காராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா. மும்பையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பல கட்சிகள் மாறி செயல்படுகின்ற நபர் என்பவரை அம்பலப்படுத்தும் வகையில் முதலில் பாஜகவில் இருந்தார் பின்பு சிவசேனைக்கு சென்றார் பின்பு சிவசேனையில் இருந்து வெளியேறினார் என்று இந்தியில் உள்ள பகடி பாடலான ‘ ஹம் ஹோங்கே கங்கால் ஏக் தின், மன் மே ஹை அந்த்விஷ்வாஸ், தேஷ் கா சத்யனாஷ் ‘ பாடலை வெளியிட்டார்

இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை கண்டு ஆத்திரம் அடைந்த ஷிண்டே கும்பல் இனியும் நாங்கள் பொறுக்க மாட்டோம் இதுபோன்று அவமானப்படுத்துவதையும் இழிவு படுத்துவதையும் தாங்கிக்கொள்ள மாட்டோம். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உள்ளது என்றெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர் பேசிய நிகழ்ச்சி நடைபெற்ற ஹேபிடட் ஸ்டுடியோவின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இடித்துத் தள்ளினர். மேலும், அதன் எஞ்சிய பகுதிகள் நேற்று இடிக்கப்பட்டன.

தமிழகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி பிறர் அனைவருக்கும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்கீ கும்பல் வட இந்தியாவில் கருத்துரிமைக்கு கல்லறை கட்டப்படுவது பற்றி எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிப்பதில்லை என்பது மட்டும் இன்றி கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனது கட்சிக்காரர்களை விமர்சிப்பதை சகிக்க முடியாமல் இது சரியான பதிலடி தான் என்று நியாயப்படுத்தி கொண்டுள்ளனர்.

தனது ஸ்டுடியோ தாக்கப்பட்டது குறித்தும் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் சிறிதும் அச்சப்படாத குணால் காம்ரா எதிர்வினையாற்றி, அவர் எந்தவொரு சட்ட நடவடிக்கைக்கும் காவல்துறை மற்றும் நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் என்பதையும் தெளிவுபடுத்தினார். “நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் சொன்னது, திரு. அஜித் பவார் (முன்னாள் துணை முதல்வர்) திரு. ஏக்நாத் ஷிண்டே (துணை முதல்வர்) பற்றி சொன்னதுதான். இந்த கூட்டத்திற்கு நான் பயப்படவில்லை.

பாசிச பயங்கரவாத ஆட்சியில் தன்னை எதிர்த்து கருத்து சொல்பவர்கள் யாரையும் விட்டு வைக்க ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலும் அதன் துணை அமைப்புகளான சிவசேனா போன்ற அமைப்புகளும் தயாராக இல்லை என்பதைத்தான் மேற்கண்ட நிகழ்ச்சி நமக்கு நிரூபிக்கின்றது.

படிக்க:

♣  அரசியல் செயல்பாட்டாளர்கள் மீதான பாசிஸ்டுகளின் தொடர் தாக்குதல்கள்!

♣  நியூஸ் க்ளிக் மீது பாசிச பாஜகவின் தாக்குதல்! கல்லறை கட்டப்படும் பத்திரிக்கை சுதந்திரம்!

அரசியல் ரீதியிலான விமர்சனங்கள் வரும்போதும் சரி அல்லது இதுபோன்று கலை இலக்கிய வடிவங்களில் விமர்சனங்கள் வரும்போதும் சரி அதனை எதிர்கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படை தயாராக இல்லை மாறாக கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டுகின்ற வகையில் சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டுவது தாக்குதல் நடத்துவது கூலிப்படை கொண்டு கொலை செய்வது என்பது ஒரு போக்காகவே மாறி உள்ளது.

பிரபல அறிவு ஜீவிகளான தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் வரிசையில் இந்தியாவில் பல முன்னணி எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகளுக்கு ஆர் எஸ் எஸ் பாஜக தனது குண்டர் படை மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் எதிர்த்து நின்று முறியடிப்பதற்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் உடன் ஒரே கருத்து கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

நாமும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து களத்தில் நிற்போம். அடக்குமுறைகளையும் மிரட்டல்களையும் எதிர்த்து பதிலடி கொடுக்க தயாராவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here