
கடந்த 06.01.2025 திங்கள்கிழமை இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதற்கு பிறகு ஆளுநர் உரை வாசிக்க துவங்கியபோது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அவரது உரையை படிக்காமல் சட்டசபையை விட்டு அவசரஅவசரமாக வெளியேறினார்.
அதற்கு அவர் கூறிய விளக்கம்தான் எவராலும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் ஆனால் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனால்தான் புறக்கணித்தேன் என்று கூறியது எவ்வளவு கீழ்தரமான செயல் தொடர்ந்து இது போன்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தும், ஆளுநர் உரையை அவர் புறக்கணிக்கும் செயல் என்பது தழிகத்தையும், தமிழக மக்களையும், தமிழக அரசையும் அவமதிக்கும் செயல் ஆகையால்…
ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையில் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து இன்று (08.01.2025) காலை 10.30 மணியளவில் திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேறச் சொல்லி கண்டன முழக்கங்கள் இட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர்.ஜீவா தலைமை தாங்கினார்.
ம.க.இ.க தோழர்.சீனிவாசன் தலைமையில் ஆர்.என்.ரவியை கண்டித்து முழக்கங்கள் இடப்பட்டன.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர்.சிவா, பொருளாளர் தோழர்.செல்வராஜ், முன்னாள் தலைவர் தோழர்.செல்வராஜ்,
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர்.சங்கர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.கமலக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்.தில்லை முரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் தோழர்.லதா, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர்.மணலிதாஸ், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர்.செழியன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர்.ஆதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காந்திபுரம் பகுதி பேச்சாளர் தோழர்.விக்கி (எ) விடுதலை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.சம்சுதீன், தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் தோழர்.சீனி விடுதலை அரசு, ரெட் பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவர் தோழர் A.C.இராமலிங்கம் ஆகியோர்
கண்டன உரையாற்றினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்.கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத்தலைவர் தோழர்.செந்தில் நன்றியுரையாற்றி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜனநாயக அமைப்புகள் என தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
தகவல்:
ம.க.இ.க பு.ஜ.தொ.மு
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு:
8056905898, 8098604347.