இஸ்லாமியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஆர்எஸ்எஸ்- சனாதன் சன்ஸ்தான் போன்ற குண்டர் படை.

பாராளுமன்றத்தின் வழியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ஆர் எஸ் எஸ்-பாஜக, மோடி கும்பல் போலீசு, ராணுவம், அதிகார வர்க்கம், நீதிமன்றம், ஊடகம் ஆகிய அனைத்து துறைகளிலும் ஊடுருவி விட்டது என்பதை நாட்டின் நடப்புகள் தெளிவாக உணர்த்துகின்றன.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் இந்திய ஒன்றிய அரசின் கொலைகார உளவு நிறுவனமான என் ஐ ஏ தனது தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ் – பாஜக பயங்கரவாத கும்பல் மதக்கலவரங்களையும், சாதிக் கலவரங்களையும் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி கொலைக் குழுக்களையும், கூலிப்படையினரையும் கொண்டு பகுத்தறிவாளர்கள், புரட்சிகர ஜனநாயக சக்திகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்ற சூழலில் சட்டபூர்வமாக என் ஐ ஏ என்ற கொலைகார நிறுவனத்தை பயன்படுத்தி இஸ்லாமியர்களின் மீது அடுத்த சுற்று தாக்குதலை துவங்கி உள்ளது.

நாட்டில் 20 கோடி பேர் பிறப்பால் இஸ்லாமிய மதத்தை (மார்க்கத்தை) தழுவியவர்களாகவும், இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். இவர்கள் யார்? இவர்கள் அனைவரும் ஒன்று, இரண்டு தலைமுறைக்கு முன்னால் பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மையிலிருந்து, சாதி-தீண்டாமை போன்ற இழிவுகளை சுமக்க விரும்பாமல் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள் தான்.

இந்து என்ற பெயரில் மிகச் சிறுபான்மையாக இருக்கும் பார்ப்பன கும்பல் இந்துக்களில் உள்ள வைசிய, சத்திரிய, சூத்திர, பஞ்சம சாதிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, இந்து மதத்திற்கு வெளியில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது தனது தாக்குதலை தொடுத்து வருகிறது.

நாக்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆர் எஸ் எஸ் எப்போதும் அனைத்து இந்துக்களின் உரிமைகளுக்காகவோ, மேன்மைக்காகவோ பாடுபட்டது கிடையாது. அது எப்போதும் பார்ப்பன மற்றும் ஒரு சில மேல் சாதிகளின் அமைப்பாக தான் நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கேடு கெட்ட கும்பல் உருவாக்க துடிக்கும் இராம ராஜ்ஜியம் என்பது கற்பனையான புராண காலத்திலும் சரி! நிகழ்காலத்திலும் சரி! பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு எதிரானது என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்த நாட்டின் மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்தான் இந்துக்களுக்கு எதிரி என்பதைப் போல பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு கணிசமான அளவு வெற்றியும் பெற்றுள்ளது ஆர்எஸ்எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.

இன்று இஸ்லாமியர்கள் மீது தொடங்கியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதல்கள் அடுத்தடுத்து கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பழங்குடிகள் என்ற அனைவரின் மீதும் வரிசையாக பாயக் காத்திருக்கிறது. இதுதான் பாசிசத்தின் பயங்கரவாத முகம். சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு கல்லறை! போராடுபவர்களின் மீது அடக்குமுறை என்பதுதான் அதன் தாரக மந்திரம்.

அவர்கள் இஸ்லாமியர்களை தாக்கினார்கள்! நாங்கள் அமைதியாக இருந்தோம்! ஏனென்றால் நான் இஸ்லாமியன் இல்லை.

அவர்கள் கிறிஸ்தவர்களை தாக்கினார்கள்! அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம்! ஏனென்றால் நான் கிறிஸ்தவன் இல்லை.

அவர்கள் சீக்கியர்களை தாக்கினார்கள்! அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம்! ஏனென்றால் நான் சீக்கியன் இல்லை.

அவர்கள் தலித்துகளை நர வேட்டையாடினார்கள்! அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம்! ஏனென்றால் நான் தலித் இல்லை.

இப்போது என்னை வேட்டையாட என் வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்! இப்போது நான் கூச்சலிடுகிறேன். கதறுகிறேன்! ஆனால் எனக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை என்று ஜெர்மன் பாதிரியார் நியோ முல்லர் கதறியதைப் போல நாம் கதற கூடாது இன்றே விழித்தெழுவோம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவோம்.

அனைத்து சிறுபான்மை மதத்தை சார்ந்த  மக்களும் தங்கள் வழிபாட்டையும், தாங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றி வாழ்வதற்கும் உத்திரவாதம் அளிக்கின்ற வகையில் உரிய ஜனநாயக சமூகத்தை உருவாக்குவோம்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here