
மகாராஷ்டிரா மாநிலத்தில் மல்வான் நகரில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதை இரசித்து ஒரு பழைய இரும்பு கடை நடத்தும் இஸ்லாமியர் பாகிஸ்தான் வாழ்க என கோசமிட்டு விட்டார் என்பதாக கூறி அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அவருடன் போட்டியை இரசித்த மற்றொரு வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு உள்ளூர் ஆளுங்கட்சி சிவசேனா எம்.எல். ஏ நகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுக்க நகராட்சி நிர்வாகம் அந்த இஸ்லாமியரின் பழைய இரும்பு கடையை புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுபோன்ற புல்டோசர் செயலுக்கு தடை விதித்துள்ளது.
பாஜ.க. ஆட்சியாளர்கள் சட்டத்தையும், உச்சநீதிமன்றம் தீர்ப்பையும் எவ்வளவு அலட்சியமாக மதிக்கின்றது என்பதன் வெளிப்பாடு இது. சனநாயக சமூகத்தில் விளையாட்டை தங்களின் வன்முறை அரசியலுக்கு பயன்படுத்தி வெளிப்படையாக குற்றத்தை சட்டப்பூர்வமாக செய்கிறது.
கடந்த காலங்களில் இது போன்ற கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் விளையாட்டை ரசித்தார்கள் என காஷ்மீரில் மாணவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உண்மையில் மத வெறுப்பு அரசியல் செய்ய விளையாட்டு ஒரு கருவி. எவரும் ரசிக்ககூடாத அல்லது கருத்து சொல்ல கூடாது விளையாட்டு எனில் ஏன் அவர்கள் விளையாட வேண்டும்?அதை ஏன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவேண்டும்? உண்மையில் அந்த இஸ்லாமியர் பாகிஸ்தானை வாழ்த்தினாரா என தெரியவில்லை. ஆனால் அவ்வாறு வாழ்த்தினால் கூட அது ஒரு விளையாட்டு ரசிகனின் உணர்வு என்பதை தாண்டி அதில் தேச வெறுப்பு,மத வெறுப்பு என அர்த்தம் கொள்ளமுடியாது. அந்த கிரிக்கெட் ரசிகனுக்கு நமது அரசியல் அமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகள் அவனது கருத்தை பாதுகாக்கின்றன. ஆனால் கூடுதல் வேடிக்கை மல்வான் வழக்குரைஞர்கள் சங்கம் இந்த கைதானவர்கள் ஆதரவாக பிணை மனு போடுவதில்லை என முடிவெடுத்து உள்ளனர்.
படிக்க: உ.பி.யில் மீண்டும் புல்டோசர்: கழிப்பறை காகிதம் ஆகிவிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு !
நமது நாட்டை இந்துத்துவா மதவாதிகள் எங்கோ இழுத்து செல்கிறார்கள். சகிப்பின்மை, வெறுப்பு, வன்முறை, சட்ட மீறல்கள் இவர்கள் முகமாக உள்ளது. இந்த அநீதியை எதிர்ப்பது மட்டுமே நாட்டிற்கு நல்லது.