பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாஜக: பாலேஷ் தன்கர் மற்றுமொரு எடுத்துக்காட்டு!

2018 அக்டோபரில் தன்கர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியதில் அவர் கொரிய பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாஜக: பாலேஷ் தன்கர் மற்றுமொரு எடுத்துக்காட்டு!
தன்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் அவரது தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ஆதரவு குழுவான ஓவர்சீஸ்  பிரெண்ட்ஸ் ஆப் பாஜகவின் ஆஸ்திரேலிய பிரிவின் நிறுவனர் பாலேஷ் தன்கர். அவன் மீது 13 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 6 போதை பொருளை வழங்கிய குற்றச்சாட்டுகள், 17 நெருக்கமான வீடியோக்களை அனுமதியின்றி பதிவு செய்த குற்றச்சாட்டுகள் மற்றும் 3 அநாகரிகமான தாக்குதல் குற்றச்சாட்டுகள் உட்பட 39 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2023ல் சிட்னி நடுவர் மன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தன்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலேஷ் தன்கர் இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது ஆனால் இது பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை பாசிச பாஜகவினர். இதுவே பிற கட்சிகளில் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்தவர்கள் இழைத்தாலும் மீடியா, சமூக ஊடகங்கள் என அனைத்திலும் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் பாஜக இந்த விவகாரத்தில் கள்ளமவுனம் சாதிக்கிறது. இந்த தன்கர் ஈடுபட்டுள்ள குற்றங்கள் எளிதில் கடந்து செல்லக் கூடியவை அல்ல.

2018 அக்டோபரில் தன்கர் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தியதில் அவர் கொரிய பெண்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் பெண்களின் பெயர்களுடன் தனித்தனி போல்டர்களில் (Folder) வரிசைப்படுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா அரசு தரப்பின் வாதப்படி தங்கர், 2017 ஆம் ஆண்டு கொரிய மொழிபெயர்ப்பாளர்களுக்கான போலி வேலை விளம்பரத்தை வெளியிட்டார். பின்னர் அவரது அடுக்குமாடி குடியிருப்பு அருகில் உள்ள ஹில்டன் ஹோட்டல் பாரில் பெண்களை சந்திப்பார் என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது. பின்னர் தனது குடியிருப்புக்கு அழைத்து வந்து பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த மது அல்லது ஐஸ்கிரீமை கொடுத்து அவர்கள் மயக்கத்தில் இருந்தபோது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ஆஸ்திரேலிய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதனை தொலைபேசியிலும் படுக்கை அறையில் இருந்த அலாரம் கடிகாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராவிலும் பதிவு செய்துள்ளான்.

2006 ஆம் ஆண்டு மாணவராக ஆஸ்திரேலியா சென்ற தன்கர்,  இந்திய ஆஸ்திரேலிய சமூகத்தில் ஒரு முக்கிய நபராக இருந்துள்ளான்.  ஆஸ்திரேலியாவின் இந்து கவுன்சிலின் செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளான்.  அவன் ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன், டொபாகோ, டொயோட்டா மற்றும் சிட்னி ரயில் உள்ளிட்ட அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளான்.

படிக்க:

🔰  பாலியல் ஜல்சா கட்சிக்கு எதிராக களத்தில் இறங்கிய இந்திய மல்யுத்த வீராங்கனைகள்!
🔰  பாலியல் ஜல்சா பார்ட்டி-(BJP) சூர்யா சேவியர்

தன்கர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் அவரது தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடியின் வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்தது. பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் அமைப்பு பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அதாவது தன்கர் கைது செய்யப்பட்ட ஆண்டிலேயே தன்கர் ராஜினாமா செய்ததாக அந்த குழு கூறியது.

இந்த வழக்கு பற்றி, தன்கருக்கு  தண்டனை அளித்த நீதிபதி மைக்கேல் கிங், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதற்கு இணையான வழக்கை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார். இது குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்பில்லாத ஐந்து இளம் பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூரமான கொள்ளையடிக்கும் நடத்தை (predatory contuct) என்று குறிப்பிட்டார்.

தன்கர் இந்த குற்றத்தை சரியான திட்டமிடலுடன் நிகழ்த்தியுள்ளான் என்பதையே விசாரணை அறிக்கை கூறியது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட விவரங்களையும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மதிப்பீடு செய்து பராமரித்து வந்துள்ளான். இவை அனைத்தும் இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியே.

தன்கருக்கு வழங்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில் பார்த்தால் பரோல் இல்லாத தண்டனை காலம் 2053 இல் முடிவடைகிறது. அவனது முழு தண்டனை முடிவடையும் போது அவனுக்கு 83 வயதாக இருக்கும்.

படிக்க:

🔰  மணிப்பூரில் தொடரும் பாலியல் வல்லுறவு படுகொலை! மோடி எங்கே?
🔰  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாலியல் வன்கொடுமை? முடிவு கட்டுவது எப்படி?

இதே குற்றத்தை சங்கி தன்கர் இந்தியாவில் செய்திருந்தால் பாசிச கும்பல் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக தேசியக் கொடி ஊர்வலம் நடத்தியிருக்கும்.கோடி மீடியாக்கள் பாதிப்புக்கு உள்ளான பெண்களை தரக்குறைவாக விமர்சித்திருக்கும். ஒருவேளை நீதித்துறை குற்றவாளிக்கு ‘தவறுதலாக’ தண்டனை வழங்கியிருந்தால் கூட தன்கரின் ‘நன்னடத்தை’ கருதி ‘இவர் மிகவும் நல்லவர்’ என பாசிச அரசு விடுதலை செய்திருக்கும். இது வெற்று ஊகமல்ல;  பாலியல் குற்றவாளி‌ குர்மித் ராம்ரஹீம் தேர்தலின் போது பரோலில் அனுமதிக்கப்படுவதும், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள்‌ விடுவிக்கப்பட்டதுமே அதற்கு சான்று. இந்தியாவில் கோவில்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பாசிச கும்பல் ஆளும் இந்தியாவின் நிலை.

இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் சங்கிகளாலும் உத்தரபிரதேசம் என்கிறது புள்ளி விவரம். தேசிய மகளிர் ஆணையத்தின் தகவல் படி கடந்த 2024 ஆம் ஆண்டு பதிவான 12,648 புகார்களில் 6492 புகார்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்தவை. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் 1,119 புகார்கள் வந்துள்ளன. மற்ற மாநிலங்களோடு  ஒப்பிட முடியாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான அதிகமான  குற்றங்கள் நிகழ்ந்த மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியை பாலியல் ஜல்சா கட்சி என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது? பிற கட்சிகளிலும் கூட குற்றவாளிகள் அங்கம் வகிக்கலாம். ஆனால், பாரதீய ஜனதா கட்சிதான் அத்தகையவர்களுக்கு அடைக்கலமாக இருந்து போற்றிப் பாதுகாத்து வருகிறது. பார்ப்பனிய சனாதன கொள்கையை ஏற்றுக் கொண்ட சங்கீகள் இந்தியாவில் மட்டுமன்றி கடல் கடந்து‌ சென்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் கொட்டத்தை அடக்க இந்தியாவில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் தூக்கியெறிப்படுவது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

  • சுவாதி
மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here