பிரான்ஸ் நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரத்தை காண Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) என்ற இந்துமத குழுவினர் வரும்பொழுது அவர்களின் கண்ணில் தெரியும்படி பெண் ஊழியர்கள் யாரும் நடமாடக்கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர்; அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களுக்கு பதிலாக அந்த இடங்களில் ஆண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த கோபுரத்தைப் பராமரிக்கும் பணியில் உள்ள நிறுவனம் இதற்கான உத்தரவை பிறப்பித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த ஊழியர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈஃபில் கோபுரம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் படிக்க: 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்து மேலாதிக்கத்தால் பீதியடைந்துள்ளன
இந்த விவரம் பிரான்ஸ் நாடு முழுக்க பரவி நாட்டு மக்களிடையேயும் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் இடையேயும் பெரும் அதிர்வாலையை ஏற்படுத்தி விட்டது. பிரான்ஸ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், பாரிஸ் நகர மேயர் உட்பட பல்வேறு அமைப்பினர் ‘இப்படி ஆண் – பெண்ணிடையே பாகுபாடு காட்டுவது மனிதத் தன்மைக்கு எதிரானது; பிரான்ஸ் நாட்டின் ஜனநாயக சட்டங்களுக்கு எதிரானது’ என்று கடுமையாக கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஈஃபில் கோபுரத்தை நிர்வகிக்கும் Société d’Exploitation de la Tour Eiffel (SETE) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘2026 செப்டம்பர் 5 அன்று BAPS என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் தனிப்பட்ட முறையில் ஈஃபில் கோபுரத்தைப் பார்வையிடும் போது பெண் ஊழியர்களுடனான தொடர்பை குறைக்க வேண்டும்’ என்று BAPS என்ற இந்து அமைப்பின் தரப்பில் வைக்கப்பட்ட “இந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக் கூடாது” என்றும் கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த நாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆண் பெண் சமத்துவம் மேலோங்கி உள்ள பிரான்ஸ் நாட்டிலேயே இந்து மத வெறியர்கள் தங்களின் பெண் அடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்த முடிந்ததற்கு என்ன காரணம்? பிரதமர் மோடி Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) என்ற இந்த இந்து மத அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதுதான் இதற்குக் காரணம்.
மோடி, இந்த அமைப்பின் ஆன்மீகத் தலைவரான பரமுக் சுவாமி (Pramukh Swami) அவர்களை 1981 ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். அப்போதிருந்து இப்போது வரைக்கும் மோடிக்கும் இந்த மடத்திற்குமான தொடர்பு நீடித்த நிலையான ஒன்றாக இருக்கிறது.
மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவதற்கு என்று பிரமுக் சுவாமி கொடுத்த பேனாவில் தான் 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் ராஜ்காட்டில் தொகுதியில் போட்டியிட்டதிலிருந்து கடைசியாக நாடாளுமன்றத் தேர்தலின் போது வாரணாசி தொகுதியில் போட்டியிட்டது வரை அனைத்து தேர்தல் விண்ணப்பங்களிலும் மோடி கையொப்பம் இட்டுள்ளார். இந்த விவரங்களை மோடியே பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு அபுதாபியில் இதே BAPS ஆல் கட்டப்பட்ட கோயில் திறப்பு விழாவில் மோடி பேசும் பொழுது, குஜராத்தின் முதல்வராக இருந்த பொழுதும் தற்போது இந்திய பிரதமராக உள்ள பொழுதும் பரமுக் சுவாமிகளிடம் இருந்து வழிகாட்டுதல்களை பெற்று வந்ததாக கூறியுள்ளார். இதிலிருந்து மோடிக்கும் இந்த மடத்திற்கும் இடையிலான தொடர்பு எந்த அளவு நெருக்கமானது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த BAPS இந்து மத நிறுவனம் பிரான்ஸ் -ல் கோயிலைக் கட்டி திறந்து உள்ளது குறித்து “ BAPS பல்வேறு நாடுகளில் கோவில்களை கட்டு திறந்து உள்ளது மூலமாக முன்னோர்களின் சிந்தனைகளையும் மனித மாண்புகளையும் கைமாற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று பாசிச மோடிபுகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்து மதத்தில் உள்ள பெண் அடிமைத்தனத்தை பிரான்ஸிற்கு BAPS கொண்டு சென்றதன் மூலம் மனித மாண்புகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் தலைவர்களும் ஜனநாயக சக்திகளும் இப்பொழுது கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நம் நாட்டிற்கு திரும்புவோம். இந்து மதம் பெண்களையும் இழிவாகத்தான் கருதுகிறது – நடத்துகிறது என்பது இந்து மத நூல்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அப்பாவி இந்துக்கள் தான் அதை புரிந்து கொள்வதில்லை.
உலகிற்கே முன்னோடியாக சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை முன்வத்த, ஒப்பிட்ட அளவில் ஆண் – பெண் சமத்துவம் மேலோங்கி உள்ள பிரான்ஸ் நாட்டிலேயே பெண்களை இப்படி சங்கிகளால் இழிவுபடுத்த முடிகிறது எனில் இந்தியா போன்ற ஆணாதிக்கம் மேலோங்கி உள்ள நாட்டில் ஆர் எஸ் எஸ் பாஜக பாசிஸ்டுகளால் மனுதர்மத்தின் படியான சட்டத்தை – சமூக நடைமுறையை எதிர்காலத்தில் கொண்டு வந்து விட முடியும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
இந்து மதவெறி பாசிஸ்டுகளை நாட்டில் தொடர்ந்து வளர விட்டால், தொடர்ந்து ஆட்சியில் இருக்க விட்டால் இது எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும். இதை தடுக்க புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைவரும் குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஓர் அணியில் திரண்டு செயல்பட வேண்டும்.
குமரன்







நல்ல அம்பலப்படுத்தல் கட்டுரை. எவ்வளவு ஒற்றுமை பாருங்களேன்!
பிரான்ஸ் நாட்டில் – ஆம், ஆண் பெண் சமத்துவம் நிலவக்கூடிய நாட்டிலேயே பெண் அடிமை போற்றும் இந்துத்துவ கொள்கையை நிறுவத்துடிக்கும் பாப்ஸ் நிறுவனத்தின் தலைமைகர்த்தா ‘பிரமுக் சாமி’ கும்பல் தமது கொடு வாலை நீட்ட முடிந்திருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய கொடுமை இது.
இந்தக் கேடுகெட்ட ‘பிரமுக் சாமி’ அன்பளிப்பாக கொடுத்த பேனாவைக் கொண்டுதான் 2002 ராஜ்கோட் சட்டமன்றத் தேர்தல் முதல் 2024 பாராளுமன்ற தேர்தல் வரை ‘நம்ம’ பாசிச மோடி, தான் வேடமுனு தாக்கல் செய்கின்ற பொழுது கையொப்பமிட்டு வருகிறார் என்பது வினோதமான புதிய செய்தி. மதவாதிகள் அதுவும் குறிப்பாக இந்தியாவின் இந்துத்துவ பாசிஸ்டுகள் இப்படியாக பல்வேறு வகைகளிலும் பிற்போக்குத்தனமாக பின்பற்றும் போக்குப் புதிதாக நடைபெறுவதில்லை. இக்கட்டுரையின் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் போய் தனது பிரதமர் பதவியைப பயன்படுத்தி எந்த அளவிற்கு அந்நாட்டையும், அந்நாட்டு மக்களையும் கெடுக்கிறார்கள் என்பதைப் புரிய முடிகிறது.
சரி, இந்துத்துவ மோடி தான் இப்படி என்றால் தமிழ்நாட்டுக்கு வருவோம்!
கிறிஸ்தவ மதத்தினனான நடிகர் ஜோசப் விஜய் அவரது ஆஸ்தான இந்து மத ஜோதிடரான வெற்றிவேல் என்ற ரிக்கி ராதன் பண்டிட்-டின் யோசனை களின்படியே அனைத்து காரியங்களையும் ஆற்றி வருகிறாராம். அதனால் தான் பதவி ஏற்றவுடன் அந்த ஜோசியருக்கு மே மாதம் ஐஏஎஸ் அதிகாரிக்கு இணையான பதவி வழங்கப்பட்டதும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பலையால்
வாபஸ் பெறப்பட்டதும் மிக அண்மை வரலாறு. தற்போது தமிழ்நாடு சட்டமன்ற கட்டிடத்தை மாற்றுவதற்கான முன்னேற்பாடும் அந்த ஜோசியரின் வழிகாட்டுதல்தானாம். இப்போது விஜய்யின் லண்டன் பயணத்திலும் கூட அந்தப் ‘பிற்போக்குத்தனமான ஜோசியரின்’ வழிகாட்டுதல் நிரம்பி வழிகின்றனவாம். ஆக மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் இப்படி காவிக் கொள்கைகள் பல்வேறு ரூபங்களில் தலைவிரித்தாடி மக்களை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர் இந்தக் காவிப் பாசிஸ்டுஸ்டுகள்! இப்படிப்பட்ட கேவலத்தை பெரியார் அண்ணாவைப் போற்றும் விஜய் தமிழ்நாட்டிலும்
அரங்கேற்றும் சூழலில்தான் அவருக்கு முற்போக்கு ஒளிவட்டம் பாய்ச்சுகிறார்கள் அவரது ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து உரத்துக் கூவும்
முற்போக்காளர்கள்! அனைத்தையும் மக்கள் முன் எடுத்துச் சென்று காவிக் கும்பலை அம்பலப்படுத்துவோம்! கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்!
அடுத்து, எனது கண்ணிற்கே கட்டுரையில் எழுத்துப் பிழைகள் சற்று கூடுதலாகத் தென்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் கவனம் கொண்டு பிழைகளைத் திருத்திட முற்படுக.
எனது பின்னூட்ட பதிவிலும் கூட ஓரிரு எழுத்துப் பிழைகள் உள்ளன.