தில் அர்ஜுனன் போர்வீரன் கிருஷ்ணன் (AN EXPERT IN ART OF WAR) தளபதி,போர் கலையின் சித்தாந்த குரு.அது மட்டுமல்ல “அர்ஜுன் தேர் ஓட்டி”;கிருஷ்ண பரமாத்துமா தளபதி;போர் நடைபெற்று முடிப்பதற்குள் “மனித குலத்திற்கான வாழ்வியல்-பண்பாட்டு நெறி முறைகள்” குறித்த அத்தனையும் டெலிப்ராம்டரின் வழியாக சொல்லி முடித்துவிடுவார் கிருஷ்ண பரமாத்துமா.இந்த டெலிபிராம்டர் தான் பிரதமர் மோடியின் அவர்களின் கையிலிருப்பது.இந்த உபதேசங்களே “கீதை கற்பிக்கும் குரு-சிஷ்ய உறவின் எடுத்துக்காட்டு”களின் இலக்கணம் ஆகும்.இது,அப்படியே மோடியின் அரசியல் வரலாறும் பின்னணியும் இதைப்போன்றது தான் என்று சொன்னால் அதுவும் மிகையல்ல!. தற்பொழுது,ஓர் வரலாற்று பின்னோட்டம்(FLASH BACK).இப்போது வருடம் 1992.கரசேர்வர்களின் அணிவகுப்பு தொடங்கிவிட்டது.குமரியில் தொடங்கியது கரசேவர்களின் ரதயாத்திரை.அண்ணாமலை தற்போது நடத்தும் மோடி சர்க்காரின் மணிப்பூரின் பாவத்தைக் கழுவும் பாதி யாத்திரை அல்ல இது. அது முடியும் இடம், அயோத்தி.தேரை ஓட்டும் அர்ஷுனன், மோடி;தளபதியோ, போர்க்கலையின் குரு,அத்வானி.!! நிற்க.தமிழ் திரைப்படம் இரத்தக்கண்ணீரை,சற்றே கண்கள் முன்நிறுத்துங்கள். “பொருத்தம் எவ்வளவு திவ்வியமா… இருக்கு பாத்தேளா!!!???”.

(6) அபிஷ்டு!! தேரோட்டி “அந்தணன்” இல்லடா!!??.அவன் வந்தனன்.அதாவது வர்ணாசிரம தர்மத்தின் கீழிருந்து வந்த சூத்திரன்.அதான்டா இந்துத்துவா.!! அப்படின்னா? பத்தியிலக்கியம் காலம் தொட்டு உருவெடுத்த சமூக முரண்பாடு.அது தொடங்கிவைத்த சமூதாய மாற்றம்.பார்பனர்கள் அல்லாதவர்களும்கூட பதிகம் பாடி வள்ளாலாரைப் போன்று;நந்தனைப் போன்று, ஜோதியில் கலந்துவிட்டதாக கதையை கட்டிவிடலாம். தசாப்தங்கள் கடந்த சாதிய-சனாதன சமூக அமைப்பில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஏற்ப்பட்ட வங்க மறுமலர்ச்சியோடு உருப்பெற்றது “இந்துயிசம்”.பின்னர் பாசிச பின்னனியில் வடிவமெடுத்ததுதான் தற்போதைய “இந்துத்துவா”.இதுவே வரலாற்று வழியில்,”இந்துத்துவாவின் கோட்பாடு-நடைமுறையின் ஒருங்கிணைப்பு(THE UNITY OF THEORY AND PRACTICE OF HINDUTUVA)” ஆகும்.அதனால்,இங்கு வர்ணாசிரமத்தின் கீழிருந்து வந்த வந்தணன் தேரோட்டி ஆனது.அது எப்படி என ஓர் கேள்வி எழுவது இயல்பு.அதுதான் “இந்துத்துவா”.ஒரு வந்தணன் அல்ல.ஆயிரமாயிரம் வந்தணன்கள்,சாதிய-சனாதனத்தின் கோபுரத்தில் கோடான கோடி வந்தணங்கள்.சாதிய-சனாதனத்தில் நேந்து-கலந்து போகும் வாழ்க்கை முறை. ஒரிஜினல் அந்தணர்களின் பெரும்கதையாடலுக்கு பலியாகி,பாசிச சச்திகளாக மாற்றப்பட்டுவரும் இந்துத்துவா மதவாத அரசியல் சக்திகள். இந்து மதம் அரசியல் கலக்கப்படாதது வரை ஆன்மீகம்.அது தனிநபர் சுதந்திரம்.மத நம்பிக்கையின் வழிபாடு.

அரசியலில் இரண்டற கலந்த பின்னர் அதன் பெயர்தான் இந்துத்துவா.மணிப்பூரைப் போன்று,ஹரியானாவைப் போன்று,உபி-யை போன்று வன்முறையின் கொலை வெறியாட்டத்திற்கு பெயர்தான் பாசிசம்.இப்படி,வன்மமும் வக்கிரமும் இயல்பிலேயேக் கொண்ட சாதிய-சனாதனத்தின் ஆணிவேரையே இந்துத்துவ பாசிசத்தின் அடிப்படையாக மாறிவிட்டது.சாரத்தில் இது தொடக்கத்திலேயே இது கொண்டிருக்கும் சமூகரீதியான வன்மம் பிந்தைய அவதாரத்தின் வெளிப்பாடாக “பாசிசத் (CHARACTERS OF FACISIM) தன்மையை உள்ளடக்கி இருக்கிறது.வன்மும் வக்கிரமும் இதன் பிரிக்க முடியாத ஒரே நாணயத்தின் இருபக்கங்களாக இரண்டறக் கலந்த ஓர் விசித்திரமான சமூகக் கட்டமைப்பு.இது உருவாகியது தற்செயலானது அல்ல.இந்திய துணைக்கண்ட பரப்பில் நிலவும் “சாதிய-சனாதன பொருள் உற்பத்திமுறையே(CASTE RIDEN SOCIO-ECOMOMIC PRODUCTION)” இதன் இயல்பான சமூகப் பொருளாதார அடித்தளமும்கூட.

(7) இந்தியாவில் சாதியமே,பொருள் உற்பத்தியோடு இணைத்துதான்.பெருவாரியான உழைக்கும் மக்கள் அனைவரும் வருணாசிரம தர்மத்தின் அடிமட்டத்தில் உள்ளமக்களே.சுருங்கச் சொன்னால் தலித்துகள் மற்றும் பழங்குடிகளே இதில் பெருவாரியான உழைக்கும் மக்கள் திரள்.சனாதனம் என்றால் சாதியம் மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறையின் கூடிய அதிகாரமும்.தீண்டாமை;தள்ளிவைப்பு;பாலியல் பலவந்தம் என அனைத்தும் அடங்கியதுதான்.பாலியல் வன்மத்தின் மற்றொரு வடிவம் ஆணாதிக்கம்.இதன் குரூர வடிவத்தினை மணிப்பூர் நிலவரம் எடுத்துக்காட்டியுள்ளது.எனவே,சாதிய-சனாதனத்தினை தனது சிந்தாந்தமாக கொண்டுள்ள இந்துத்துவா, அரசியல் தளத்தில் எத்தகையது?இதற்கு அரசியல் தலைமையேற்றறுள்ள மோடி எத்தகைய நபரத்துவம் உடையவர்? என்பதினை பார்ப்பது அவசியம்.

(8) சாரம்சத்தில்,சாதிய-சனாதனம் என்பது கடைந்தெடுத்த மத பிற்போக்குதனம்.இதர மதநம்பிக்கைகளில் கூட “ஓர் சமத்தும் தன்மை(THE QUALITY OF EQUALITY)” அங்கரிக்கப்படுகிறது.நடைமுறையில் “சமத்துவம்” உணரப்படுகிறது.ஆனால் சனாதனமோ சமத்துவத்தை மறுத்தலித்து நடைமுறையில் சாதியத்தை தனது உள்ளார்ந்த பண்பாக நிறுவிக்கொள்கிறது.இது, உடனடியாக ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஓர் சமூக விரோத;மக்கள் விரோத சித்தாந்தம் மற்றும் நடைமுறை.பல ஆயிரம் தசாப்தங்கள் நீடித்து நிலவும் சமூக அவலம்.பல அடுக்கு சாதிய கட்டுமானங்கள்.வன்மமே,இதன் அடித்தளம்.வக்கிரமும் ஆணாதிக்கமுமே இதன் உடனடி இயக்கம்.வக்கிரம் பொதுவானது,இதன் செயலாக்கம் முழுவதும் வன்மம் நிறைந்துதான்.

முகத்தில் சிறுநீரை முகத்தில் பாய்ச்சுதல்;சிறுநீரை குடிக்க வைத்தல்;மனித மலத்தினை சுமர்க்க வைத்தல்;பாலியல் பலாத்காரம்;பாதத்தை கழுவுதல்;அதனை தீர்த்தம் என கருதுதல் அதனையே அருந்துதல்;பசுவின் சிறுநீரை குடித்தல்;அதில் முகங்கழுவுதல்; சாணத்தினை உடலில் பூசிக்கொள்ளுதல்;தீண்டக்கூடாதது-நெருங்க கூடாதது-பார்க்க கூடாதது எனும் தீண்டாமையின் முப்பெரும் வடிவங்கள்;இதில்,”பார்க்க கூடாதது”போன்ற வடிவங்கள் வழக்கொழிந்து விட்டன; பெண்களை மாதாத்திர ரத்தப்போக்கின் போது தள்ளி வைத்தல்;அவர்களை அச்சமயத்தில் “தீட்டு”என அம்மா,அக்கா,தங்கை என யாராக இருந்தாலும் அவர்களை தொடாதிருத்தல்;இந்த கூத்துதான் சபரிமலை சர்ச்சையும் கூட;இப்படி இதன் செயலாக்கத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.இப்படி,வன்மும்-வக்கிரமும்;ஆணாதிக்கமுமே மும்மூர்த்திகளால் ஆளும் அண்ட சராசரம் முழுவதும் ஆளுகைக்கு உட்பட்ட, சாதிய சனாதன தர்மத்தின் அடிப்படை.தற்போது உள்ள உலக அரசியலமைப்பு சட்டங்களே இதனை கண்டு, அரண்டு ஓடிவிடும் அளவிற்கு தெய்வீக நெறிகள்(RULES OF DIVINE CREATIONS) இது!.

இதையும் படியுங்கள்: இனி… மணிப்பூர் மக்களிடம் கற்போம்!

(9) இந்த உயர்வான,உன்னதமான சமயமே!இந்துச்சமயம்.இதன் பெயரை உருவாக்கியவர்கள் கூட,இச்சமயத்தின் வேத-இதிகாச-உபநிச-ங்களின் வழிவந்த ஆசான்கள் அல்ல;யோகிகள் அல்ல;ரிஷிகள் அல்ல;சாதுக்கள் அல்ல.மாறாக ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர்களே.ஏனெனில்,இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றுப் போக்கினை பின்னோக்கி பார்வையை செலுத்தி, தங்களது காலனிய ஆட்சியினை நிறுவ காலனிய நிர்வாகம் ஊக்குவித்த வரலாற்றுத் துறையே சாதிய-சனாதனத்திற்கு “இந்து;இந்துயிசம்” போன்ற பெயர்களை சூட்டியது.அதுவரை வானுயர்ந்த தஞ்சை பெரிய கோவில்கூட புதர்கள் மண்டிகிடந்த கருங்கல்லால் ஆன பழைய காலத்தின் கட்டுமானமாகவே மக்களிடையே கருத்தப்பட்டது.

சிந்துசமவெளி அகழ்வாய்வு வரலாற்றை காலநிர்ணயப்படுத்தும் கதிரியக்க-அரை ஆயுள் முறையிலான கார்பன்-காலக்(RADIO-ACTIVE CORBON DATING METHOD) கணக்கீட்டு வழியாக தற்போதைய இந்திய துணைக்கண்ட வரலாறு நிறுவப்பட்டது.இன்றும்கூட ,இதே அணுகு முறையில் தான் வரலாறு “கீழடி” வரை தொடர்கிறது.இதில் சர்சைக்குறிய வின்சன்ட் ஸ்மித் எனும் ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர்;மில்;எல்பில்டன்;வில்லியம் ஜோன் என தொடங்கி பிற்காலத்தில் டி.டி.கோசாம்பி வழியாக தற்பொழுது டி.என்.ஜா.,மற்றும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்., ரொமிலா தாப்பர் வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆரிய வருகை;திராவிட மற்றும் பழங்குடிகளின் தொல் வரலாறு நிறுப்படுகிறது.சமீபத்தில் கூட,தீன் தயாள் உபாத்தியா குறித்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் “அதிமேதாவி” ரவி,”ஆரிய-திராவிட புனைவு” ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என பேசிய பேச்சை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. ரவி,தெரிந்து கெள்ளவேண்டிய ஒன்று…”இந்து” என்பது; “இந்தியா”என்பவைகள் கூட ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர்தான்! ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர்களே “இந்திய வரலாறு”என தனியான துறையை நிறுவியவர்கள்.

குறிப்பாக இந்திய சமூகத்தினுள் நுழைந்த மேற்கத்திய உலகத்தின் குறுக்கீடுதான்,இந்திய துணைக் கண்டத்திற்கு நவீன கால அரசியல்-சமூகப்-பொருளாதார வடிவத்தின் மீதான பார்வையை, புரிதலை வழங்கியது.அதுவரை இந்த துணைக் கண்டப் பரப்பின் அருவருக்கதக்க கோரமுகம், சாதிய-சனாதனத்தின் பெயரிலேயே இனம் காணப்பட்டு வந்தது.”இந்து”;”இந்தியா”போன்ற ஓர் பெயரலவிலான சமூக நிறுவனமயமாக்கல் நடந்தேறியதே,பிரிடிஷ்-இந்திய பேரரசில்தான்.பழங்குடிகள் வழிப்பட்ட பலதெய்வ வழிபாட்டினையே தனக்கானதாக அதாவது, “ராமாயணம்;மகாபாரதம் போன்ற பார்ப்பனிய பேரிலக்கியங்கள்(BRAMINICAL EPICS) வழியான இடைசொறுகள் மூலம் சாதிய-சனாதனம் உருக்கொண்டது.இதுவே,ஆங்கிலேயே “ஏக-இந்தியா”எனும் சமூக-அரசியல்-பொருளாதார கட்டுமானத்தோடு உருப்பெற்ற நவீன கால அரசு அதிகாரத்துடன் இரண்டறக் கலந்து, இன்று “இந்து-இந்தி-இந்தியா”வாக அமைந்திருக்கும் அடித்தளத்தில் எழுர்ந்து நிற்கும் பாசிச,”இந்துத்துவா”.

(10)இந்திய துணைகண்டப் பரப்பில் தற்போது மேலோங்கி உள்ள “இந்துத்துவா”வை தனியாக பரிசலிக்க வேண்டிய ஒன்று.மற்றபடி இந்துயிசத்தில் புனிதமும் இல்லை;புடலங்காயும் இல்லை! ஆனால், இந்துத்துவாவில் ஏராளம் உண்டு! ஏனெனில்,இது ஓர் பாசிச சித்தாந்தம்.ஹிட்லருடைய
நாஸி சித்தாந்தம் பெற்றடுத்த கள்ளக் குழந்தை.சாதிய-சனாதனத்தினை அரசியல்-சமூக-பொருளாதரத்தில் தளத்தில் சாதிய-சனாதன நடைமுறையே அரசியல் அதிகாரத்தோடு மீட்டுருவாக்கம் செய்ய நோக்கமாகக் கொண்டது.இதற்காகவே,டாக்டர்.,மூஞ்சே போன்ற சனானதனிகள் சென்ற நூற்றாண்டின் முதற்கால் பகுதியின் வாக்கில் இத்தாலிக்கு சென்றானர்.

இத்தாலி பாசிசக் கட்சியின் தலைவன்,பாசிசத்தின் குருநாதன் முசோலினியை சந்தித்தானர்.இத்தாலியில் செயல்பட்டு வந்த கருஞ்சட்டையினர் எனும் அழைக்கப்படும் துணை ராணுவ பயிற்சி பட்டாளத்தின் செயல்பாடுகள்;கருத்துப்பட்டறைகள் ஆகியனவைகளைக் கொண்ட பாசிச நிறுவனங்களின் கருத்தியல்;செயல்பாடுளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு இந்தியா திரும்பினார்கள்.இதன் அக்கம் பக்கமாகவே, உடனடியாக பிரிடிஷ்-இந்திய அரசியல் அரங்கில் RSS உருவாகுவதற்கான பின்னனியை கொடுத்தது.அதற்கு முன்பும் “இந்து மகா சபா” போன்ற சாதிய-சனாதன வழிப்பட்ட அரசியல் முன்னோடிகள் இருந்து வந்தனர் என்பதையும் கணக்கில் கொள்ளக் வேண்டும்.

(11) 1925ல் RSS உருவாக்கப்பட்டது.ஹெக்கவர்;கோல்வாக்கர்;சாவர்க்கர் ஆகிய மூவரும் இந்த பாசிச அமைப்பிற்கு முன்னனி சக்திகளாக இருந்தனர்.இந்துமதத்தின் வெகுஜன அரசியல் தழுவலுக்கு இவர்கள் சூட்டிய பெயர்,”இந்துத்துவா”.”இந்து மதத்தினை அரசியலாக்குங்கள்! அரசியலை ராணுவ மயமாக்குங்கள்”என்பதே, நாஸி மற்றும் பாசிஸ்ட்டுகளின் சித்தாந்தம் மற்றும் நடைமுறையை இவர்கள் உள்வாங்கி கொண்டதன் சாரம்.வர்ணாசிரம வேறுபாடுகளை பூசி மொழுகுவதற்காக இவர்கள் அளிக்கும் வியாக்கானம் என்பது வேறு.அதாவது “இந்துத்துவா என்பது மதம் அல்ல,அது ஓர் வாழ்க்கை முறை”இந்த சாந்தமான,சமாதானமான விளக்கம் நடைமுறையில் முரண்படுவதுதான் சாதிய-சனாதனத்தின் விசித்திரம்.அதுதான் மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மோடி தலையில் சொரிந்த கொள்ளிக்கட்டை. பற்றி எரியும் கலவரத் தீ யை மூட்டியதே இந்த கொள்ளிக்கட்டைதான்.

தேர்தல் வாக்குறுதி என்பது மைதேயி இனமக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பது. இதுதான் இந்துத்துவ பாசிசத்தின் பொருந்தா தன்மை.சானாதாமும் சாதியமும் பிரிக்க இயலாத இணைக்கோடுகள்.அசமத்துவம்; தீண்டாமை; வன்முறை;ஆணாதிக்கம்;வக்கிரம் இவைகளே இதன் உட்கூறுகள்.இவைகளை ஒதுக்கி பார்க்கும், இந்து மதம் அர்த்தமற்றது.இவைகளை நீக்கம் செய்த இந்துமதம் தனது இருத்தலை இழந்துவிடும்.சாதியையும் சனாதனத்தையும் தவிர இந்து;இந்துத்துவா ஆகியனவைகள் புதிய சரக்குகள்.ஒன்று,அதாவது “இந்து” என்பதை காலனிய ஆட்சியாளர்களும் மற்றொன்றான,”இந்துத்துவா”காலனிய ஆட்சியாளர்களின் அடிவருடிகளால் உற்பத்தி செய்யப்பட்டவைகள்.இந்தியா எனும் கருத்தாக்கம் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர் என மறுதலிக்கின்றனர்.சமீபத்தில் கூட,இதே கருத்தையே தமிழக ஆளுநர் “அதிமேதாவி” ரவி “இந்தியா”எனும் பெயர் ஆங்கிலேயர் சூட்டிய பெயர் என கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி” அரசியல் அமைப்புச் சட்டத்தில் பதவிபிரமாணம் செய்துக்கொண்டு”இந்து;இந்தியா;சனாதனம்;அஞ்ஞானம் ஆகிய அரசியலமைப்புக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளி அரசியலில் பிரச்சாரம் செய்யும்,இந்துத்துவ சக்திகளுக்கான ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.ஆனால்,இந்துத்துவ வாதிகள் இந்து”வையோ இந்துத்துவாவையோ கைவிடுவதற்கோ அல்லது மறுதலிப்பதற்கோ தயாரில்லை.இது சாதிய-சனாதன நாடோடிகளுக்கு ஆங்கிலேயே காலனிய ஆட்சியாளர்கள் செய்து தந்த வசதியான கைமாறாகும்.

(12) அதனால்தான் இந்துத்துவ சக்திகள் காலனிய ஆட்சியாளர்களுக்கு கடைசிகாலம் வரை காவடிதூக்கியதன் பின்னனி.இவர்கள் துரோக வரலாற்றின் கடைசி அத்தியாயமே சாவர்கர்.காந்தியின் கொலையில் குற்றம்சாட்டப்பெற்று வழக்கு விசாரனையை சந்தித்தவர் என்ற இழுக்கை கூட தார்மீகமாக ஆதரித்து சாவர்கரை இன்றுவரை போற்றுகிற இயக்கமான சங்கபரிவார அரசியல் கூடாரத்தில் பயிற்சி பெற்றவர் மோடி.சிறுவயதிலிருந்தே சாதிய-சனாதன அமைப்பில் உள்வாங்கப்பட்டு அதன் நச்சு சித்தாந்தமான வருர்ணாசிரம கருத்தியல் நடைமுறையின் வார்ப்படமாக காட்சியளிக்கிறார்.அவரது ஆளுமையின் அனைத்து அம்சங்களும் சாதிய-வர்ணாசிரமத்தினை சுற்றியே சுழல்வதைக் காணலாம்.இந்து மதவழியில் சந்நியாசம் என்பது ஆன்மீகம்.ஆனால் இவர்,இந்துத்துவ வழிப்பட்ட சந்நியாசி,அதாவது இந்த அமைப்பிற்காகவே தன் வாழ்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்.

உலகத்தின் மிகவும் நீண்டகாலம் செயல்பட்டுவரும் பாசிச அமைப்பான RSSன் “பிரச்சாரகர்க்”;பின்னர் அரசியல்வாதி;தற்போது நாட்டின் தலைமை அமைச்சர் என தனது வாழ்கையின் ஆதி முதல் அந்தம் வரை சாதிய-சனாதன கருத்தியல்-நடைமுறைக்கு தன்னை அர்பணித்துக் கொண்ட அரசியல் துறவி.சில மாறுப்பட்ட அம்சங்களில்,வளர்ப்பு மற்றும் ஆளுமையில் சில நபரத்துவங்களை பாசிசத்தின் வரலாறு கண்டிருக்கிறது.உதாரணமாக,ஹிட்லர்.

(13) என்னதான், இந்துத்துவாவின் சித்தாந்ததிற்கு “ஆரிய இன மேன்மை” எனும் கருத்தாக்கம் அடிதளமிட்டாளும் “நிர்வர்தி மார்க்கம்”;”பிரவர்தி மார்க்கம் எனும் மார்க்கங்கள் சாதிய-சனாதனத்திற்கு மட்டுமே உரியது.கல்யாணம் காட்சி இல்லாமலேயே துறவறம் மேற்கொள்வது நிர்வர்தி மார்க்கம்.எல்லா காட்சிகளையும் கண்டு களித்தப்பின்னர்,எஞ்சிய வாழ்கையில் துறவரம்,இதுவே பிரவர்தி மார்க்கம்.நம்ம தலைவர்! எந்த மார்க்கமும் மேற்கொள்ளாத “இரண்டாங் கெட்ட மார்க்கம்” கொண்டவர்.அதுதான் “இந்துத்துவ மார்க்கம்”.அதாவது,வாழ்க்கை முறை(WAY OF LIFE) எனும் வியாக்கானம்.பிறப்பிலிருந்து இறப்பு வரை சாதிதான் ஒருவனது வாழ்க்கை முறை.அதிலும்,இந்த வாழ்க்கை முறையில் மோடி அவர்களே முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.

வித-வித-வண்ண-வண்ண ஆடைகள்;சிகை ஆலங்காரங்கள்;மேக்கப்புகள்;கேமரா மேன்கள்;நடிப்புகள்;கும்புடுகள்;டெலிப் பிராம்ட்டர்கள்;மனம் போன போக்கில் தாறுமாறான உரைவீச்சுகள்;கல்வி-புல மான்களைப் போன்ற முன்வைப்புகள்(PRESENTATIONS);அறிவுஜீவிகளைப் போன்ற பிம்பம்கள்;விஞ்ஞானிகள் புடை சூழந்த அரங்கில் அஞ்ஞான கருத்துகளை அள்ளி வீசும் முரட்டு தைரியம்;பொருளாதார வல்லுனர்களே மலைத்துபோகக்கூடிய தொலைநோக்கு திட்டங்கள்;வந்த உடனேயே திட்ட கமிஷனை இழுத்து மூடியது;ரயில்வே பட்ஜெட்யை ஒழித்துக்கட்டியது;ஒரே இரவில் பணமதிப்பை ரத்து செய்த பொருளாதார சிந்தனையாளர்;மீண்டு இரண்டாயிரம் ரூபாய் உயர் மதிப்பு கரன்சியை காலிசெய்த நிதிச்செலவாணி வல்லுநர்;இவரிடம் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்களே மாரடிக்க முடியாமல் வந்த இடத்திற்கே திரும்பி விட்டார்;தொடர் வானொலி உரைகள்;மனதே இல்லாத மனிதனின் மனதின் குரல்கள்;படித்த படிப்பினைக்கூட வெளி உலகுக்கு அறிவிக்க தயங்குவது;

இந்த கூத்தின் உட்சம் என்பது,மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளும் உத்திகளை வழங்குதல்; நாடாளுமன்றத்தினை டெம்புள் ஆஃப் டெமாக்கரசி(ஜனநாயகத்தின் கோயில்) என வருணனை;நாடாளுமன்ற மண்டபத்திலேயே அங்க பிரவேசம் செய்தல்;பண்டாரம்(இங்கு “பண்டாரம்”எனும் சாதியினரை இங்கு குறிப்பிடவில்லை) பரதேசிகளை டெம்புல் ஆஃப் டெமாகரசிற்குள் இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி அவர்களது காலில் விழுந்து வணங்குதல்;விளையாட்டில் பதக்கம் பெற்ற உடன் “இந்தியாவின் மகள்” என்று அழைப்பது, அவர் பாலியல் பலவந்திற்கு உட்பட்டவுடன்,அது பற்றி வாயை திறக்காமால் பாராளுமன்ற உறுப்பினரை பாதுகாப்பது;செங்கோல் என்ற பெயரில் பழைய இரும்பை எடுத்துக்கொண்டு சுற்றி திரிதல்; நாடு நாடாய் சுற்றி திரிந்து வேடிக்கை பார்த்தல்;சுழற்சி முறையில் வரும் சில ஆண்டுகளுக்கான ஐநா-வின் பாதுகாப்பு சபை பொறுப்பு இந்தியாவுக்கு வந்தவுடன் இது இந்தியாவிற்கான பெருமை என தற்குறி தனமான தம்பட்டமடிப்பது;இந்த தற்குறி தனத்தினை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல்;

உலகின் எண்ணூறு கோடி மக்கள் தொகையில் நூற்று நாற்பத்து ஏழு கோடி மக்களை கொண்ட இந்திய ஜனத்தொகையில் ஒவ்வொருவரும் விடிந்து எழுந்தவுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரஷ்-பேஸ்ட் உட்பட அனைத்து தேவைகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் நப்பர் ஒன் உலகச் சந்தையாக உள்ள இந்தியாவினை “வல்லரசு”என பெருமை பேசி மக்களை ஏமாளிகளாக்குவது;மத சார்பற்ற இந்தியாவில் தலைமையை அமைச்சரே புரோகிதராக வேசம் கட்டி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பூமி, பூஜை,புனஸ்காரங்கள் ஆகியவற்றை நாட்டின் பிரதமர் என்பதனை சிந்தனை அளவிலேயே துறந்து தானே பூஜை காரியங்களை முன்நின்று நடத்துவது.

தேர்தல் வந்தால் மக்களை பிரித்தாள,வாக்கு வங்கியினை கவர “ஜெய் ஸ்ரீ ராம்” என காட்டுகத்தாக கந்துவது;பட்டையடித்துக் கொண்டு பொதுவெளியில் கோயில் கோயிலாக திரிவது;காசியில் கங்கை ஆற்றில் வீழ்ந்து தலையை மூழ்குவது;இப்படி அனைத்து விதமான தன்மையில் மோடியின் நபரத்துவம்(PERSONALITY OF MODI)என்பது கடைந்தெடுத்த மதவாத;அஞ்ஞான;முற்போக்கு தன்மையற்ற;மூடநம்பிக்கை உடைய; சாதிய-சனாதனத்தை பின்பற்றும் பிற்போக்கான பார்வை உடைய; நபரை நாடு பிரதமராக கொண்டிருப்பது,உலகின் மிகப்பெரும் மக்கள் தொகையின உடைய,அதேசமயம் உலக மக்கள் தொகையில் மிகப்பெரும் அளவில் இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவிற்கு பொறுத்தமானதாகவும் ஏற்புடையதாகவும் இல்லை.

(14) பண்டைய கிரேக்க தத்துவத்தில் ஜனநாயகம் குறித்து, ப்ளாட்டோவின் ஓர் கருத்து உண்டு; “ஜனநாயகம் என்பது அறிவின் மீது பெரும்பான்மை செலுத்தும் ஆட்சி”.சில சமயங்களில் ஜனநாயகத்தில் சமூகரீதியான விபத்தும் இதுபோன்று ஏற்படுவதுண்டு.அது எதேச்சதிகாரத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.ஆனால், அரசியலில் பாசிசத்தின் அரங்கேற்றம் என்பது விபத்தல்ல.அது திட்டவட்டமான சமூக அரசியல் பொருளாதார அரங்கத்தில் உருவெடுக்கும் விதிசார்ந்த இயக்கமும் கூட.இந்திய சமூக அரங்கம் என்பது சாதிய-சனாதானம் அமைப்பைக் கொண்ட ஜனநாயத் தன்மையற்ற அதிகார மையமே.இது எளிதில் பாசிசத்திற்கு செல்லும் பாதையை தடையில்லாமல் பெற்றிருக்கிறது.இதுவே இந்துயிசம், “இந்துத்துவா” பாசிசமாக உருமாற்றம்(METAMORPHOSIS OF HINDUISM INTO HINDUTUVA)அடைந்ததிருப்பதன் பின்னனியாகும்.தற்போதையச் சூழலில்,RSS-பிஜேபி தலைமையில் மோடி-யின் ஒன்றிய அரசாங்கம் இந்துத்துவ பாசிசத்தினை விரைவுபடுத்தும் சர்வதேசிய சூழலில் நவதாராளவாத- உலகமயமாக்கல்!! கார்ப்பரேட்டுகளின் கையில் வைத்திருக்கப்படும் ஓர்,”அரசியல் முகவர்(POLITICAL AGENT)” அதாவது,கை நீட்டும் இடங்களில் எல்லாம் கோப்புகளில் கையெழுத்திடும் ஒருவரே,நாட்டின் பிரதமர்..தாமோதர தாஸ் நரேந்திர மோடி.இவரது பணி,அதிகாரத்தினை சாதிய-சனாதன வழியில் மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்காக பெரும்திரள் முன்பு முன்நிலை படுத்தப்படும் பகட்டான நபர்(POPULIST FIGURE) மட்டுமே!

தொடரும்…..

முந்தைய பதிவு: மோடியின் சொல்லும் செயலும்; நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, வெங்கி-ராமகிருஷ்ணனின் நமட்டு சிரிப்பு – பாகம் 1

நன்றி..

இவண்
சாதி ஒழிப்பு இயக்கம்–(CAM)
CASTE ANNIHILATION MOVEMENT
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here