தந்தை பெரியாரை இழிவு படுத்தி தமிழ் பாசிஸ்டுகளில் ஒருவரான சீமான் பேசியது பார்ப்பனக் கும்பல் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பெரியாரை யார் விமர்சித்தாலும் பார்ப்பனக் கும்பல் அதற்கு முன்னுரிமை கொடுத்து ஊடகங்களிலும், செய்தி ஏடுகளிலும் பரப்புகிறது.
நாட்டின் கொடிய மற்றும் பயங்கரவாத எதிரியாக மாறியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற சக்திகளின் முன்னோடிகளின் அடையாளங்களையும், வரலாற்றையும் நீர்த்துப்போக செய்கின்ற வேலைகளை சீமான் உள்ளிட்ட தமிழின பிழைப்புவாதக் கும்பல் பேசிக்கொண்டும், செய்துக் கொண்டும் உள்ளது..
ஆர்எஸ்எஸ் பாஜகவினர் தான் முன்வைத்து அமுல்படுத்த நினைக்கின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சட்ட திருத்தங்கள் மீது மக்களின் கவனம் முன் வருகின்ற போதெல்லாம் அதனை திசை திருப்புவதற்கும் விவாதங்களை, நிழல் எதிரிக்கு எதிராக சண்டை போடுவதற்கும் சீமான் போன்ற ’அரசியல் விபச்சாரிகளை’ பயன்படுத்துகிறார்கள்.
இன்னொரு புறம் தமிழகத்தில் நடிகர் விஜய் உருவாக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் போன்ற அமைப்புகள் உருவானதிலிருந்து சீமான் போன்ற தமிழின பிழைப்புவாதிகளின் கூடாரம் காலியாகிக்கொண்டிருக்கிறது என்பதால் தன்னை பற்றி ஏதாவது பொதுவெளியில் செய்தி வரவேண்டும் என்ற இழிவான நோக்கத்தில் அரசியல் மற்றும் வரலாறு பற்றி எந்த அறிவும் இல்லாமல் கூச்சநாச்சமின்றி, ’நிர்வாணமாக ஓடி’ அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார் சீமான்.
சீமான் பேசியது என்ன?
“முன்பு பெரியார் பற்றி தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். இப்போது தெளிவாகிவிட்டேன். தமிழ், தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார். பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை. வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? திராவிடம் என்று கூறியவர்கள் எல்லாம் திருடர்கள்.
பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? வஉசி, இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?’ என்று பேசியுள்ளார்.
மேலும், ‘அம்பேத்கரையும் பெரியாரையும் ஒப்பிடுவது முரணான ஒன்று. அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தோன்றுவதை எல்லாம் பேசுபவர்.
நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை என்று கூறியவர் அம்பேத்கர். ஆனால் பெரியார் சொல்வது அந்த கோட்பாடு இல்லை. அவர் சிந்தித்தது, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது. திராவிடம் பேசி, எங்கள் முன்னோர்களை மறைக்கும்போது அதனை ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது.
படிக்க
🔴 பெரியாரை மீண்டும் மீண்டும் அவதூறு செய்யும் சீமானை எதைக்கொண்டு அடிப்பது?
என் இனச்சாவில்தான் இவர்கள் (திராவிடர்கள்) என் எதிரி எனத் தெரிந்தது. 2008-ல் என் தலைவரை சந்திக்கும்வரை நானும் இந்தக் கூட்டத்தில்தான் ஒருவனாக இருந்தேன். அவரைச் சந்தித்த பிறகுதான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறேன்.
தமிழ் மொழியை மிகவும் மோசமாகப் பேசிய பெரியார் எந்த மொழியில் பேசினார்? என் மொழியை மிகவும் இழிவுபடுத்தியவர் அவர். எந்த நிலையில் மொழிக்காக அவர் நின்றிருக்கிறார். மொழியை விட்டுக்கொடுத்து சமூக சீர்திருத்தம் என்று என்ன இருக்கிறது? பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் சான்று கேளுங்கள்.
பெரியார் பெரிய செல்வந்தர். சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வஉசி. அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். பெரியார் போராளியா? வஉசி போராளியா?
பெரியாரே எனக்கு வேண்டாம். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பதுதான் எனது கொள்கை’ என்றார்” என்று பார்ப்பன தினமணி செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் சீமான் பல்வேறு முரணான கருத்துகளையும் அபத்தமான ஒப்பீடுகளையும் மேற்கொண்டு உள்ளார்.
முதலாவதாக வடலூருக்கு சென்ற சீமான் வள்ளலாரின் சத்திய ஞானசபையை பார்த்துவிட்டு வள்ளலாரை பற்றி அனைத்தும் தெரிந்தவன் போல் பேசி வாயடித்துள்ளார்.
’பெருவெளித் தத்துவம்’ என்று புதிதாக ஒரு பொய்யை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் முன்வைத்து பிரச்சாரம் செய்வதும், அதனை வழிமொழிந்து ஆர்எஸ்எஸ் பாஜகவின் நேரடி பினாமிகள் மற்றும் மறைமுக பினாமிகள் அனைவரும் வள்ளலார் அமைத்துள்ள சத்திய ஞான சபைக்கு வெளியில் உள்ள சபைக்கு சொந்தமான இடத்தில் திமுக கொண்டு வருகின்ற திட்டங்கள் மற்றும் எழுப்புகின்ற கட்டிடங்கள் ஆகியவற்றை எதிர்த்து பல வகையில் பேசிக் கொண்டும், போராடிக் கொண்டும் வருகின்றனர்.
படிக்க:
🔴 100 நாள் வேலைத்திட்டம் குறித்து நம்மாழ்வாரின் பேச்சு! | சீமான் தம்பிகள் கவனத்திற்கு|
வள்ளலார் ஆறாம் திருமுறையில் சுத்த சன்மார்க்கத்தை முன்வைத்து சாதி, சமயம், பார்ப்பன இந்து மதம் மற்றும் சடங்கு நால்வருண ஆச்சாரங்கள், கோத்திரங்கள் ஆகியவற்றை எதிர்த்து கூறியது, பேசியது, பாடியது போன்றவற்றை அவர் மறைந்த காலம் முதல் கண்டுகொள்ளாமல் ஐந்து திருமுறைகளில் முன் வைத்திருந்த சமய சன்மார்க்கத்தை உயர்த்தி பேசுகின்ற இத்தகைய தமிழின பிழைப்புவாதக் கும்பல் மற்றும் வள்ளலார் பெயரால் வயிறு வளர்க்கின்ற பல்வேறு ’சின்ன புத்தி சங்கங்கள்’ வள்ளலாரை திரித்து புரட்டுவதும், இன்று உருவாக்க உள்ள சர்வதேச மையத்திற்கு எதிராக போராடுவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இத்தகைய பேர்வழிகள் வள்ளலாரது கொள்கைகளுக்காக நிற்பது போல உருகுவது அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டியதாகும்.
இரண்டாவதாக பெரியாரின் சீர்திருத்தங்கள் பற்றி பல நூற்றுக்கணக்கான வெளியீடுகள் ஆதாரங்கள், டிஜிட்டல் முறையில் ஆய்வுகள், அவர் முன்வைத்த கோரிக்கைகள் பின்னாள் திராவிட இயக்கங்களினால் சட்டமாக மாற்றப்பட்டது போன்ற அனைத்தையும் மறைத்து விட்டு பெரியாரின் சீர்திருத்தம் பற்றி வாய்க்கு வந்தபடி உளறியுள்ளார் திருவாளர் சீமான். பெரியார் திராவிட இயக்கம் பற்றிய விவகாரங்களுக்கு திராவிட இயக்கம் பதிலடி கொடுப்பதே போதுமானது என்றே கருதுகிறோம்.
மூன்றாவதாக விடுதலைப் போராட்ட வீரரும், விடுதலைப் போராட்ட வீரமரபில் தமிழகத்தின் தென்னகத்தில் தோன்றி தனது உடமைகளையும், உயிரையும் அர்ப்பணித்த மாவீரன் வ.உ.சி பற்றி பேசி அவரையும் பெரியாரையும் ஒப்பிட்டு பேசுவது என்ற வகையில் சம்பந்தமில்லாமல் உளறியுள்ளார்.
இது பற்றி மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விடுதலைப் போராட்டத்தின் வீர மரபு என்ற நூலில் வஉசி உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை பதிவு செய்துள்ளது. வ உ சி பெரியார் ஒப்பீடு அபத்தமானது மட்டுமின்றி உள் நோக்கமுடையது.
நான்காவதாக ஈழ விடுதலைக்கு போராடிய விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் சந்தித்தது பற்றி தொடர்ந்து பல்வேறு பொய் செய்திகளை பரப்பி வருகிறார். இதனை அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் தமிழகத்திலும் சரி, புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இவரது வாய்ச்சவடால் பேச்சுக்களை நம்பி ஏமாந்து திரள்நிதி அளித்து வந்த பலர் படிப்படியாக நிறுத்தி விட்டனர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக போராடுவது என்ற பெயரில் பல்வேறு வரலாற்று மோசடிகளையும் நடைமுறையில் பொய், பித்தலாட்டம் நிறைந்த நடைமுறையையும் கொண்டுள்ள சீமானின் நடவடிக்கைகளை அவ்வப்போது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன.
தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு என்ன என்பதை பற்றி தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முன்வைத்து அதில் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களை உயர்த்தி பிடிப்பதும், தவறான அம்சங்களை நிராகரிப்பதும் என்ற அறிவியல் பூர்வமான பார்வையில் மதிப்பீடு செய்து அவர்களை முன்வைத்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
குறிப்பாக இந்திய பொருள்முதல்வாத மரபுக்கு எதிராக நாட்டின் பெரும்பான்மை மக்களை இன்றளவும் அடிமைத்தனமாக வைத்துக் கொண்டு அந்த அடிமைத்தனத்தையே சிலாகித்து பேசக்கூடிய வகையிலும், சிந்திக்க தெரியாத அடிமைகளாகவும் மாற்றியுள்ள பார்ப்பன (இந்து) மதத்தின் நால் வர்ணக் கொள்கை, சாதிய பாகுபாடு, பழக்க வழக்கங்கள் போன்றவை அனைத்தும் கருத்து முதல்வாதமாக போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
இந்தக் கருத்து முதல்வாத போக்குகள் தந்தை பெரியார் காலத்தில் இருந்ததை காட்டிலும் பல மடங்கு பரிணாம வளர்ச்சியடைந்து இன்று பார்ப்பன பயங்கரவாதமாக மாறியுள்ளது என்பதை பொதுவெளியில் அறிவித்து மார்க்சிய லெனியவாதிகள் போராடுகிறோம்.
இன்று பார்ப்பன பாசிசம், கார்ப்பரேட் பாசிசத்துடன் இணைந்து கார்ப்பரேட் காவி பாசிசமாக நாட்டு மக்களுக்கு எதிரியாக மாறியுள்ள சூழலில் சூழலில் பார்ப்பன (இந்து) மதத்திற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்தவாதிகள்: பார்ப்பன மதத்திற்கு உள்ளேயே போராடிய சீர்திருத்தவாதிகள் அனைவரையும் உயர்த்தி பிடித்து அதை மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க போராடியும் வருகிறது மார்க்சிய லெனினிய அமைப்புகள்.
வரலாற்றின் போக்கில் அந்தந்த காலகட்டத்தில் ”காலமும் களமும்” தீர்மானித்த நிலைமைகளை எதார்த்தமாக பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய மரியாதையையும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்களையும் எடுத்துக் கொண்டு போராடுகின்ற பொருள்முதல்வாத மரபை முன்வைக்கின்ற கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் பெரியாரைப் பற்றி இப்படிப்பட்ட கேடுகெட்ட கழிசடைகள், தமிழ் பாசிஸ்டுகள் மற்றும் தமிழின பிழைப்புவாதக் கும்பல் பேசுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
சீமான் போன்ற தமிழ் பாசிச கும்பல் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு உரிய முறையில் பாடம் புகட்டுவதற்கு மக்களை திரட்டி தயாராக நிற்போம்.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
தோழர் மருது பாண்டியன் கட்டுரை சீமானுக்கு தக்க செருப்படியும் விலக்கமாற்ற டியும் கொடுப்பதாக அமைந்துள்ளது. ஆனால் இந்த அடிகள் கட்டுரை வடிவில் உள்ளது. நிஜத்தில் இந்த அயோக்கியன்-ஆர் எஸ் எஸ் காரன்-பிரபாகரனுடன் ஆமைக்கறி ஒன்றாக அமர்ந்து தின்றதாக புருடா விடும் நம்பர் ஒன் புளுகுனி-தமிழ்நாட்டின் சாபக்கேடு-பாலியல் குற்றவாளி-இந்த வெறி நாயை செருப்பாலும் விலக்குமாற்றாலும் அடித்து துரத்தும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு நான் தயார்! அன்புத் தமிழர்களே, தமிழ் மக்களை குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின சூத்திர பஞ்சம மக்களை தலை நிமிரச் செய்த தந்தை பெரியாருக்கு இழிவைத் தேடித் தரும் வகையில் பொய்களையும் புனைச்சூட்டுகளையும் அவதூறுகளையும் சர்வ சாதாரணமாக பரப்பி, பார்ப்பன சங்கிகளின் மனம் குளிரச் செய்யும் இந்த அயோக்கிய நாயை (ஆம், சைமன் ச்..ச்..சீமானை) அணிதிரண்டு அவனை முற்றும் முழுதாக ஒழித்துக் காட்டுவோம் வாரீர்!
கட்டுரையின் துவக்கத்தில் சீமானை பற்றி குறிப்பிடும்பொழுது ‘ இவரது’ என்ற வார்த்தையுடன் துவங்குகிறது. இந்தப் பன்னிப் பயலுகெல்லாம் ‘அவர்’, ‘இவர்’ உயர்திணை வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து. இவன் ஒரு அஃறிணை-க்குச் சொந்தமானவன். எனவே கட்டுரையின் துவக்க வார்த்தை ‘இ வ ர து’ என்பதற்குப் பதிலாக ‘ இ வ ன து ‘ என்றே தொடங்கி இருக்கலாம்!