ஒன்றிய அரசே!
கீழடி: அமர்நாத் ராமகிருஷ்ணா ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! ஆய்வுப் பணிகளை முடக்காதே!
தமிழக அரசே! கீழடி அறிக்கையை வெளியிட சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்று!
தொல்லியல் ஆய்வுக்கு ரூ. 1 கோடி போதாது; 100 கோடி ஒதுக்கு! ஆய்வை தொடர்ந்து நடத்து!
வரலாற்றை மீட்டெடுக்க மதுரையில் ஆர்ப்பாட்டம்!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
கீழடி தொல்லியல் அகழாய்வுத் தரவுகள், சாதி-சமய வேறுபாடற்ற தமிழர்களின் தொன்மை யான நாகரிகத்தை உலகுக்கு உரக்க உணர்த்திக் கொண்டிருக்கின்றன. ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற பகுதிகளில் ’ஈமக்காடுகளில்’ செய்யப்பட்ட அகழாய்வே நம்மை 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுக்கு அழைத்துச் செல்கிறது என்றால், அம்மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் முழுமையான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழர்களே உலகின் உயரிய நாகரிகத்தின் முன்னோடிகள் என்பது ஐயமின்றி உறுதி செய்யப்படும்.
மறைக்கப்படும் உண்மைகளும்! சனாதன அச்சமும்!
சிந்து சமவெளி நாகரிகத்தை ’சரஸ்வதி நதி நாகரிகம்’ என்று பெயர் மாற்றி, தங்களுக்கானதாகக் கட்டமைக்க முயலும் சனாதனப் போலி வரலாற்று புனைவுகளுக்குக் “கீழடி” முற்றுப்புள்ளி வைத்துள்eது. இதனாலேயே, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் தயாரித்த 982 பக்கங்கள் கொண்ட கீழடி அகழாய்வு பற்றிய முழு அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய பாஜக அரசு முடக்கி வைத்துள்ளது. வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழர் நாகரிகம் பொறிக்கப்படுவதைத் தடுக்க நினைக்கின்றன பார்ப்பன-சனாதனச் சக்திகள். எனவே, ஒன்றிய அரசுக்கு எதிராக நாம் கடுமையாகப் போராடி கீழடி அறிக்கையை உடனடியாக வெளியிடச் செய்ய வேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவையாகும்.
படிக்க:
♦ கீழடி ஆய்வு முடிவுகளை குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கும் தொல்லியல் துறையின் உள்ளடிகள்!
♦ கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.
நிதி ஒதுக்கீடு : தவெக அரசின் போதாமை!
திராவிடத் தமிழர் நாகரிகத்தை உலகறியச் செய்யும் வகையில் கீழடி மட்டுமின்றி பட்டணமருதூர், ஆதிச்சநல்லூர், கரிவலம்வந்தநல்லூர், சிவகளை (மலையடிப்பட்டி) மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும், பராமரிப்புப் பணிகளும் தொடர வேண்டும். ஆனால், தவெக அரசோ சனாதனக் கோட்பாடுகளின் வழியிலேயே செயல்படுகிறது. தமிழர் மரபையும் வரலாற்றையும் மீட்கப் பெரும் நிதி தேவைப்படும் சூழலில், தொல்லியல் துறைக்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே தவெக அரசு ஒதுக்கியிருப்பது வரலாற்றைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
வரலாற்றை மீட்டெடுக்க மதுரையில் ஆர்ப்பாட்டம்!
ஆதிகாலத் தமிழர் சமூகம் சாதியோ, மதமோ, ஏற்றத்தாழ்வுகளோ இன்றி ஒரு சமத்துவக் கூட்டு வாழ்க்கையை வாழ்ந்துள்ளது என்பதைத்தான் அகழாய்வுகள் நிரூபிக்கின்றன. புதிய சமத்துவச் சமுதாயத்தைப் படைக்கத் துடிக்கும் நமக்கு இந்தத் தொன்மை நாகரிகமே நம்பிக்கை ஒளிவிளக்காகும்.
நமது கோரிக்கைகள்:?
பாஜக அரசு முடக்கி வைத்துள்e 982 பக்க கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்!
தவெக அரசு தொல்லியல் துறைக்குக் குறைந்தபட்சம் ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!
சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஈமக்காடுகள் மட்டுமின்றி, மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளிலும் விரிவான அகழாய்வு நடத்தப்பட வேண்டும்!
கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் மையங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்!
அலைபேசிகளில் ’ரீல்ஸ்’ மோகத்தில் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் தமிழ் சமூகத்தின் செவிகளில் ‘சங்கே முழங்கு!‘ என முழங்கிட, இந்தத் தமிழர் வரலாற்று மீட்புப் போராட்டத்தில் அனைவரும் ஓரணியில் திரள்வோம்!
இடம்: ஒத்தக்கடை நரசிம்மன் சாலை மதுரை.
நாள்: 18-09-2026 மாலை 4 மணி
ஆர்ப்பாட்டத் தலைமை
தோழர். கோவன் மாநிலச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.
ஆர்ப்பாட்ட உரை :
தோழர். எழில்மாறன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க. சென்னை.
தோழர். செங்கொடி,மாவட்ட பொருளாளர், ம.க.இ.க. மதுரை.
தோழர். செல்வராஜ், மா.நில பொருளாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.
தோழர். நாகராசன், மாநில செயற்குழு உறுப்பினர்,மக்கள் அதிகாரம் தமிழ்நாடு, புதுச்சேரி.
தோழர். நாகை. திருவள்ளுவன்,மாநிலத் தலைவர், தமிழ் புலிகள் கட்சி.
தோழர். மீ.த.பாண்டியன்,தலைவர், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்.
தோழர். பசும்பொன். பாண்டியன்,பொதுச் செயலாளர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்.
முனைவர் ஆ. விருமாண்டி (தமிழ்நாட்டில் 70 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதாரமான மரபணு கொண்டவர்.)
தோழர். வாஞ்சிநாதன்,மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
நன்றி உரை:
தோழர். உழவன் மாரி, மாவட்டச் செயலாளர், ம.க.இ.க.மதுரை.
அனைவரும் வாரீர்! ஆர்ப்பாட்டம் வெற்றி பெற நிதி தாரீர்!







நிதி தருவதற்கான தொலைபேசி எண்ணையும் QRCode ஐயும் பதிவிடலாம்.