10-12-2023

பத்திரிக்கைச் செய்தி!


க்கள் அதிகார தோழர் வைகை சரவணனுக்கு பா.ஜக மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி என்பவர் கொலை மிரட்டல் – தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழக அரசே!

கொலைமிரட்டல் விடுத்த வக்கில் கருப்பையா, மேப்பல் சக்தி ஆகியோரை உடனே கைது செய்!

ஜனநாயக இயக்கங்கள், பாசிச எதிர்ப்பு சக்திகள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்!

பா.ஜ.க யின் சிவகங்கை மாவட்டத்தலைவர் மேப்பல் சக்தி என்பவர் சிவகங்கை நீதிமன்றத்தில் தொழில் செய்யும் மற்றும் மேலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் கருப்பையா என்பவர் செல்போனிலிருந்து (செல் போன் எண் 8637685793) இன்று 10-12-23 ஞாயிறு காலை 6.50 மணிக்கு எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் வைகை சரவணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.

ஜன-7 திருச்சி மாநாட்டு விளம்பர சுவரெழுத்துக்குதான் இந்த அலறல். பாசிச பா.ஜ.கவை தோற்கடிப்பீர்! இந்தியாவை ஆதரிப்பீர்! என்ற சுவரெழுத்தை இன்னும் “அரைமணி நேரத்தில் அழிக்கவில்லை என்றால் கொம்மால கழுத்தை அறுத்து போட்டுவிடுவேன், ஊர்லேயே இருக்க முடியாது, என்ன பாசிசம் புளுத்தீசம் எழுதுற, இதை ரெக்கார்ட் பண்ணிக்கோ, போலீசு ஸ்டேசனுக்கு ஓடு!” என மிரட்டுகிறான். கூட இருக்கும் வக்கீல் கருப்பையா என்பவர், “அண்ணன் ரொம்ப கோவமா இருக்காரு எலக்சன் நேரத்தில மர்டராயிரும். காரைகுடியில எழுதறவன வெட்டப்போறாங்க, நேத்தைக்கே தோட்டத்தல, உங்கல கூட்டியாற்றதா இருந்தாங்க, விளைவு ரொம்ப மோசமா இருக்கும்ன, 9 – 10 மணிக்குள்ள ஏதாவது நடந்துரும்ன” என வக்கீல் சாதுவாக மிரட்டுகிறார். இவரும் பா.ஜ.கதான்.

மக்கள் அதிகாரம் இந்த சலசலப்பிற்கு எல்லாம் ஒருபோதும் அஞ்சாது. பாசிசத்தோடு மோதிதான் வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் பாசிச எதிர்ப்பு போராளிகள், இயக்கங்கள் என்பதை இத்தகைய வேட்டை நாய்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இல்லை என்றால் தமிழகம் புரிய வைக்கும்.

18-12-2023, திங்கள் மாலை 4 மணிக்கு காளையார் கோவிலில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். பாசிச பா.ஜ.கவை எதிர்த்து அனைத்து கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்று பேச உள்ளார்கள். அது நடக்ககூடாது என்பதற்குதான் இந்த நாய்களின் எஜமான விசுவாச சத்தம்.

சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த எச்.ராஜாவின் வானாளவிய இமேஜ் இதில் அடங்கி உள்ளது. அவர் ஊரிலேயே சுவரெழுத்து எழுதுறான் இவர் என்ன கிழித்தார் என சக சங்பரிவார் கூட்டம் காறி உமிழும் என்பதற்கு ஒரு பதில் தேவை அதற்குதான் “உன்னை கழுத்து அறுத்து போடுவேன். ரொக்கார்ட் பண்ணிக்க, போலீசு ஸ்டேசனுக்கு ஓடு!” என மிரட்டும்போதே அனைத்தையும் சொல்லி கொடுக்கிறான். இது சமூக வலைதளங்களில் தொலைகாட்சி ஊடகங்களில் பிரபலமாகும் எச்.ராஜா இமேஜ் கூடும். இது சங்கிகளின் மிக பழைய பார்முலா தமிழகம் இதையும் துடைத்தெறியும்.
ஜனநாயக இயக்கங்கள், பாசிச எதிர்ப்பு சக்திகள் இணைந்து பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்!

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here