ற்றி எரிகிறது ஈரான். ஹிஜாப் மட்டுமல்ல, மதஅடிப்படைவாதிகளின் ஆணவமும் சேர்ந்து தான் எரிந்துகொண்டிருக்கிறது. போராட்டங்களுக்கு ஈரான் புதிது அல்ல என்ற போதிலும், ஈரானிய பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது என்பது இதுவே முதல்முறை.

ஈரான் நாட்டில் பெண்கள் தலைமுடியை மறைக்கவில்லை என்றால் அடி,உதை மட்டுமல்ல கொலையும் செய்வோம் என்று 22வயது பெண்ணான மாஷா அமினியை, கொலை செய்திருக்கிறது,ஈரான் நாட்டின் கலாச்சார போலீஸ்.

மத அடிப்படைவாதமும்,பெண்களை இழிவுபடுத்தும் செயல்களும் பிரிக்கவே முடியாத இரட்டைப் பிறவிகள். சொல்லி வைத்தாற் போல் உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும்,பெண்களை ஆணாதிக்கத்தின் பிடியில் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொலை செய்யப்பட்ட மாஷா அமினி படத்துடன் போராட்டகாரர்கள்

ஆணாதிக்கத்திற்கு எதிராக, மத அடிப்படைவாதத்திற்கு எதிராக ஹிஜாபை எரித்து தங்கள் தலை முடியை வெட்டி ஈரானியப் பெண்கள் வீரம் செறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால் எங்களை சிறைவைக்காதே, இழிவு படுத்தாதே என்று போராடும் ஈரானிய பெண்களின் கோபத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈரான்.

ஈரானில், போராட்டத்தில் ஈடுபடுவது இளவயது பெண்கள்,ஆண்கள் மட்டுமல்ல, வயது முதிர்ந்த பெண்களும் தான். எனவே இதனை மேலை நாட்டு கலாச்சார சீரழிவு என்று சொல்லி கடந்து சென்று விட முடியாது.

பெண்கள் தங்களின் சுயமரியாதையை, சுதந்திர வாழ்க்கையை இரத்தம் சிந்தி,உயிர்களை பறிகொடுத்து வாங்க வேண்டி இருப்பது தான் வேதனையானது.

இருந்த போதிலும் ஜனநாயகம் இல்லாத நாட்டில், மத அடிப்படையில் வாதத்தின் பெயரால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த ஈரானியப் பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக கிளர்ந்து எழுந்து போராடி வருவது என்பது உலக நாடுகளில் உள்ள பாசிச, பிற்போக்கு, மதவெறி சக்திகளுக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு மிகப்பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.

வெல்லட்டும் ஈரானியப் பெண்களின் உரிமைக்கான போராட்டம்!

  • ஆதிரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here