யிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக 72 வயது இஸ்லாமியரை இளைஞர்கள் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கியவர்கள் சம்பிரதாயத்திற்கு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தனது மகள் வீட்டிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த 72 வயது முதியவர் ஹாஜி அஷ்ரப் உடன் ஐந்து இளைஞர்களுக்கு சீட் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அவரை எந்த வகையில் பழி வாங்கலாம் என்பதற்கு அவரது மத அடையாளமான தாடியை வைத்து மாட்டுக்கறி கொண்டு செல்கிறாயா என்று தகராறு செய்துள்ளது அந்த கும்பல்.  அவர் எவ்வளவோ மறுத்தும் வயது முதிர்வையும் கணக்கில் கொள்ளாமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து தைரியமாக பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பல ஊடகங்கள் மாட்டுக்கறி எடுத்துச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் தாக்கியதாக செய்திகளை பதிவு செய்துள்ளனர். அதாவது தாக்கிய கிரிமினல் கும்பலை நியாயப்படுத்துகின்றன ஊடகங்கள். அவர் மாட்டுக் கறியை எடுத்துச் சென்றாலும் அந்த முதியவரை தாக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது? மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறைக்கு புகார் அளித்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் தாக்கியது எதனால்?.

இந்தியாவில் காவி பாசிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்த பிறகு யார் என்ன சாப்பிட வேண்டும்? குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதை முடிவு செய்தார்கள். 18 மாநிலங்களில் சட்டமாகவும் இயற்றினார்கள். பசு இந்துக்களின் புனித விலங்கு என்பதால் வெட்டக் கூடாதாம். ஆனால் மாட்டுக்காக மனிதர்களை வெட்டலாம் என்கிறது பாசிஸ்டுகளின் ‘காவி சட்டம்’.

இதுதான் அந்த இளைஞர்கள் தாக்குவதற்கான தைரியத்தை கொடுக்கிறது. கொலை செய்திருந்தால் கூட அந்த இளைஞர்கள் பெயிலில் வந்திருப்பார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்பி சீட் கொடுக்கப்பட்டிருக்கலாம். நுபூர் ஷர்மா அப்படித்தான் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பிரபலமானார். கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் அவரது ‘சிறப்பு தகுதி’யின் அடிப்படையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்பி சீட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை தாக்குதல் நடத்திய இளைஞர்களும் இப்படி நினைத்திருக்கலாமே. அந்த ரயிலில் காவல்துறை பணிக்கான தேர்வுக்கு செல்லும் பொழுது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் காவல்துறை பணிக்கு இந்த தகுதி போதாதா என்ன?

2015 ஆம் ஆண்டு உபி மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வீட்டில் வைத்திருந்ததாக முதியவர் அக்லக் சங்பரிவார் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதன் பின்பு மாட்டை விற்பனைக்கு ஏற்றி சென்றவர்கள் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினாலே காரணத்தினாலேயே ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் உலாவும் சங்கிகளால் கொடூரமாக  பலர் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

படிக்க:

 ஒடிசா, தெலுங்கானாவில் கலவரத்தை தொடங்கியுள்ள பசுக் காவலர்கள்!
 ஹரியானா படுகொலை: பிணந்தின்னி கழுகுகளிடம் சிக்கியிருக்கும் நாடு!

இப்படியான மாட்டின் பெயரால் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதும் கொடூரமாக தாக்கப்படுவதும் காவிக் கும்பலின் ஆட்சியில் அன்றாட நிகழ்வாக மாறி உள்ளது. இதற்கு நாம் பழகிவிட்டோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

“பசு பாதுகாப்பிற்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இதனை கும்பல் படுகொலை என்று கூறுவது சரியல்ல”

கடந்த வாரம் ஹரியானாவில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவரை  பசு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து கொன்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹரியானா பாஜக முதல்வர் நயாப்சிங் சைனி “பசு பாதுகாப்பிற்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இதனை கும்பல் படுகொலை என்று கூறுவது சரியல்ல” என ஒரு மாநிலத்தின் முதல்வரே கூறியிருப்பது மாட்டிற்காக மனிதர்களை படுகொலை செய்யும் சங்கிகளுக்கு உற்சாகத்தை தானே கொடுக்கும். அதனால் தான் தைரியமாக  கொலையும் செய்கிறார்கள்.

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவில் தான் மாட்டுக்காக மனிதர்கள் கொல்லப்படும் அவல நிலையும் தொடர்கிறது. மாட்டினை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்களை வேட்டையாடுகிறது காவி பாசிச கும்பல். மாட்டின் மீது அக்கறை இருந்திருந்தால் இந்தியாவை மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராக எப்படி அனுமதித்திருப்பார்கள். ஆகையால் அவர்களின் தற்போதைய இலக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே. இதுவரை மாட்டுக்காக கொல்லப்பட்டவர்களும் தாக்கப்பட்டவர்களும் இஸ்லாமியர்களும் அடுத்தபடியாக தலித்துகளும் தான்.

இதே கும்பல் தமிழ்நாட்டிலும் தலை எடுப்பதை செய்திகளில் பார்த்திருப்போம். இங்கு இந்து முஸ்லிம் கலவரத்தை உருவாக்க நினைக்கும் காவி பாசிச கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மாட்டிற்காக கும்பல் படுகொலைகளும், தாக்குதல்களும் தடுக்கப்பட வேண்டுமானால் எதிர்கட்சிகள் மக்களை ஒன்றிணைத்து காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட வேண்டும். வெற்று அறிக்கைகளும், கண்டனமும் பாசிச பாஜகவை துளியும் அசைக்காது.

  • மாரிமுத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here