1. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் “பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! I.N.D.I.A வை ஆதரிப்போம்”என்ற அறைகூவல் விடுத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது, மக்கள் அதிகாரம் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்றும், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி மாதத்தில் திருச்சியில் மாபெரும் அரசியல் மாநாடு நடத்துவது எனவும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
  2. காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்காற்று குழு உச்சநீதிமன்ற தீர்ப்பு என இறுதியாக வழங்கப்பட்ட எந்த உத்தரவுகளையும் மதிக்காமல் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அதே நேரத்தில் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்துடன் காவிரி பிரச்சனையில் பாரபட்சமாக செயல்படுவதையும், கர்நாடக மக்கள் மத்தியில் இனவெறியை தூண்டி ஆதாயம் அடையத் துடிக்கும் பாசிச பாஜகவை இப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது
  3. காவிரி நீர் கிடைக்காததால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு 01 ஏக்கருக்கு ரூபாய் 35000 என இழப்பீடு வழங்க வேண்டும்.அதேபோல்,விவசாய தொழிலாளிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டையும் ஒன்றிய பாஜக அரசு முழுமையாக உடனே தர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
  4. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தமிழக ஆளுநர் ரவி ஆர் எஸ் எஸ் பாஜக சார்பில் ஒரு போட்டி அரசாங்கத்தை தமிழகத்தில் நடத்தி வருவதை கண்டிப்பதுடன், அவருடைய அரசியலமைப்பு விரோத நடவடிக்கைகள் மீது குடியரசு தலைவர் நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும், ஆர்.என்.ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோருகிறது. இதனை வலியுறுத்தி தமிழக மக்களை ஒன்று திரட்டி போராடுவோம் என்று இப்பொதுக்குழு அறைகூவல் விடுக்கின்றது.
  5. இந்திய நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 33 சதவிகித பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்வரும் 2024 தேர்தலுக்கு முன்னரே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இதர பழங்குடிகள், பட்டியலின மக்கள்,பிற்படுத்தப்பட்ட மக்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீட்டுடன் அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது
  6. பல நூற்றாண்டு காலமாக சமூகத்தில் சரி பாதிக்கும் மேலாக உள்ள பெண்கள் பிறப்பின் அடிப்படையிலும், பாலின பேத அடிப்படையிலும் தீட்டு என சனாதனத்தை உயர்த்தி பிடித்து, ஒதுக்கி வைக்கப்பட்டதை ஒழித்துக் கட்டும் நோக்கில் தமிழக அரசு பெண்களையும் அர்ச்சகர்களாக நியமித்திருப்பதை இப்பொதுக்குழு வரவேற்கிறது
  7. மணிப்பூரில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பழங்குடி மக்களிடையே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையும் ஆர்எஸ்எஸ் பாஜகவை வன்மையாக கண்டிப்பதுடன் இந்த வன்முறை படுகொலைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறது
  8. நாடு முழுவதும் சாதி, மத, இன வெறுப்பு அரசியல் மூலம் வன்முறை படுகொலைகளை நிகழ்த்தி வரும் ஆர்எஸ்எஸ்,விஎச்பி, பஜ்ரங்தள், சனாதன் சன்ஸ்தான் போன்ற ஆர் எஸ் எஸ் சங்பரிவார் பார்ப்பன மதவெறி பாசிச பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய அனைவரும் போராட வேண்டுமென நாட்டு மக்களை இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது
  9. பாசிச பாஜகவின் புரவலரான அதானி ஊழல் முறைகேடு குறித்து ஹிண்டன் பார்க் அறிக்கை அம்பலப்படுத்திய பல லட்சம் கோடி ஊழல் மீதும், பாஜக அரசின் மீது சி ஏ ஜி அறிக்கை அம்பலப்படுத்திய ஏழரை லட்சம் கோடி ஊழல் மீதும், பிரிட்டன் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்ட அதானி ஊழல் பட்டியல் மீதும் ஒன்றிய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தகைய ஊழல் மீது உடனடியாக நீதி விசாரணை நடத்தி ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட வேண்டும் என இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது
  10. கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முழுமையாக வீழ்த்துவதற்கு போராடக்கூடிய அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தனி நபர்கள் உள்ளிட்டு அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி அமைப்பது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடுபுதுவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here