கலை இலக்கியப் படைப்பாளிகளே! ஜனநாயகவாதிகளே!
உழைக்கும் மக்களே!
இந்தியாவில் 90-களில் அமலாக்கப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராகவும், மதவெறி – சாதிவெறியைத் தூண்டி நாடு முழுவதும் பாசிச பயங்கரவாதமாக உருவெடுத்து வளர்ந்து வந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராகவும், தமிழ் நாட்டையே மொட்டை அடித்த அரசியல் சீக்கான பாசிச ஜெயலலிதாவின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பல்வேறு வெளியீடுகள், புதிய கலாச்சாரம் மாத இதழ் போன்றவற்றின் மூலமாகவும் அசுரகானம், காவி இருள், இருண்ட காலம், அடிமைச் சாசனம், பாரதிதாசன் பாடல்கள் போன்ற ஒலிப்பேழைகள் மூலமாகவும், தொடர்ந்து எமது அமைப்பு பிரச்சாரம் செய்து வந்ததை அறிவீர்கள்.
சிறீரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் ஸ்டெர்லைட் போராட்டம் வரை பல்வேறு மக்கள் திரள் போராட்டங்களையும், தஞ்சையில் தமிழ் மக்கள் இசை விழா, பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, கோவையில் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு போன்ற அனைத்திலும் முன்னணி செயல்வீரனாக மக்கள் கலை இலக்கியக் கழகம் செயல்பட்டது. கலை இலக்கியத்தின் மூலம் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அவலங்களையும், துன்ப துயரங்களையும் போக்குகின்ற வகையிலும், அதிகார வர்க்கத்தை எதிர்த்து போர்க்குணத்துடன் போராடுகின்ற வகையிலும் மக்களின் கலகக் குரலாக எமது இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இன்று, கார்ப்பரேட் காவி பாசிசம், ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறி கும்பலை எதிர்த்த போராட்டக் களத்திலும், கருத்தியல் தளத்திலும் தொடர்ந்து போராடி வருகிறது மக்கள் கலை இலக்கியக் கழகம்.
நாட்டை மிகத் தீவிரமாக மறுகாலனியாக்கும் நோக்கத்திலான இவர்களது கார்ப்பரேட் – காவி பாசிச திட்டத்தை முறியடிக்காமல் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கை – எதிர்காலம் இல்லை. கார்ப்பரேட்-காவி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தில் கலை இலக்கிய வாதிகளின் – ஜனநாயக அமைப்புகளின் தேவை முன்னைக் காட்டிலும் இன்று அதிகரித்துள்ளது.
“கலாச்சாரப் படை இல்லாத படையானது, மந்த புத்தியுள்ள படை” என்றார் தோழர் மாசேதுங். நாடு முழுவதும் உள்ள பாசிச எதிர்ப்புக் கலை இலக்கியவாதிகளை ஒன்றிணைக்கின்ற மகத்தான புரட்சிகர அரசியல் கடமையை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் எமது அமைப்பு மேற்கண்ட பணியைத் தீவிரமாய் முன்னெடுக்கும் நோக்கில்,
காவி இருள் அகற்றும்
கலை இலக்கியம் படைப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழ்த்த
கலாச்சாரப் படை அமைப்போம்!
என்ற முழக்கத்துடன் எமது 10 ஆவது மாநில மாநாட்டை நடத்துகிறது.
பாசிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் கலைஞர்கள், களப்போராளிகள் அனைவரையும் எமது மாநாட்டிற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். மாநாடு வெற்றிபெற தங்களின் மேலான ஆதரவையும், நிதியையும் தந்து உதவுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
8903005636 | 9443157641| 8754641931
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
10 ஆவது மாநில மாநாடு
நாள் : 06- 10 – 2024 ஞாயிறு மாலை 5 மணி
இடம் : திருச்சி உறையூர் கைத்தறி நெசவாளர்கள் சங்க அரங்கம்.
தலைமை : தோழர். சித்தார்த்தன், மாநிலப் பொருளாளர், ம.க.இ.க.
வரவேற்புரை : தோழர். இராவணன், மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க.
துவக்க உரை : தோழர். காளியப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க
தீர்மானம் விளக்க உரை: தோழர்.கோவன், மாநிலச் செயலாளர்,
ம.க.இ.க
புதிய நிர்வாகிகள் அறிமுகம்
வாழ்த்துரை:
தோழர்.ராஜூ, மாநில பொதுச் செயலாளர் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுச்சேரி
தோழர். லோகநாதன், மாநில பொதுச் செயலாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.
தோழர்.செல்வராஜ், மாநிலப் பொருளாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.
தோழர். அன்பு, மாநில பொதுச் செயலாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.
கருத்துரை
தோழர். ஆதவன் தீட்சண்யா,
பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தோழர். இந்திரகுமார் தேரடி,
ஊடகவியலாளர்.
நன்றியுரை:
தோழர்.வாணி, மாநில செயற்குழு உறுப்பினர், ம.க.இ.க.
மக்கள் கலை இலக்கிய கழகம், தமிழ்நாடு.
8903005636, 9443157641, 8754641931