மணிப்பூரில் நமது சகோதரிகளுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் குண்டர்கள் நடத்திய பாலியல் வெறியாட்டம் நாகரிகமாக கதைப்பதை நாக்கூச செய்கிறது!

முதலில் குஜராத்திலும், அடுத்து காஷ்மீரிலும் தினவெடுத்த தடிகள் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் என விரிவடைந்து தற்போது மணிப்பூரில் யோனிகளை தேடி அலைகிறது.

தன்மீது பாலியல் வன்புணர்வு ஏவியவன் தன் சகோதரனின் நண்பன் என்று வெடித்து கதறும் சகோதரியின் கூக்குரல் நாடு முழுக்க எதிரொலித்து உறங்கியவனையும் எழும்பச் செய்துள்ளது.

பகுத்தறிவு கொண்ட மனித மூளைக்கு பக்தியுடன் கலந்த மதவெறி போதையை ஊட்டிய பிறகு சகோதரனோ, சகோதரியோ, தாயோ, மகளோ கிடையாது. பால் வேறுபாடுகள் ஏதுமின்றி பாய்கிறது தடிக்கம்பு.

தந்தையின் கண் முன் மகளையும் மகனின் கண் முன் தாயையும் துகிலுரித்த நவீன கிருஷ்ண பரமாத்மாக்கள் அடுத்த அவதார லீலைகளை புரிய ராமராஜ்யம் அமைக்க துடித்துக் கொண்டுள்ளனர்.

கையில் தடியுடன் ஷாக்காக்களில் தரும் பயிற்சி தற்போது குறியுடன் பெண்கள் மீது பாய்வதற்கும் போதனை நீள்கிறது போலும்!

பழங்குடி வாலியிடம் நேருக்கு நேர் நின்று மோத துணிவில்லாத கோழை ராமன் மறைந்து இருந்து அம்பெய்தி வீழ்த்தியது ராமாயண கதை. இன்றோ பழங்குடிகளை வீழ்த்த ராமனின் வழித்தோன்றல்களான ஆர்எஸ்எஸுக்கு அவர்களின் ஆண்குறியும் ஒரு ஆயுதமாகிறது!

சீனாவின் உதவி, அந்நியர்களின் தூண்டுதல் என்று அகண்ட பாரத பைத்தியங்கள் விவாதங்களில் உளறிக் கொண்டிருக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் காட்டு வேட்டைக்கு மணிப்பூரின் மக்கள் பலியாவதை தடுக்க தடிகளையும், குறிகளையும் அடித்து விரட்டு!

  • செல்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here