மனுஸ்மிருதி தானே உங்கள் சட்டம் மிஸ்டர் மோடி!

ஆர்.எஸ்.எஸ் 20 ஆண்டுகளாக தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றாமல் காவி கொடியை ஏற்றியதன் நோக்கமே கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத்தை துளியும் மதிக்காமல்...

0

ந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அரசியலமைப்பு தின விவாதம் நேற்று (13.12.2024) நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடத்தப்பட்டது. இன்று தொடர்ந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்டவை நீக்கப்பட வேண்டும் என்பதே இந்துத்துவ பாசிச கும்பலின் நோக்கம். அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் சட்டமாக மனுஸ்மிருதி  கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் ஆர் எஸ் எஸ் இந்து மத வெறி பயங்கரவாத கும்பலின்  எண்ணமும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தீவிர கருத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தது பாசிச கும்பல். மக்களிடம் எடுபடாததன் விளைவு தேர்தலில் பெரும்பான்மை இழந்து கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியில் தொடர்கிறது.

இதனை உணர்ந்துதான் மூன்றாவது முறையாக பதவி ஏற்க வந்த மோடி அரசியலமைப்பு புத்தகத்தை தொட்டு வணங்கி விட்டு பதவி ஏற்றார். இன்று நாடாளுமன்றத்தில் தாங்கள்தான் இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதாக பொய்யுரை வழங்கியுள்ளார்.

“ஆயிரம் ஆண்டு கால ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளதால் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாய் என்று கூறியுள்ள மோடி அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் மீது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்துள்ளதாகவும் கடந்த 10 ஆண்டு காலத்தில் எங்கள் அரசின் கொள்கை முடிவுகள் அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளன” எனவும் மோடி பேசி உள்ளார்.


படிக்க: அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதாக ஆர்எஸ்எஸ் பாஜகவின் கபட நாடகம்.


கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு என்ற பெயரை தவிர்த்து உள்ளே உள்ள முக்கியமான சரத்துக்கள் பலவற்றை கார்ப்பரேட்டுகள் நாட்டை சூறையாடுவதற்கு ஏற்றவாறும் காவி கும்பல் இந்திய மக்களை ஒடுக்குவதற்கு தகுந்தவாறும் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் அரசியலமைப்பை காக்க வந்த ஆபத் பாந்தவன் போல பேசியுள்ளார் பாசிஸ்ட் மோடி.

இதனை அம்பலப்படுத்தும் விதமாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். “அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியும் இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆர்.எஸ் .எஸ்-ஐ உருவாக்கிய தலைவர் சாவர்க்கர் கூறியிருப்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் தான் மூலமாக இருக்கிறது. ‘அரசியலமைப்பை பற்றி கூற வேண்டுமெனில் அதில் இந்தியர்கள் குறித்து எதுவும் இல்லை. நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் மதிப்பு மிக்கதாக இருப்பது மனுஸ்மிரிதி தான். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிப்பாக இருக்கிறது. மனுஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீகம் மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருக்கிறது’ என்று தான் சாவர்க்கர்  கூறியுள்ளார்.


படிக்க: பிறப்பின் அடிப்படையில் இழிவை ஒழித்துக்கட்டு மனுஸ்மிரிதி ஆகமத்தை கொளுத்து தீயிலிட்டு | மகஇக பாடல்


அவரது எழுத்துக்களில் அரசியலமைப்பு சட்டம் குறித்து எதுவும் இல்லை. அதாவது அரசியலமைப்பு சட்ட புத்தகம் மனுஸ்ருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடக்கும் போராட்டங்களும் இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடையில் தான்” என ராகுல் இந்து மதவெறி பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில்   அம்பலப்படுத்தி பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் 20 ஆண்டுகளாக தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றாமல் காவி கொடியை ஏற்றியதன் நோக்கமே கடந்த 75 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத்தை துளியும் மதிக்காமல் சாவர்க்கர் சொன்ன மனுஸ்மிருதியை பின்பற்றி வருகிறார்கள் இந்துமதவெறி பாசிஸ்டுகள். இவர்களுக்கு அரசியலமைப்பு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

படத்தை கிளிக் செய்யவும்.

அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்து போராட்டம் செய்ததன் நோக்கம் அது மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தியது, தீண்டாமை கொடுமையை நிகழ்த்தியது என பல்வேறு காரணங்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அதனை தற்போது செய்ய வேண்டிய கடமை பாசிசத்தை எதிர்த்து களமாடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு உள்ளது. மோடி சொல்லும் இந்தியாவின் ஒற்றுமை என்பதெல்லாம் மணிப்பூரிலும், உத்திர பிரதேசத்திலும் நாறிக் கொண்டிருக்கிறது என்பதை வீதி வீதியாக தெரியப்படுத்துவோம். பின்னர் மக்களே பாசிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவார்கள்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here