’எங்கே செல்லும் இந்தப்பாதை’ இளையராசா நன்றாக அறிவார்?

 இந்த செய்தியை மறுத்துள்ள இளையராஜா நான் ஒரு சுயமரியாதைக்காரன் வீணாக வதந்திகளை பரப்பாதீர் என்று பார்ப்பன கும்பலுக்கு வேகமாக ஜால்ரா வாத்தியத்தை வாசித்துள்ளார்.

2
இளையராஜா
“கோடி பணம் செலவு பண்ணி ராஜகோபுரம் உனக்கு, அதுக்கு கொடுத்தாரு 8 லட்சம் இளையராஜா யாரு?
அந்தப் பறையன் தொட்டா தீட்டுஇன்னா ரங்கநாதா, அவன் பணத்தில் மட்டும் கோபுரமா வேட்டு வேட்டு தான்”

என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு கோபுர திருப்பணி செய்வதற்கு எட்டு லட்ச ரூபாய் வழங்கிய இளையராஜாவையும், அம்பேத்கர், பெரியார் படங்களையும் கருவறைக்குள் அனுமதிக்காத ஸ்ரீரங்கம் பட்டர்களுக்கு எதிராக முழங்கியது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா அர்த்தமண்டபத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு  ‘கழுத்தை பிடித்து’ வெளியில் நிறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆண்டாள் சன்னதியில், அர்த்த மண்டபத்துக்கு வெளியே இருக்கும் வசந்த மண்டபத்திலிருந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். “கருவறைக்கு செல்லும் வழியில் இருக்கும் அர்த்த மண்டபத்தை நோக்கி இளையராஜா சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று ஜீயர்கள் தெரிவித்தனர். எனவே வழக்கமாக அனைவரும் பிரார்த்தனை செய்யும் இடத்தில் நின்று இளையராஜா வணங்கினார்” என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

நடந்தது என்ன?

மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு, கோயிலில் திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பங்கேற்றார்.

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த திவ்ய பாசுரம் இசைத்தொகுப்பிலிருந்து பாடல்களை இசைக்கலைஞர்கள் அங்கு பாடினர்.

ஆண்டாள் கோயிலில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் ஶ்ரீ ஆண்டாள் ஜீயர் மடத்தை சேர்ந்த, ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோருடன் இளையராஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு முன்பாக, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள ஆண்டாள் ரெங்கமன்னார் இருக்கக் கூடிய அர்த்த மண்டபத்துக்குள் ஜீயர்களுடன் நுழைய முயன்ற போது இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டார். அவரும் திவ்ய பணிவுடன் பவ்யமாக நின்று தனது தரிசனத்தை முடித்துக் கொண்டார்.

இளையராஜா சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாடசாலை ஆகம ஆசிரியரான கோகுலகிருஷ்ணன், “ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைக்காநசம் என்ற ஆகம விதிக்கு உட்பட்டது. தோளில் சக்கர அடையாளம் பெற்றுக்கொள்வது, உடலில் பெருமாள் பாத அடையாளங்களை பெறுவது உள்ளிட்ட ஐந்து தீட்சைகள் பெற்ற அனைவரும் கருவறைக்குள் செல்லலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலில் பெண்களே பூஜை செய்கின்றனர்.” என்கிறார்.

ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள இளையராஜா நான் ஒரு சுயமரியாதைக்காரன் வீணாக வதந்திகளை பரப்பாதீர் என்று பார்ப்பன கும்பலுக்கு வேகமாக ஜால்ரா வாத்தியத்தை வாசித்துள்ளார். சிம்பொனி முதல் குத்து பாடல் வரை அனைத்திற்கும் பல்வேறு வகைகளில் மெட்டு போட்டுக் கொடுத்த இளையராஜா பார்ப்பன கும்பலின் அடக்குமுறைக்கும் பொருத்தமான மற்றொரு மெட்டு போட்டுள்ளார் என்று தான் இதனை பார்க்க முடியும்.

இதே போல சம்பவம் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. பிரபல பரதநாட்டிய கலைஞரான ஜாஹீர் உசேன் பிறப்பால் இஸ்லாமியர் என்ற காரணத்தினால் ரங்கநாதரை வழிபட அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தப்பட்டார்.


படிக்க: எதார்த்த உலகை எட்டிக்கூட பார்க்க மாட்டீர்களா Ilaiyaraaja ? இசைஞானி இளையராஜாவுக்கு ஒரு கடிதம்!


ஜாஹீர் உசேன் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஆத்திரப்படவில்லை. மாறாக பார்ப்பனக் கும்பல் மனம் குளிரும் வகையில் வைர கிரீடம் ஒன்றை தயாரித்து ஸ்ரீரங்கநாதன் கோவிலில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

”திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜாஹீர்உசேன் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அங்கு ரங்கநாதருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடத்தை கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோரிடம் வழங்கினார்.

பின்னர் ஜாகீர்உசேன் கூறுகையில், அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடம் 3,160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகத கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம் மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்டு ரம்மியமாக உள்ளது. இதனை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆனது. உலகில் முதல்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு ஆகும்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

எங்கே இருக்கிறது சாதி என்று அப்பட்டமாக புளுகுகின்ற சனாதனவாதிகளுக்கும், சாதி ரீதியாக நாங்கள் இழிவுபடுத்தப்படுவதில்லை என்று பார்ப்பன கும்பலுக்கு பஜனை பாடுகின்ற கருப்பு பார்ப்பனர்களும் நிறைந்து நிற்கும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழியை தேடினார்கள் அர்ச்சகர் பயிற்சி பெறுவதற்கு முயற்சித்த இளைஞர்கள்.

தந்தை பெரியார் காலத்தில் நெஞ்சில் குத்திய முள் என்று முள்ளாக தைக்கப்பட்ட அனைத்து ஜாதிகளும் அர்ச்சகராகலாம் என்ற அரசாங்கத்தின் ஆணைக்கு தடை மேல் தடையாக விதித்து பார்ப்பன கும்பல் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

இதனை எதிர்த்தும் அனைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் சார்பாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்புகளும் இணைந்து உச்சநீதிமன்றம் வரை அந்த வழக்கை நடத்தி வருகிறது.


படிக்க: அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம்! பார்ப்பன எதிர்ப்புப் போரில் கிடைத்த ஆயுதம்!


2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இவ்வாறு பயிற்சி பெற்ற மாணவர்களில் 24 பேருக்கு அர்ச்சகர் பணி நியமனம் செய்து ஆணை வெளியிட்டது. அதில் ஆறு கோவில்கள் ஆகம விதிகளின்படி செயல்படக்கூடிய கோவில்களாகும்.

இந்த கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் கருவறைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக பார்ப்பன அர்ச்சகர்களுக்கு எடுபிடி வேலை செய்வதற்கும் வெளியில் நின்று தேங்காய் உடைத்து தருவதற்கும் பயன்படுத்தப்படுகிறார்களே தவிர கடவுளைத் தொட்டு பூஜை செய்வதற்கோ, அர்ச்சனை செய்வதற்கோ அனுமதிக்கப்படவில்லை என்ற சாதி தீண்டாமை இழிவு இன்னமும் நீடிக்கின்றது.  இதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  இம்மாத இறுதியில்  விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளையராஜா பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படாததும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர் பணி செய்ய மறுக்கப்படுவதும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் அல்ல.

பழக்கவழக்கம் என்ற முறையில் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் நிலவி வருகின்ற பார்ப்பனிய, சனாதன அடக்குமுறைகளின் வடிவம் தான் என்பதை இழிவுபடுத்தப்பட்ட இளையராஜாவின்  ரசிகர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

பிறப்பின் அடிப்படையில் சாதி தீண்டாமை கொடுமைகளை நடத்தி வரும் பார்ப்பன    (இந்து) மதத்தில் உனக்கென்ன வேலை என்ற கேள்வியை எழுப்புவோம்!

  • கணேசன்.

2 COMMENTS

  1. தோழர் கணேசன் அவர்களின் கட்டுரை சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. இதில் முக்கியமான விடயம் இளையராஜா திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஜீயர்களாலும், பட்டர்களாலும் – இவர் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பின்தொடர்ந்து ஆண்டாளை வழிபட வழிபட மறுத்ததும், அதன் வாசல் படியில் இன்று கூட வழிபடக்கூடாது என கீழே இறக்கி விட்டதும், அர்த்த மண்டபத்தில் கூட அவர் அனுமதிக்கப்படாததும் பார்ப்பன சனாதனத்தை மேலும் மேலும் வலுப்பெறச் செய்யும் கேவலம் என்பதை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். பலரும் இளையராஜாவைப் பற்றி சொல்லுகின்ற பொழுது., அவர் மகாக் கோவக்காரர்; மிகவும் கடிந்து கொள்ளக் கூடியவர், தனக்கு சரியான பட்டதனை பட்டவர்த்தனமாக உடைத்து எறிந்து விடுவார் – என்றொரு பிம்பம் அவரைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாமும் இவர் ஊடகங்களுக்கு அளித்த பல்வேறு பேட்டிகள் வாயிலாகவும், மேடைகளில் அவர் கோப உணர்ச்சியுடன் கத்தி பேசியது தொடர்பாகவும் ஊடகங்களில் பார்த்திருக்கின்றோம். மிகச் சாதாரண விடயத்திற்கு கூட அவர் முகத்தை கருணகடூரமாக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கெல்லாம் அறிவே இல்லை என்ற பாணியில் கடுஞ்சொற்களால் இவர் பேசியிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட இவர் தற்போது திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் அதற்கு முன்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலிலும் முறையே பார்ப்பன
    ஜீயர்களாலும், அர்ச்சகர்ராலும் அவமானப்படுத்தப்பட்டு கழுத்தைப் பிடித்து
    வெளியே தள்ளிய பிறகும்…’அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை; வீண் வதந்தி பபரப்பாதீர்கள்; நான் ஒரு சுயமரியாதைக் காரன்…’ – என்று முழுப் பூசணியை சோற்றில்
    மறைக்கிறார் என்றால் இவரைப் போன்ற ஒரு இழி பிறவியை எங்கேனும் காண முடியுமா? அப்படி என்றால் கோவிலில் அவர் அவமானப்படுத்தப்படுகின்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பொய்யானதா? பல்வேறு தொலைக்காட்சிகளில் இது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டு கடும் விமர்சனங்கள், வெளியிடப்பட்டது பொய்யானதா? youtube சேனல் உட்பட பல்வேறு ஊடகங்களும் ஜீர்கள் பட்டர்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகளை தோலுரித்தது பொய்யானதா? ஆக சாதாரண மக்களிடத்திலே தனது ‘வீரத்தையும்’, தான் ஒரு மாபெரும் அசைக்க முடியாத விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ‘ஞானி’ என்ற பிம்பத்தையும் வெளிக்காட்டிக் கொள்ளும் இந்த அற்ப மனிதர் இளையராஜா பார்ப்பனர்களின் காலடியில் விழுந்து கிடந்து அதாவது வெள்ளைக்காரனிடம் அன்று சாவர்க்கர் & கோ. போன்ற பார்ப்பனக் கூட்டம் ஷூவை நக்கி சுக போகங்களை அனுபவித்தது போல, அவர்களைப் பின்பற்றி இளையராஜாவும் தன்னுடைய நடவடிக்கைகளை தகவமைத்துக் கொண்டிருப்பது வெட்கி தலை குனிய வேணடிய விடயமாகும். கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல ‘இந்து’வாக குறுக்கு வழியில் ஆக்கப்பட்ட அருதிப் பெரும்பான்மை மக்களின் சுயமரியாதை காப்பாற்றப்பட அவர்கள் விரும்புகிறார்களோ விரும்பவில்லையோ தன்னுடைய கடமை அம்மக்களின் சுயமரியாதையை காப்பாற்றியே ஆக வேண்டும் என்று தனது 95 வயதிலும் கடுமையான நோய்வாய்ப்பட்டு மூத்திர வாளியைச் சுமந்து கொண்டு, ஊர் ஊராய்ச் சென்று தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியையும் தன்மான உணர்வையும் தன் இறுதிக் காலம் வரையிலும் உருவாக்கிக் கொண்டே இருந்தார். தான் இறப்பதற்கு ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சென்னை தி.நகரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் என் நெஞ்சில் தைத்த முள்ளாக – உங்களை எல்லாம் சூத்திரர்களாக பஞ்சமர்களாக பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாக விட்டுச் செல்கின்றேனே என்று கண்கலங்கி பேசியதை அவருடைய மரண சாசன வாக்குமூலத்திலிருந்து அறியலாம்! எப்படி பெரியார் பிரதிபலன் பார்க்காமல் சூத்திரபஞ்சமும் மக்களுக்கு உழைத்தாரோ, அதே பாணியில் இன்று இளையராஜா போன்ற கழிசடைகள் அனைத்து அவமானங்களையும் தாங்கி கொண்டு இருந்தாலும் நாம் சுயமரியாதை உணர்வுடன் தந்து பெரியாரின் வழியை பின்பற்றி வீதியில் இறங்கி போராடி அர்ச்சகர்கள் ஆகும் உரிமையையும், கருவறைக்குள் நுழையும் உரிமையையும் மீட்டெடுப்போம்! கோவில்கள் உருவாவதற்கு கல் சுமந்தவர்கள் நாம்; சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு கலவையை உருவாக்கிக் கொடுத்தவர்கள் நாம்; கொத்தனார் வேலை பார்த்தது நாம் சித்தாள் வேலை பார்த்தது நாம் மரவேலை பார்த்தது நாம் வான் உயர கோபுரங்களை எழுப்பியது நாம் கோபுரத்தின் உச்சியிலே கலசங்களை உருவாக்கியது நாம் இதற்கெல்லாம் நிதியை அள்ளிக் கொடுத்தது புரியாத்தனமான பிற்படுத்தப்பட்ட வகுப்பு சேர்ந்த மன்னர்கள் தான்… இவற்றில் எதிலும் எள்ளளவும் பங்கு பெறாத பார்ப்பனச் சங்கிகள், கோவில்கள் அனைத்தும் கம்பீரமாக கட்டி முடிக்கப் பெற்றவுடன், ‘அனைத்து சூத்திரபஞ்சம் அவர்களும் கோயிலை விட்டு வெளியேறு; இனி கோவில்கள் எங்களுடையது (பார்ப்பனர்களுடையது) ; நீங்கள் உள்ளே வந்தாலே கோவில் தீட்டாகிவிடும்; சாமி சிலைகளை தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும்; எனவே தீட்டினைப் போக்க 108 கலசங்கள் தண்ணீர் ஊற்றி சம்ரோஷனம் செய்து பார்ப்பனர்களாகிய நாங்கள் இதற்காக
    ‘படாத பாடுபட்டு’ மறுபடியும் சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது…’ – என்று இந்த பார்ப்பன அழுக்கு சோம்பேறிகள் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் என்றால் இவர்களை எதனைக் கொண்டு அடிப்பது? எனவே அய்யா வைகுண்டர், கேரள பெரியவர் நாராயண குரு, தந்தை பெரியார், ஜோதிராவ் பூலே போன்ற நமது வழிகாட்டிகள் வகுத்து தந்த வழியில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட – அவர்களால் சூத்திர பஞ்சவர்கள் என வஞ்சிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்! சனாதன சோம்பேறி பார்ப்பனக் கூடத்தை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்! நமது சுயமரியாதையையும் உரிமைகளையும் தக்க வைக்க வேண்டும்! இது இன்றைய காலக்கட்டத்தில், கார்ப்பரேட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, காவிப் பாசிசத்தையும் ஒரு சேர வீழ்த்த பயன்படும்!
    கட்டுரையாளர் தோழர் கணேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள! வாழ்த்துக்கள்!!

  2. மீண்டும் கூறுகிறேன். கண் பார்வை குறைபாடு காரணமாக மேற்கண்ட எனது பின்னூட்டத்தில் நிறைய பிழைகளை உருவாக்கி விட்டேன். அதற்காக வருந்துகிறேன். அன்பு ஊர்ந்து சரி செய்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here