ருத்துவ படிப்புக்கு என்று நாடு முழுவதும் உள்ள மாணவர்களை தேர்வு செய்வதற்கு நீட் என்ற தேர்வு முறையை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்து அமல்படுத்துகிறது.

நீட் தேர்வு எப்போது வந்தது என்ற கேள்விக்கு காங்கிரஸ் ஆட்சியிலேயே வந்துவிட்டது என்று மட்டையை கட்டுகிறார்கள். பாஜகவினர். “நீ ஏண்டா தவறு செய்கிறாய் என்று கேட்டால், அவன் தான் முதலில் செய்தான்” என்று பேசுவது எந்த வகையில் சரியோ அது போன்ற கேடுகெட்ட பதில் தான் இது

“எந்தவொரு போட்டித் தேர்வும் வெற்றி, தோல்வி என்ற ஒன்றையொன்று விலக்கும் யதார்த்தங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. எல்லா தேர்வுகளுமே கடுமையானவை அல்ல. அவை போட்டி வடிவை எடுக்கிறபோதே தீவிரத்தன்மை கொள்கின்றன. குடிமைப் பணிகள், மருத்துவம், மேலாண்மை, மென்பொருள் பொறியியல் போன்ற மக்களால் ‘’டார்லிங் டெஸ்டிநேஷன்ஸ்’’ என்று பார்க்கப்படும் துறைகளில் நுழைவதற்கான தேர்வுகளே மிகக் கடுமையானதாக இருக்கின்றன. இந்தத் துறைகளில் கிடைக்கும் லாபங்களை, பலன்களைப் பெற பலரும் முயல்வதே இதற்குக் காரணம். இத்தகைய இடங்களை அடைவதற்கான இந்த ஆசைகள் இவற்றை லட்சியமாகக் கொண்டவர்களை அவர்கள் குழந்தைகளாக இருக்கையிலேயே போட்டி எனும் நோய்க்குறியில் சிக்கவைத்துவிடுகிறது.

எக்கனாமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி.

சிறப்பிற்குரிய இடங்களை அடைய இந்தத் தேர்வுகள் அவசியம் என்பதால் ஏராளமான மாணவர்களை ஒரு சில நூறு அல்லது ஆயிரம் இடங்களுக்காக போட்டியில் ஈடுபடவைக்கின்றன. பொதுவாக இந்தத் தேர்வுகள் வடிகட்டிகளாகவே செயல்படுகின்றன, வெற்றிகளை விட பல மடங்கு அதிக தோல்விகளை உருவாக்குகின்றன. உதாரணமாக, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), கிராஜுவேட் ரெக்கார்ட் எக்ஸாமினேஷன்ஸ் (ஜிஆர்இ), கிராஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் டெஸ்ட் (ஜிமேட்), இந்திய தொழில்நுட்பக் கழக கூட்டு நுழைவுத் தேர்வு (ஐஐடிஜெஇஇ), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற அமைப்புகளால் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்துகொள்ளும் பல லட்சம் பேர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.” என்று போட்டித் தேர்வுக்கான நியாயத்தை முன் வைக்கிறது எக்கனாமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி.

போட்டித் தேர்வுகளை நடத்துவது சரி என்று வாதாடுகிறது அறிவாளிகளையும், மூளை உள்ளவர்களையும் தேர்வு செய்ய காத்திருக்கின்ற தேர்வு ஆணையங்கள். ஒரு தேர்வுக்கு ஒரே முறையில் படித்து வருவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாத சூழலில் போட்டி தேர்வுகள் தேவையா என்றால் கட்டாயமாக அவற்றை புறக்கணிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக தமிழகத்தில் ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்சி, நவோதயா மற்றும் மெட்ரிகுலேஷன் என்று நான்கு வகையான கல்வி முறைகள் உள்ளன இதில் ஸ்டேட் போர்டு முறையில் படிக்கின்ற அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் சிபிஎஸ்சி படித்த மாணவர்களை போல தேர்வு எழுத முடியாது. எனவே போட்டித் தேர்வுகளுக்கு ஒரே பாடத்திட்டம் இல்லாத சூழலில் தகுதி, திறமை என்று பேசுவது சுத்த பார்ப்பன பயங்கரவாதம் ஆகும்.

இதையும் படியுங்கள்: நீட் – மாணவர்கள் தற்கொலை! குற்றவாளி யார்?

இந்த இலக்கணம் நீட் தேர்வுக்கு மட்டுமல்ல. அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பொருந்தும் என்ற போதிலும், போட்டி தேர்வுகள் மூலம் போட்டியில் ஈடுபடும் லட்சக்கணக்கானவர்கள் மத்தியில் இருந்து சில 100 பேர்களை வடிகட்டி அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து தகுதி வாய்ந்த பொறியாளராகவோ, தகுதி வாய்ந்த மருத்துவராகவோ உருவாக்கும் போது அவர்கள் யாருக்கு சேவை செய்வார்கள் என்பது சித்தாந்த ரீதியாகவே எழுப்பப்பட வேண்டிய கேள்வி ஆகும்.

போட்டித் தேர்வுகளில் மூலம் அதிகம் பயனடைகின்ற போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் புற்றீசல் போல பெருகி நாடு முழுவதும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இது கல்வித்துறையில் நடக்கின்ற சட்டபூர்வமான பகல் கொள்ளையாகும்.

140 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் வேலை வாய்ப்புகள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்ற சமூக சூழலில் எப்படியாவது போட்டியிட்டு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று பல ஆயிரம் பேர் முயற்சிப்பது தவிர்க்க முடியாது. “அனைவருக்கும் இலவசக் கல்வி! அனைவருக்கும் வேலை” என்ற ஒரு புதிய சமூக அமைப்பை உருவாக்குகின்ற வரையில் நிலவுகின்ற சமூக அமைப்பில் போட்டி போட்டு தான் ஆக வேண்டும் என்பதே நிலைமையாக உள்ளது.

சவுக்கு சங்கர் போன்ற ஊடக புரோக்கர்கள் முதல் ஆர்எஸ்எஸ் பாஜக சங்கீ முட்டாள்கள் வரை நீ ஏன் போட்டி போடுகிறாய்? நீ ஏன் மருத்துவராக முயற்சி செய்கிறாய்? நீ ஏன் படிக்க விரும்புகிறாய்? நீ ஏன் உன் சாதி பின்னணியில் இருந்து விலகி முன்னேற விரும்புகிறாய்? என்று நீ நீ என்று குற்றம் சுமத்துவது பாசிச பயங்கரவாதமே ஆகும்.

அனைவருக்கும் சமமான ஆடுகளம் இல்லாத கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிலவுகின்ற சூழலில் அனைவரையும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்வு செய்வோம் என்று ஆர் எஸ் எஸ் பாஜகவினர் கொக்கரிப்பது யாருடைய நலனுக்கு என்பது தெளிவாகவே அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. காலம் காலமாக ஆதிக்கத்திலிருந்து பார்ப்பன மேல் சாதி கும்பல்தான் போட்டித் தேர்வுகளில் அதிகம் பயனடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:கல்வி உரிமை மறுக்கப்பட்ட நாட்டில் நீட் எதற்கு? அடியோடு தூக்கி எறி!

பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் இட ஒதுக்கீடு போன்ற குறைந்தபட்ச சமூக நீதிக் கொள்கைகளால் அற்ப, சொற்ப சலுகைகளை பெற்று முன்னேறுவதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க வெறியும், சமூகத்தை மேலிருந்து அடக்கியாள வேண்டும் என்ற திமிர்த்தனமும் பார்ப்பன, மேல் சாதி கும்பலுக்கு ரத்தத்திலேயே ஊறிப் போய் உள்ளது.

சமூக ஊடகங்களிலும், முகநூல் பக்கங்களிலும் பகுத்தறிவு, முற்போக்கு, ஜனநாயக உரிமை போன்றவற்றை பேசாத சங்கிகளின் இணைப்பில் வாய்ப்பு இருந்தால் சென்று பாருங்கள். அவர்களிடம் கொப்பளிக்கும் ஆதிக்க சாதி வெறித்தனம், நிலவுகின்ற சமூக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு பாசிசமே மிகச் சிறந்த வழிமுறை என்று துணிச்சலுடன் வாதாடுகின்ற வாத முறைகள் போன்றவற்றை கண்டு கண்டிப்பாக ஆத்திரமடைவீர்கள்.

அனைவருக்கும் சமமான உரிமைகள் இல்லாத ஒரு நாட்டில் அனைவருக்கும் ஒரே மாதிரியான போட்டித் தேர்வுகளை நடத்துவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தகுதி, திறமை என்ற முகாந்திரத்தின் கீழ் பெரும்பான்மை மக்களை அடிமைகளாகவே வைக்கத் துடிக்கின்ற சமூக கட்டமைப்பு அடித்து நொறுக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையை நோக்கி நகராமல் அனிதாக்கள் முதல் ஜெகதீஸ்வரன் வரை நீட்டுகளில் நடந்த மரணங்களை நம்மால் தடுத்து விட முடியாது.

“கல்வியை தனியார்மய கொள்ளை யிலிருந்து விடுதலை செய்!” “அனைவருக்கும் இலவச கல்வி கொடு” “போட்டி தேர்வுகளை ரத்து செய்!” “அனைவருக்கும் சம வாய்ப்பு கொடு!” என்ற முழங்குவோம்.

  • கணேசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here