
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்களை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு துணை சென்று துரோகம் இழைத்தது அதிமுக. வக்ஃப் மசோதாவை நிறைவேற்ற துணை சென்று துரோகம் இழைத்துள்ளது சந்திரபாபு நாயுடு- நிதிஷ் குமார் கும்பல்.
மாநிலங்களவையிலும் அவர்களுக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி மசோதாவை நிறைவேற்றப் போகிறது பாசிச பாஜக.
நாடாளுமன்றத்தில் இம்மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை (?) அமைச்சர் கிரண் ரிஜஜூ ‘உலகத்திலேயே வக்ஃப் வாரியத்திற்கு இவ்வளவு பெரும் சொத்து இந்தியாவில் தான் குவிந்து கிடக்கிறது. அதில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. எனவே, இதனைக் கண்காணிக்கவும், சரிப் படுத்தவும், ஏழை எளிய இஸ்லாமியர்கள் பயன் பெறவுமே இம்மசோதா கொண்டுவரப்படுகிறது…’ என்று பேசினார்.
‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பது போல, ‘ஆட்டுக்கு ஓநாய் பாதுகாவலன்’ என்பது போல ரீல் ரீலாக கதை அளக்கிறது காவிக் கூட்டம்.
குஜராத்தில் 2002ல் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததோடு இன்று வரையிலும் அந்தப் ‘பணியை’ தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இந்த பாசிச காவி கூட்டம் ஏழை இஸ்லாமியர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்து மக்களவையில் பேசுகிறார்கள்.
குஜராத்தில் கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை சூலாயுதம் கொண்டு கிழித்து வெளியில் எடுத்து பிய்த்துப் போட்டு கொலை செய்தவர்கள் வக்பு வாரியத்தில் இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக பேசுவதாக நாடகமாடுகிறார்கள்..
வக்ஃபு வாரியச்சட்டத் திருத்தம் – ஆர் எஸ் எஸ் -ன் இந்து ராஷ்டிர அஜெண்டாவை நிறைவேற்றுகிறது பாசிச பாஜக மோடி அரசு! என்ன செய்யப் போகிறோம்?
இந்தியாவில் பாதுகாப்புத்துறை ரயில்வே துறை இவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலங்களை சொத்துக்களை கொண்டிருப்பது வக்ஃப் வாரியம் தான்; இந்தியாவில் எந்த நிலத்தைப் பார்த்தும் வக்ஃப் வாரியம் உரிமை கோரினால் அது வக்ஃப் சொத்தாகிவிடும்; கோயில் நிலங்கள், விவசாய நிலங்கள் எனப் பலவற்றையும் இந்துக்களிடம் இருந்து அபகரிக்க வக்ஃப் வாரியம் திட்டமிடுகிறது என எண்ணற்ற பொய்களை, வதந்திகளைப் பரப்பி வக்ஃப் வாரியம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து வருகிறது சங்கி கும்பல்.
வக்ஃப் சொத்துக்கள் என்பது இஸ்லாமியர்கள் பொது பயன்பாட்டிற்காக எழுதி கொடுத்த சொத்துக்களாகும். இவற்றின் பயன்பாடு என்பது பெரும்பாலும் பள்ளிவாசல், தர்கா, கபரீஸ்தான் எனும் உடல் அடக்கம் செய்யும் இடம் என்றே உள்ளது. நகரப் பகுதிகளில் கடைகள், கிராமப் புறங்களில் விவசாய நிலங்களும் உள்ளது. இவற்றின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தே சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 1954 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் 1958-ம் உருவாக்கம் செய்யப்பட்டன.
1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமை அடைந்த தன்மையில், அந்த சட்ட விதிகளின் அடிப்படையில் இதுவரை நிர்வகிக்கப்படுகின்றன. இதற்கு “வக்ஃப் சட்டம்-1995” – என வரையறுக்கப்பட்டுள்ளது.
காலம் தோறும் இஸ்லாமிய எதிர்ப்பு! அதுவே அரசியல்! அதுவே ஆன்மீகம்! காவிக் கூட்டத்தின் கயவாளித்தனம்!
ஆர் எஸ் எஸ் -பாஜக பாசிச காவிக் கூட்டத்தைப் பொருத்தமட்டில் இந்திய சுதந்திரப் போரில் அவர்களின் மூதாதையர்கள் அளித்திட்ட எண்ணற்ற துரோகங்களைச் செய்ததை – பிரிட்டிஷ்காரனுக்கு வால் பிடித்து வாழ்ந்த பிழைப்புவாதத்தை – எண்ணற்ற மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொடுத்ததை… வரலாற்றியல் ரீதியாக புத்திக் கூர்மை யுடையோர் அறிந்தே வைத்துள்ளனர்.
படிக்க:
♠ வக்ஃப் சொத்துக்களை ஆட்டையப்போடத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்!
♠ வக்ஃப் சட்டத் திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பாசிச பாஜகவின் தாக்குதல்
இதற்கு நேர் மாறாக சாதிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து இந்திய தேசிய விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு முன்னணிப் படையினராய் செயல்பட்டதில் இஸ்லாமியர்களுடைய பங்கும் மற்ற எவரையும் விட பின்தங்கியது இல்லை. வடக்கே அஹமத் பேகம் முதல் தெற்கே ஹைதர்அலி – திப்பு சுல்தான் வரை அத் தியாகிகளின் வீரம் இன்று நினைத்தாலும் நெஞ்சை உலுக்குகிறது.
அந்த வரலாற்றை எல்லாம் மறைத்து விட்டு, எண்ணற்ற சாதி அடுக்குகளை- ஏற்றத்தாழ்வுகளை- உருவாக்கிய சனாதனப் பார்ப்பனியம், அனைத்து சாதி மக்களையும் சதி வேலைகள் மூலமாக ‘இந்து’க்களாக மாற்றி வைத்துக் கொண்டு அருதிப் பெரும்பான்மை மக்கள் ‘இந்து’க்களே என்ற போதை ஊட்டி பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களை அடியாரட்களாக பயன்படுத்தி, மசூதிகளை இடிப்பது, தேவாலயங்களை இடிப்பது, சிறுபான்மையினரின் வீடுகளை இடிப்பது, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை கொலைகள் பல செய்வது, எங்கு பார்த்தாலும் திட்டமிட்டே சாதி- மதக் கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது… என்று அனைத்தையும் சனாதனப் பார்ப்பனியத்தின் நலன் காக்கும் பொருட்டு பாசிச ஆர் எஸ் எஸ் – பாஜக காவிக் கும்பல் இந்திய நாட்டில் அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறது.
அதன் நீட்சி தான் ஒரே நாடு- ஒரே தேர்தல்- ஒரே மொழி- ஒரே கலாச்சாரம்- ஒரே கல்விக் கொள்கை- என்ற ஒற்றைச் சர்வாதிகாரத்தை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் வெறிகொண்டு அலைகிறது இந்த பாசிசக் காவிக் கூட்டம்!
அதன் ஒரு பகுதி தான் தற்போது பாராளுமன்றத்தில் சட்ட திருத்தத்தின் மூலம் வக்ஃப் வாரிய சொத்துக்களை அபகரிக்க எத்தனித்திருக் கிறது இந்த பாசிசக் காவி(லி)ப்படை!
இச்சூழலில், வக்ஃப் வாரியத்தின் நிர்வாக செயல் திறனை மேம்படுத்துவதாககா கூறிக்கொண்டு ‘வக்ஃப் திருத்த மசோதா -2024’ என்ற பெயரிலான இஸ்லாமியர்களின் மதரீதியான உடைமைகளை-உரிமைகளை பறிக்கும் வகையிலான மசோதாவை ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை (?) அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் 02-04-2025-ல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியுள்ளது.
இதற்கு முன்பாக இது தொடர்பாக கடனுக்காக உருவாக்கிய பாராளுமன்ற கூட்டுக் குழுவில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த திருத்தங்களை ஓரம் கட்டி விட்டு, இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக கூட்டுக்குழுவில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டு கூட்டுக்குழுவின் திருத்தங்களுடன் நிறைவேற்றுவது என்ற பெயரில் முற்றிலும் ஜனநாயக விரோதமாக செயல்பட்டுள்ளது ஒன்றிய மோடி அரசு.
படிக்க:
வக்ஃப் கவுன்சிலிலும், மாநில அளவிலான வக்ஃப் வாரியத்திலும் முஸ்லிமல்லாத இரண்டு பிரதிநிதிகள் (இந்துக்கள்) இருக்க வேண்டும் என்ற புதிய கேவலமான விதிமுறையை கொண்டு வந்திருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு. வக்ஃப் சட்டம் தொடர்பான பிரச்சனகளைத் தீர்ப்பதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு, அவர் முஸ்லிமாக இல்லை என்றாலும் இறுதி முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்படியாக பாஜகவினர் முன்வைத்த சுமார் 40 திருத்தங்கள் இந்த மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வக்ஃப் சொத்துக்களை கண்காணிக்க 2009 ஆம் ஆண்டு வம்சி (VAMSI) என்ற போர்ட்டலை உருவாக்கி இருந்தது. கடந்த 2024 வரை நாடு முழுவதும் 8,72,324 அசையா சொத்துக்களும், 16,713 அசையும் சொத்துக்களும் வக்ஃப் சொத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 97% சொத்துக்கள் 15 மாநிலங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2,32,457 சொத்துக்கள் மதிப்படப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இவை முறையான வழி முறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வக்ஃப் வாரியங்களின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ‘இவற்றை பாதுகாக்கிறோம்’ – எனக் கூறிக்கொண்டு ஒன்றிய அரசு இந்த மசோதாவை எந்த வகையிலும் (காஷ்மீரில் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்தது போல) நிறைவேற்றியே தீருவது என்று நாடக அரங்கேற்றம் செய்துள்ளது.
ஆர் எஸ் எஸ் உருவாகி 100 ஆண்டு நிறை வுரும் இத்தருணத்தில் அவர்களது அஜெண்டா வேறு! நம்முடைய அஜெண்டா என்னவாக இருக்க வேண்டும்?
பல்வேறு விதமான அரசியல் கட்சிகள் இது தொடர்பாக தமது கடும் எதிர்ப்பினை காட்டியுள்ளன. “மக்கள் அதிகாரம்” 01-04-2025 தமிழ்நாடு முழுவதும் பாஜக அரசின் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரங்களும் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது தொடர்பாக மசோதாவிற்கு எதிர்ப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் பல பாஜக எதிர்ப்பு நிலை உடைய மாநிலங்களின் நிலையும் இதுவே. ஆனாலும் ஆர்எஸ்எஸ், வழி ஒன்றைக் காட்டி விட்டால் அதனை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி கொடுக்க வேண்டிய அடியாள் தான் பாஜக மற்றும் சங்பரிவார்க் கூட்டம். அப்படியானால் இந்த பாசிச சக்திகளான ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ காவிக் கூட்டத்தைக் காலி செய்ய மேம்போக்கான பார்வையின்றி ஸ்தூலமான திட்டம் வகுக்கப்பட்டு ஐக்கிய முன்னணி கட்டி மக்களை அணிதிரட்டி வீதிகளில் இறங்கி மீண்டும் ஒரு சுதந்திரப் போர் என்ற அளவிற்கு சமர் புரியாமல் இவர்களை வீழ்த்த முடியாது!
- அந்த வகையில் நாட்டின் பிரத்தியேக நிலைமையை கணக்கிற் கொண்டு கார்ப்பரேட்- காவி சங்பரிவார் கூட்டத்தை வீழ்த்திட களம் காண்போம்!
- இந்தக் காவி கூட்டம் நிறைவேற்றி யுள்ள அனைத்து மக்கள் விரோதச் சட்டங்களையும் தீயிட்டு பொசுக்குவோம்!
- அதற்கு ஏதுவாக கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
- ஜனநாயக கூட்டரசை நிறுவுவோம்!
- எழில்மாறன்.