யிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த தோழர் ரவி, புரட்சிகர அரசியலில் மக்கள்கலை இலக்கிய கழகம் நடத்திய கருவறை நுழைவு (1993 மே1) போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். அப்போது தொடங்கிய புரட்சிகர அரசியல் பயணத்திலும், மக்கள் நலப்பணிகளிலும் சோர்வின்றி இன்றுவரை உழைத்து வருபவர். விவசாயிகள் விடுதலை முன்னணி ஊழியராக செயல்பட தொடங்கி காவிரி நீர் தமிழக உரிமைக்கான போராட்டங்கள் மற்றும் இரால்பண்ணை அழிப்பு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று பகுதி மக்கள் பிரச்சனைகள் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களில் ஊக்கமுடன் செயல்பட்டவர். ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) அறைகூவல் விடுத்த அனைத்து போராட்டங்களையும் தனது வட்டாரத்தில் முன்நின்று நடத்தியதோடு மாநில அளவிலான போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றவர். இயற்கை விவசாயத்தில் காய்கறி பயிரிட்டு எளியமுறையில் வாழும் மக்கள்சேவகர்.

இதையும் படியுங்கள்: லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!

தற்போது விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமை குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

இவையனைத்தும் உள்ளுர் கான்ஸ்டபிள் முதல் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை அறிந்த உண்மை. 29-12-2022 அன்று புதுப்பட்டினம் காவல்துறை தோழர் ரவி அவர்களை ரௌவுடி பட்டியல் பராமரிப்பிற்காக போட்டோ எடுக்க வந்துள்ளது. அவர் கத்தரி தோட்டத்தில் காய்ப்பரித்துக் கொண்டிருந்தபோது காவல்துறை போட்டோ எடுத்துச் சென்றுள்ளது.

அநீதிக்கு எதிராக போராடும் தோழர் ரவியை காவல்துறை ரௌவுடியாக பார்க்கிறது. இதுபோன்ற சில்லரைத்தனமான நடவடிக்கைகள் மூலம் தோழர் ரவியை சிறுமைபடுத்த நினைக்கும் காவல்துறை மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு இழிவை தேடிக்கொள்கிறது. இது உலகறிந்த உண்மை. உள்ளூர் “கான்ஸ்ட்டபில்” முதல் “உளவுத்துறை அதிகாரிகள்” வரை அறிந்த இந்த காவல்துறையின் அநீதியான நடவடிக்கையை மக்கள் கலை இலக்கியக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தோழர் ரவிமீது போட்டுள்ள ரௌவுடி பட்டியல் வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறது.

கோவன்
பொதுச்செயலர்
89030 05636

இராவணன்
இணைச்செயலர்
9443157641

சித்தார்த்தன்
பொருளாளர்
7598441969

மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு
30-12-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here