ந்தியாவில் 2023 ஜூன் 26 ஆம் தேதி முதல் புதிய தகவல் தொழில்நுட்ப தொடர்பு சட்டம், 2023 (Telecommunications Act 2023) அமலுக்கு கொண்டுவரப்பட்டது.. தகவல் தொடர்பு துறையில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மாபெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, 1885 ஆம் ஆண்டின் இந்திய டெலிகிராம் சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் இந்திய வயர்லெஸ் டெலிகாம் சட்டம் ஆகிய பழைய சட்டங்களை இந்த புதிய டெலிகம்யூனிகேஷன் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாசிச பாஜகவின் ஊடக பிரச்சாரக கும்பல் செய்திகளை வெளியிட்டது.

இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்ட போது நாடு முழுவதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அதனை எதிர்த்து கடுமையாக போராடத் தொடங்கினர். சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் முற்றிலுமாக இந்த சட்ட திருத்தம் ஒழித்து கட்டிவிடும் என்று தமது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்வதற்கு சமூக ஆர்வலர்கள் முயற்சித்து வந்தனர் அந்த முயற்சியின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.

“உண்மை அறியும் குழு அமைக்க ஏதுவாக மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம், சட்டவிரோதமானது’’, என மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது

மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில், சமூக வலைதளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் துறைகள் குறித்து பரவும் பொய் செய்திகள் குறித்து ஆராய உண்மை கண்டறியும் குழு அமைக்க வழி செய்யப்பட்டது.

இக்குழு, சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வெளியாகும்போது, அவற்றை பொய் எனக்கருதினால், அதை நீக்குவதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகளை முற்றாக ஒழித்துக் கட்டி தன்னை விமர்சித்து வருகின்ற கருத்துக்கள் அனைத்தையும் பொய் செய்திகள் என்ற போர்வையின் கீழ் ஒடுக்குவதற்கு பாசிச பாஜக முயற்சித்து வந்தது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்திருத்தம் 2023 என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் மூலம் பொதுநல வழக்கு கொடுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது இரு நீதிபதிகள் கொண்ட விசாரணை முடிவின்படி ஒரு நீதிபதி பாஜக கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி இந்த சட்டத் திருத்தம் செல்லாது என்றும் தீர்ப்பளித்திருந்தார்.  இதனால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட வழக்கின் கீழ் இன்று மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. அந்த தீர்ப்பில் “பாஜக கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லாது என்றும், அது அரசியல் சாசனம் வழங்கியிருக்கின்ற உரிமைகளுக்கு எதிரானது” என்றும் சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியிருந்தது.

படிக்க:

♦ கருத்து சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கும் தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் விதிகள்!
♦ சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!

“இந்த சட்டத்திருத்தமானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 14, 19(1) (ஏ) மற்றும் 19(1)(ஜி) ஆகியவற்றுக்கு எதிரானதாக உள்ளது”. என்று குறிப்பாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இதன் மூலம் கருத்துரிமைக்கு கல்லறை கட்ட முயற்சித்த பாசிச பாஜகவிற்கு தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், பாசிசத்தின் அடிப்படையே ஜனநாயக கருத்துகளுக்கு விரோதமானது என்பதால் தொடர்ந்து அவர்கள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

சட்டபூர்வமான வழிமுறைகள் செல்லுபடியாகாத போது, சட்டவிரோதமான வழிமுறைகளில் இறங்கி கருத்துரிமைக்கு கல்லறை கட்டுவார்கள் என்பதைதான் கடந்த காலத்தில் அவர்களது செயல்பாடு நமக்கு உணர்த்தியுள்ளது.

பகுத்தறிவு பிரச்சாரகர்களான கல்புர்கி, நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றவர்களை சனாதன் சான்ஸ்தா என்ற பாசிச கொலைகார படையைக் கொண்டு கொன்று ஒழித்தது.

பாஜகவின் ஆட்சிக்கு எதிராக ஊடகங்களில் எழுதுகிறார்கள் என்ற முகாந்திரத்தில் பிரபல எழுத்தாளரான அருந்ததிராய், ஆனந்த் தெல்டும் டே முதல் பல்வேறு  ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகளை சட்டவிரோதமான முறையில் நசுக்கியதை நாம் பார்த்துள்ளோம்.

எனவே, நீதிமன்றத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு பாசிச பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்க வேண்டும் என்ற போதிலும், நிரந்தரமாக கருத்துரிமையையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க பொருத்தமான ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதற்கான போராட்டத்தில் தொடர்ந்து இறங்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலைமை.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here