தேதி:16/03/2025

பத்திரிகை செய்தி

 

மக்கள் அதிகாரம் 2-வது மாநில அமைப்பு மாநாட்டு திருச்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது!

மாநாட்டில் புதிய பொதுக்குழு செயற்குழு மற்றும் தலைமை குழு தேர்வு செய்யப்பட்டனர்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஜனநாயக சக்திகளே! அரசியல் கட்சிகளே!

மக்கள் அதிகாரம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நூற்றுக்கணக்கான இயக்கங்கள் நடத்தி போர்குணமான அமைப்பாக தமிழக மக்களிடம் பரவலாக அறியப்பட்டுள்ளோம்.

2022 ஆம் ஆண்டு முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களையும் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். மக்கள் அதிகாரம் அமைப்பு விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பகுதி/வட்டார கிளைகள் முதல் மாவட்ட கிளைகள் வரை நிர்வாகிகள் தேர்வு செய்து மாநில அமைப்பு மாநாடு நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதும், அதனை தொடர்ந்து அரசியல் மாநாடு நடத்துவதும் வழக்கம்.

அந்த வகையில் ஜனவரி 2025 ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பகுதி,வட்டார கிளை முதல் மாவட்ட கிளை வரை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதியாக மார்ச் 16-ஆம் தேதி திருச்சியில் கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் தோழர் காளியப்பன் தலைமையில் அமைப்பு மாநாடு நடத்தப்பட்டது.

மாநாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை மூன்று ஆண்டு வேலை அறிக்கை தொகுத்து மாநாட்டு பிரதிநிதிகளுக்கு தரப்பட்டது. அதன் மீது பிரதிநிதிகள் கருத்து கூறி விவாதங்களை நடத்தினார்கள்.விவாதங்கள் அடிப்படையில் திருத்தங்களுடன் வேலை அறிக்கை அனைவராலும் ஏற்கப்பட்டது.

அதன் பிறகு மாநில மாநாட்டில் மாநில பொதுக்குழு தேர்வு செய்யப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட பொதுக் குழுவில் இருந்து மாநில செயற்குழு உறுப்பினர்களாக 31 பேரை பொதுக்குழு தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட மாநில செயற்குழுவில் இருந்து மாநில தலைமை குழு உறுப்பினர்களாக 09 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தலைமை குழுவில் இருந்து நிர்வாகிகளாக 06 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பொதுக் குழுவில் இருந்து மாநில செயற்குழு தலைமை குழு, மற்றும் நிர்வாகிகள் தேர்வை மாநில மாநாடு அங்கிகரித்து ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட தலைமை குழு உறுப்பினர்கள்:

  1. தோழர் ராஜு
  2. தோழர் செழியன்
  3. தோழர் தெய்வீகன்
  4. தோழர் மருது
  5. தோழர் பாலு
  6. தோழர் மூர்த்தி
  7. தோழர் ஜூலியஸ்
  8. தோழர் ஆனந்தராஜ்
  9. தோழர் பழனிச்சாமி

தலைமை குழுவில் இருந்து நிர்வாகிகளாக

1) பொதுச் செயலாளர் தோழர் திருச்சி செழியன்

2) இணைச் செயலாளர் தோழர் தெய்வீகன்

3 துணைச் செயலாளர் தோழர் மூர்த்தி

4) துணைச் செயலாளர் தோழர் பாலு

5) பொருளாளர் தோழர் மருது

6) அமைப்புச் செயலாளர் தோழர் பழனிச்சாமி

என தேர்வு செய்யப்பட்டது.

தோழர் ராஜு மாநாட்டின் எடுக்க பட்ட முடிவுகள், நாம் செல்ல வேண்டிய திசை குறித்தும், புதிய நிர்வாகிகள் செயல்பாடுகளையும்,தற்போதைய பாசிச அரசியல் சூழலில் மக்களிடம் நம்முடைய அரசியல் கருத்துக்களை கொண்டு சென்று மக்களை திரட்டுவதன் அவசியம் குறித்தும் பேசினார்.கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி, ஜனநாயக கூட்டரசு நிறுவ வேண்டிய முக்கியத்துவம் பற்றி முத்தாய்ப்பாக பேசினார்.

தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வழக்கறிஞர் ராஜூ 08 தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசி மாநாட்டு பிரதி நிதிகளின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில பொதுச் செயலாளர் தோழர் திருச்சி செழியன் அவர்கள் புதிய நிர்வாக குழு சார்பில் ஏற்புரை வழங்கினார். அதில், புதிதாக பொறுப்பேற்று உள்ள தலைமை குழுவிற்கு பொறுப்பு அளித்து உள்ள அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இன்றைய பாசிச சூழலில் தங்களது பொறுப்பை உணர்ந்து அமைப்பை ஏற்றுக்கொண்ட கொள்கை அடிப்படையில் வழி நடத்துவோம் என்று உறுதி அளித்தார்.

பொது செயலர் என்ற முறையில் சிவகங்கை பரமக்குடி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட அமைப்பு குழுவை நியமனம் செய்தார்.

நன்றி நவிலலுடன் மாநாடு உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் நிறைவடைந்தது.

3 COMMENTS

  1. எட்டு தீர்மானங்கள் என்ன தோழர்களே?
    அது குறித்து பதிவு ஏன் செய்யப்படவில்லை
    நீங்கள் எடுத்த முடிவுகளை வெளி அமைப்பு தோழர்கள் தெரிந்து கொள்ள கூடாத?

    • தாமதத்திற்கு வருந்துகிறோம் தோழரே… நிச்சயம் பதிவிடுகிறோம்

  2. எட்டுத் தீர்மானங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும்.‌ தோழர் தியாகு பங்கேற்பு குறித்தும் அவரது விளக்கவுரையின் குறைந்தபட்ச சாராம்சத்தையும் வெளியிட்டு இருக்க வேண்டும். மற்ற வகையில் மாநாட்டின் பிற அம்சங்கள் பாராட்டுக்குரியவை! புதிய நிர்வாகிகள், தலைமை குழு, செயற்குழு, பொதுக்குழு தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here