டெல்லி சி ஆர் பூங்கா பகுதியில் கோயில் அருகே இருக்கும் மீன் கடைகளை குறிவைக்கும் காவி கும்பல்.

0
டெல்லி சி ஆர் பூங்கா பகுதியில் கோயில் அருகே இருக்கும் மீன் கடைகளை குறிவைக்கும் காவி கும்பல்.
சில நபர்கள் தங்கள் கடைக்கு வந்து கடையை மூடுமாறு கூறினர். அது கேமராவில் பதிவாகியுள்ளது.

மினி கொல்கத்தா என்று அழைக்கப்படும் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. சில தனிநபர்கள் மீன் வியாபாரிகளை மிரட்டுவதை குறிக்கும் காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தலைநகரத்தில் ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சியை’ மேற்கொண்ட டிஎம்சி கட்சியின் மகுவா மொய்த்ரா மீது விசாரணை நடத்த கோரியுள்ளது பாஜக.

கோயிலின் அருகில் உள்ள மீன் கடைகளை மூடுமாறு மீன் வியாபாரிகளை காவிக் கும்பல் மிரட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவானதை அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்து வலதுசாரி கும்பல் ஒன்று உள்ளூர் கடைகளில் மிரட்டியதாக தகவல் வெளியானது. பாஜக தொண்டர்கள் மீன் வியாபாரிகளை மிரட்டும் செய்தியை எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு உள்ளார் மேற்குவங்க ஆளும் கட்சி எம்பி ஆன மஹூவா மொய்த்ரா.

கடைகளை மூடச் சொல்லி மிரட்டப்படுவதை குறித்து அவநம்பிக்கையில் இருக்கும் மீன் வியாபாரிகள் தாங்கள் தான் இந்த கோயிலை முதலில் கட்டியதாக கூறுகின்றனர். மகுவா மொய்த்ராவின் பதிவு ஒன்றில் “தயவுசெய்து பாருங்கள் 60 வருடங்களில் இல்லாத வகையில், வங்காளிகள் பாஜக குண்டர்களால் மிரட்டப்படுகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்தக் கோயில் அந்த மீன் வியாபாரிகளால் கட்டப்பட்டது என்கிறார். மீன் மற்றும் கறிக்கடைகளை பலவந்தமாக மூடச் சொல்வதால் நிலைமை மோசமாக உள்ளது என்று உள்ளூர்வாசியின் whatsapp பதிவை மற்றொரு பதிவில் வெளியிட்டுள்ளார்.

சில நபர்கள் தங்கள் கடைக்கு வந்து கடையை மூடுமாறு கூறினர். அது கேமராவில் பதிவாகியுள்ளது. எங்கள் கடைகளை நடத்த இந்த இடம் டிடிஏவால் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை யாரும் எங்களை கடையை மூடச் சொன்னதில்லை. நாங்கள் வங்காள சனாதனிகள். தினமும் கடவுளை வணங்கிவிட்டு தான் கடையை திறப்போம். இது எங்களின் மரபு என்கிறார் திவேந்து எனும் மீன் வியாபாரி. கடந்த 25 வருடங்களாக இங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறோம். அன்று நடந்ததை போல ஒரு நாளும் நடந்ததில்லை என்று இந்து கும்பல் மிரட்டியதை குறிப்பிடுகிறார் மிதுன் தாஸ் எனும் மற்றொரு வியாபாரி.

ஈஸ்ட் பாகிஸ்தான் டிஸ்பிலேஸ்ட் பர்சன்ஸ் காலனி (EPDP) பெங்கால் சமூகத்தின் ஒரு கூட்டிணைவாக இருக்கக்கூடிய இந்த அமைப்பின் துணைத் தலைவர் அசோக் போஸ் கூறுகையில் சமூக வலைதளங்களில் பரவிய இச்சம்பவம் குறித்து காவி கும்பல் அறிந்துள்ளது. மீன் மார்க்கெட் சங்கம் EPDP -க்கு புகார் அளித்துள்ளதாகவும் அதன் செயலாளர் அசோக் பட்டாச்சாரி போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். கோவில் கட்டப்படும் முன்பே மீன் மார்க்கெட் இருந்ததாகும் சொல்லப்போனால் மீன் வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டு தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறினார். இந்தியா முழுவதிலும் கோயில்கள் மார்க்கெட் பகுதியில் அருகிலும் காவல் நிலையங்கள் உள்ளேயும் கட்டப்பட்டிருக்கின்றன. மக்கள் வழிபட்டு விட்டு தான் வேலைகளை துவங்கும் பொருட்டு அவ்வாறு உள்ளது. மீன் மார்க்கெட் அருகில் கோயில் இருப்பது குறித்து யாருக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.

மார்க்கெட் அருகில் உள்ள காளி கோயில் பூசாரி ஒருவர் கூறுகையில் வங்காள மரபில் மீன் உணவு மிகவும் விருப்பத்தக்கதாகும். துர்கா பூஜை மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மீன் உணவு பரிமாறப்படுவது வழக்கம், என்றும் கூறுகிறார் சஞ்சீவ் பட்டாச்சார்யா. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சில பழக்க வழக்கங்கள் உள்ளன. யாரும் அதை எதிர்க்கவில்லை மீன் உணவு உண்பவர்களுக்கோ உண்ணாதவர்களுக்கோ மார்க்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. கோயில் அருகில் இரண்டு மதுபான கடைகளிலும் கூக்கா பார்லர்களும் கூடத்தான் இருக்கின்றன அதை யாரும் எதிர்க்கவில்லையே!

படிக்க:

♦  பீப் கடை போடாதே மிரட்டி அம்பலமான கோவை சங்கி!

♦  உணவு உடை எனது உரிமை! அதை தடுக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது?

மார்க்கெட் உரிமம் பெற்று தான் இயங்கி வருவதாக எம் சி டி அறிக்கை சொல்கிறது. இதுவரை போலீசில் வழக்குப் பதியப்படவில்லை. அந்த வீடியோ பழைய வீடியோ போல தெரிகிறது. நாங்களும் சம்பவத்தின் தேதி குறித்து ஆராய்ந்து வருகிறோம். என நம்பத்தகுந்த ஒருவர் PTI இடம் கூறியுள்ளார். கோயிலின் புனிதத்தை அனைவரும் மதிக்க வேண்டுமெனவும், அதை எப்போதும் போலவே மார்க்கெட் மீன் வியாபாரிகள் செய்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மீன் மார்க்கெட் சட்டப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகள் சுத்தமாக இடத்தை பேணுவதாகவும், மற்ற சமூக – மத நடவடிக்கைகளில் ஊக்கமாக பங்கேற்பதாகவும் டெல்லி பாஜக தலைவர் கூறியுள்ளார்.

ஆனால் பாஜக தலைவர்கள், உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மீன் கடைகளை மூட சொல்லிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. சட்டவிரோத மீன் மார்க்கெட் மற்றும் கறிக்கடைகளை நீக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா சட்டமன்றத்தில் கூறினார்.

நெருக்கடி தந்து வழமையான பாணியில் மிரட்டி கடைகளை மூட பாஜக முயன்றுள்ளது. ஆனால் அப்பகுதி வியாபாரிகள் அமைப்பாக இருப்பதும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாலும், தங்களது முயற்சி தோல்வியடைந்ததால் வேறு வழியின்றி தற்போது பின்வாங்கியுள்ளது. டெல்லி முதல் திருப்பரங்குன்றம் வரை மாநிலம், மாவட்டம், தெரு, பகுதி என அனைத்து இடங்களிலும் தங்கள் பலத்துக்கு உட்பட்டு கலவரங்களை நடத்த சங்கிகள் முயன்று வருகின்றனர் என்பதை அறிவோம். இது பெரியார் மண், சுயமரியாதை பூமி என பெருமை பேசிக் கொள்வதில் பயனில்லை. சங்கிகளின் கலவர பு(யுக்)த்தியை கருவறுப்போம். பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி கட்டியமைப்போம்!

  • செல்வா

கட்டுரை மூலம்

https://www.hindustantimes.com/india-news/cr-park-fish-market-shutdown-saffron-brigade-hindu-right-group-mahua-moitra-chittaranjan-park-kali-bari-temple-101744198841958.html

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here