டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டியும், ஒன்றிய அரசு ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை கண்டித்தும் இன்று (நவம்பர் 26) இந்தியா முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி போராட்டத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தியது.
இதில் சென்னையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக நடந்த பேரணியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் அங்கம் வகிக்கும் மக்கள் அதிகாரம் அமைப்பும், தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி அனுமதி மறுத்த நிலையில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்தது.
கோரிக்கைகள் பின்வருமாறு:
(1) அனைத்து விளைபொருட்களுக்கும் C2+50% அடிப்படையில் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வழங்கிடுக !
(2) விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் “கடனிலிருந்து விடுதலை” அளித்திடுக !
(3) மின்சாரத் திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற்றிடுக !
(4) லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட அஜய் மிஸ்ரா தேனி, ஒன்றிய உள்துறை இணை அமைச்சரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்து, சட்ட நடவடிக்கை எடுத்திடுக !
(5) இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் வழங்கிடுக !
(6) “விவசாயிகள் ஓய்வூதியம்” – அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5,000 ஓய்வூதியம் வழங்கிடுக !
(7) டில்லி விவசாயிகள் போராட்டத்தின்போது விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப் பெற்றிடுக !.
(8) விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும், இழப்பீடு வழங்கிடுக !
போராட்ட களத்தில்…
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை