இசுலாமியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்!

இசுலாமியர்களை அவமானப்படுத்துவதற்கும், துன்புறுத்துவதற்குமான நிகழ்ச்சிகளாக இந்துபண்டிகைகள் மாற்றப்படுகின்றன. உன்னாவ்-ல், தன் மீது வலுக்கட்டாயமாக பூசப்பட்ட சாயத்துக்கு எதிராக போராடிய முகமது சரீஃப் அடித்தே கொல்லப்பட்டார்

0
முசுலீம்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்!
சாலையில் தொழுகை செய்தால் நடவடிக்கை என்றால், ராமநவமிக்கு மசூதியில் காவிக்கொடி ஏற்றியதற்கு என்ன தண்டனை?

டந்த சில மாதங்களாக உத்தர பிரதேசத்தில்  போலீசார் இசுலாமியர்களுக்கு பல்வேறு வகைகளில் எச்சரிக்கைகளையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துவருகின்றனர். சாலைகளில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளார், மீரட்-ன் காவல் உயரதிகாரி. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது போலிசு. இசுலாமியர்களை குற்றவாளிகளாக்கி, உடனே தண்டனை அளிக்கும் நீதிபதியாகவும் மாறியிருக்கிறது போலிசு. ’பாஜகவின் நீதிபதிகள் அணி’யின் கீழ் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் இசுலாமியர்களுக்கெதிரான வழக்குகளில் இத்தண்டனைகள் வழங்கப்படும் என முன்னுணர்ந்து தீர்ப்பெழுதியிருக்கிறார்கள்.

வீட்டு மாடியில் யாரும் தொழுகை நடத்தக்கூடாது என ரம்ஜானை எதிர்நோக்கிய கடைசி வெள்ளிக்கிழமையன்று சம்பல் போலிசு உத்தரவிட்டுள்ளது. போலிசு ரோந்து செல்லும் வீடியோக்கள் சமூக தளங்களில் பரவியது. இது நிச்சயமாக இசுலாமியர்கள் மீதான உளவியல் தாக்குதலே. இசுலாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம் உள்ளிட்ட எந்த காரணத்திற்காகவும் ஒன்று கூடுவதிலிருந்து தடுக்கப்படுவார்கள் என ‘இந்து’ மக்களின் மனதில் பதிய வைக்க போலிசு கட்டமைத்துள்ள புதிய முயற்சி. இப்படி இசுலாமியர்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ‘இந்து’ மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

சாலைகளில் தொழுகை நடத்தக் கூடாது என கடந்த வருடம் உத்திரபிரதேச அரசு இசுலாமியர்களுக்கு அறிவுறுத்தியது. காவி பயங்கரவாதிகள் அதை பீகாரிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். சாலைகளில் தொழுகை நடத்தக் கூடாது என்று சொல்வதற்கு பிரதானமாக சொல்லப்படும் காரணம், போக்குவரத்து நெரிசல். குறிப்பாக அவசர ஊர்தி செல்லவும் வழியில்லாமல் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விடுமாம். இது வடிகட்டிய பொய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பெரும்பான்மையான ‘இந்துக்கள்’ இந்த பொய்யை நம்ப விரும்புகிறார்கள். ’இந்துக்களின்’ மெளனம் அதை உணர்த்துகிறது. சாலைகளில் தொழுகை செய்வது ரமலான் கொண்டாடுவது சம்மந்தமான பிரச்சனை அல்ல இது, மாறாக சாலைகளில் எவ்வித கொண்ட்டாட்டங்களும் தவறானவை என்பதாக ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் நமக்குத் தெரியும், சாலைகளில் தொழுகை சம்மந்தமான பிரச்சனைக்கு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ. தண்டனைகள் அறிவிக்கப்படுகிறதோ அது இந்து மத விழாக்களுக்கு விதிக்கப்படுவதில்லை. உள்ளூர் கோயில் திருவிழாக்கள் துவங்கி, நகரங்களில் நடைபெரும் கோயில் குடமுழுக்கு, கூழ் வாற்றல், திருவிழா, சாமி வீதி உலா உள்ளிட்ட இந்து மத நிகழ்ச்சிகளுக்கு இதுவரை போலிசின் இது போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு நாம் பார்த்ததில்லை. வடமாநிலங்களில் நடக்கும் துர்கா பூஜை, ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கன்வார் யாத்திரை, கும்பமேளா என எதற்கும் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. மாறாக இசுலாமியர் குடியிருப்பு வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ஹோலி கொண்டாட்டத்தின் போது மசூதிகளை தார்ப்பாய்கள் கொண்டு மூடுவது, கடந்த வாரம் நடந்த ராமநவமி நிகழ்வில் மசூதியில் சென்று காவிக் கொடி ஏற்றியது என பட்டியல் நீளமாக இருக்கிறது.

சாலையில் தொழுகை செய்தால் நடவடிக்கை என்றால், ராமநவமிக்கு மசூதியில் காவிக்கொடி ஏற்றியதற்கு என்ன தண்டனை?

அனுமார் கோயிலுக்கு செல்லும் மக்களினால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் டெல்லியின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். சாலை ஓரங்களில் உணவு பிரசாதம் தரப்படும். வருடம் முழுவதும் மதவிழாக்களின் பால் மக்கள் ஒன்று கூடுவதும், சாலைகளை ஆக்கிரமிப்பதும் நடக்கிறதே, இதை குறித்து போலிசு எப்போதாவது எதாவது பேசி இருக்கிறதா? அறிவுரை வழங்கியுள்ளதா?சாலைகளும், பொது இடங்களும் இசுலாமியர்களுக்கு சொந்தமில்லை என்பது தான் இந்திய அரசு சொல்ல வருகிறது.

சில வருடங்களுகு முன்னர் குருகிராமில், திறந்த வெளியில் தொழுகை நடத்திய இசுலாமியர்களை இந்துத்துவ கும்பல் தாக்கிய போது, குண்டர்களின் பக்கம் நின்ற போலிசு இசுலாமியர்களை அந்த இடத்திலிருந்து துரத்தியது. அப்போதைய முதல்வர் பொது வெளியில் தொழுகை செய்ததை கண்டித்தார். அம்மாநில அமைச்சரோ திறந்த வெளியில் தொழுகை நடத்துவது என்பது நிலத்தை அபகரிப்பதற்கான சதி என்று பேசினார்.

உண்மையில் இது சாலைகள் மற்றும் போக்குவரத்து சம்மந்தமாக பிரச்சனையா? ராம்பூரில் உள்ள மசூதியில் இப்தார் நேரத்தை ஒலிபெருக்கியில் அறிவித்த இமாம் கைது செய்யப்பட்டார். இப்தார் நேர அறிவிப்பு காற்றையும்,  இந்துக்களில் காதுகளையும் அசுத்தப்படுத்தி விட்டதாக கைது செய்யப்பட்டாரா?

காலனிய இந்தியாவில்   சுரண்டலுக்கு ஏதுவாக பிரிட்டிஷ் கட்டமைத்த சட்டங்கள் பல. அதில் சிலவற்றின் தாக்கம் இன்றும் இருக்கிறது. 1871 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றப் பரம்பரை சட்டம் பல பழங்குடியின சமூகங்களை “குற்றப் பரம்பரை ” என்று வரையறுத்து மொத்தமாக பொது சமூகத்தில் இருந்து பிரித்து வஞ்சித்தது.  ஆதாரத்திற்கு பதிலாக அனுமானதத்தின் அடிப்படையில் “குற்றப் பரம்பரை ” என வகைப்படுத்தப்பட்ட மக்கள் காவல்துறையின் அத்துமீறல்களுக்கு ஆளாகினர். சுதந்திரத்திற்கு(ஆட்சி மாற்றம்) பின் இந்த சட்டம் நீக்கப்பட்டது.

துரதிருஷ்டவசமாக , தற்போது காவல்துறையினர் சிறுபான்மையினரை நடத்தும் விதத்தில்  ” குற்றப் பரம்பரை” சட்டம் இன்னும் நீடிக்கிறது.

படிக்க:

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் – அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்!

பிரதமரின் வெறுப்புப் பேச்சுகள்! கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்! நீதிமன்றம் அமைதி காக்கலாமா? 

ஆங்கிலேயர்களைப் போலவே இந்திய அரசும் இசுலாமியர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கிரிமினல் குற்றமாக பார்க்கிறது. அவர்கள் வீடு வாங்கினாலும், கடை திறந்தாலும், தெருவில் வளையல் விற்றாலும், போட்டித் தேர்வுக்கு படித்தாலும், தேர்ச்சி பெற்றாலும், அனைத்தும் இந்துக்களின் பங்கை அபகரிக்கும் சதியாகவே உருவகப்படுத்தப்படுகிறது. இந்துக்களின் சொத்துக்களை அபகரித்து இந்தியாவில் ஊடுருவிய இசுலாமியர்களுக்கு கொடுக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியை குறித்து ஒரு வருடத்துக்கு முன்னர் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

இசுலாமியர்களை அவமானப்படுத்துவதற்கும், துன்புறுத்துவதற்குமான நிகழ்ச்சிகளாக இந்துபண்டிகைகள் மாற்றப்படுகின்றன. உன்னாவ்-ல், தன் மீது வலுக்கட்டாயமாக பூசப்பட்ட சாயத்துக்கு எதிராக போராடிய முகமது சரீஃப் அடித்தே கொல்லப்பட்டார். அவரது சடலத்தை சலையில் வைத்து போராடிய குடும்பத்தார் மற்றும் அவரது சமூகத்தை சார்ந்த 117 பேர் மீது போலிசு எஃப்ஐஆர் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள அநீதியை புரிந்து கொள்வதா அத்தனை கடினமானதா?

இந்த மொத்த நிகழ்விலும் மிகவும் கவலையளிப்பது என்னவென்றால், முன்னர் பாஜக இந்துத்துவவாதிகள் இசுலாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடந்து வந்தது. இப்போது அதே வேலையை போலிசும், அதிகார வர்க்கமும் செய்கிறது. இசுலாமியர்களை குறிவைத்து  ஓரங்கட்டுவதில் போலிசு மிக முனைப்பாக வேலை செய்கிறது.

அனைத்தையும் விட மேலான கேள்வி ஒன்று விடை காணப்படமால் இருக்கிறது. தங்கள் பெயரால் நடத்தப்படும், இந்த வெறுப்புமிக்க அதிகாரத்தை ‘இந்துக்கள்’ ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தான்.

 செல்வா

கட்டுரை மூலம்:

https://thewire.in/communalism/eid-psychological-war-against-muslims

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here