இடையேயான இப்போக்குகளில் அந்நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எவ்வித பங்கும் இல்லை என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் நடைபெறும் இத்தகைய செயல்கள், நம் துணைக்கண்டத்தையே மொத்தமாக, பேரழிவுக்குள் தள்ளக்கூடிய அபாயத்தை விளைவிக்கும். இதில் எந்த ஒரு சாதி, வர்க்கம் மற்றும் நம்பிக்கையைச் சார்ந்தவர்களுக்கும் விலக்கு இல்லை. ஆனால், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரங்களுமே இவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. முதலாளித்துவ சுரண்டலால் ஆழமடைந்து வரும் நெருக்கடி நிலை, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றை புகைத்திரைபோல மறைக்கும் திசை திருப்பலாகவே இது போன்ற ராணுவ நகர்வுகள் இருக்கின்றன. இது பிற்போக்குத் தேசபக்தியை தூண்டி, வளர்ந்து வரும் வர்க்க உணர்வின் எழுச்சி அலையை நசுக்க முதலாளித்துவ ஆட்சிகள் நீண்ட காலமாகவே பயன்படுத்தும் யுக்தி ஆகும்.

படிக்க:

♠  பஹல்காம் தாக்குதலும், ஆர்எஸ்எஸ் – பாஜகவால் தூண்டப்படும் தேசிய வெறி – இஸ்லாமிய எதிர்ப்பு வெறியும்!

தெற்கு ஆசியா முழுவதிலும் உள்ள பாட்டாளி வர்க்கமும் முற்போக்கு சக்திகளும் இந்த போலி தேசியவாதத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை ஏற்க வேண்டுமென பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது. நமது போராட்டம் என்பது எல்லைகளுக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல. மாறாக, நம் இரத்தத்தை உறிந்து லாபம் சேர்க்கும் தரகு முதலாளிகள், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை கூட்டமைப்புகளோடு தான்.

நிரந்தர அமைதிக்கான பாதை என்பது, போரிடும் அரசுகளிடையேயான தந்திரங்கள் சேர்ந்த தற்காலிக கூட்டுறவுகளில் இல்லை – அவ்வாறான மாயத் தோற்றம் அகற்றப்பட வேண்டும். உண்மையில், அது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் நிகழும் சமூகத்தின் புரட்சிகர மாற்றத்திலும் முதலாளித்துவ இராணுவவாதத்தை அகற்றுவதிலும் எல்லைகளைக் கடந்த தொழிலாளர் வர்க்க ஒற்றுமையிலுமே இருக்கிறது.

பேரினவாத போர் முரசுகள் அடங்கி, சர்வதேச ஒற்றுமைக்கான போர் முழக்கங்கள் ஓங்கட்டும்.

உலக தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள் !
இன்குலாப் ஜிந்தாபாத்!”

1 COMMENT

  1. பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி சரியான கருத்தை சொல்லியிருக்கிறது. நாடு முழுவதும் போரா வெறியை சங்கிகள் கோடி மீடியாக்கள் எழுப்பினானும் அதற்கு நாம் பலியாககூடாகது.
    வர்க்கமாக ஒன்றினைவோம் …..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here