
இந்திய பார்ப்பனர்கள் மற்றும் மேட்டுக்குடிகளின் கனவான அமெரிக்காவில் குடியேறுவது என்பது இந்த பிறவியின் பயனை எடுத்து விட்டதாகவே முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கு சென்று வரும் அனைவரும் இந்தியாவையும், அமெரிக்காவையும் ஒப்பிட்டு பேசுவதும், அமெரிக்கா ஒரு ’பூலோக சொர்க்கம்’ என்று துதிபாடுவதும் நிரந்தர கதையாகி வருகிறது.
இந்திய பார்ப்பனர்கள் மற்றும் மேட்டுக்குடிகள் சுமார் 54 லட்சம் பேர் அமெரிக்காவில் குடியுள்ளனர். அவர்கள் ’கிரீன் கார்ட் ஹோல்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். பாசிச மோடி அமெரிக்காவிற்கு பயணம் சென்றாலும் அல்லது இந்தியாவில் உள்ள பிரபலங்கள், மேட்டுக்குடிகள், சினிமாக்காரர்கள் பயணம் சென்றாலோ ஒன்று கூடி வெறிக்கூச்சல் போடுகின்ற கும்பலும் இவர்கள்தான்.
இதைத் தவிர அமெரிக்காவில் எப்படியாவது குடியேறி விட வேண்டும் என்று இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலிருந்து அதிகமாக சென்றுள்ள உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேராகும்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாதியும், உலகப் பேரரசின் முடி சூடா மன்னனாக தன்னை கருதிக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றப் போவதாகவும், அந்த நாட்டில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் அங்கு குடியுரிமை என்று அகம்பாவமாகவும், திமிர்த்தனமாகவும் அறிவித்தது முதற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 70 லட்சம் பேர் இதுபோன்று பல்வேறு நாடுகளில் இருந்து முறையான விசா மற்றும் குடியேற்ற உரிமை பெறாமல் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய பார்ப்பனர்களான சுந்தர் பிச்சை போன்றவர்கள் அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் தேர்வாகும் போது, ’நம்மவா அங்கிருந்து வேலை செய்கிறா’ என்று பெருமை பேசுகின்றனர் அமெரிக்க அடிமை பார்ப்பனர்கள்.
ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறினார்கள் என்ற போர்வையில் அங்கு உழைக்கும் மக்களாக உள்ள பல்வேறு நாட்டினரையும் குறிப்பாக இந்தியர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கை துவங்கி விட்டது.
செப்டம்பரில் நிறைவடைந்த அமெரிக்காவின் 2024ஆம் நிதியாண்டில், ஆயிரம் இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளர் ராய்ஸ் பெர்ன்ஸ்டைன் முர்ரே அறிவித்தார்.
படிக்க:
🔰 பாசிஸ்டின் நண்பர் அமெரிக்காவில் மீண்டும் அதிபர்!
🔰 அமெரிக்கக் குடியுரிமை: மோடியை அவமானப்படுத்தும் ‘தேஷ்பக்தாள்கள்!’
அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது 104 பேர் கொண்டு வந்து இந்தியாவில் கொட்டப்பட்டுள்ளனர். நாடு கடத்துவது என்று பெயரில் மனித குலத்தின் அனைத்து விழுமியங்களுக்கும் எதிராக கை, கால்களில் சங்கிலி போட்டு அவமானப்படுத்தி கொண்டு வந்து கொட்டி விட்டுப் போகிறார்கள்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், மோடியின் குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33 பேர் குஜராத்திகள் வியாழனன்று மாலையில் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். இது வழக்கமான நடவடிக்கை தான் என்று சப்பை கட்டு கட்டுகிறார் அமெரிக்காவின் ஆகச்சிறந்த அடிமையும், விசுவாசியுமான வெளியுறவுத்துறை அமைச்சர் திருவாளர் ஜெய்சங்கர்.
அமெரிக்காவில் உள்ள பார்ப்பனக் கும்பலும், மேட்டுக்குடிகளும் எந்த விதமான அச்சமும் இன்றி சொகுசாக வாழ்கின்றனர் அவர்கள் பெயரளவில் இந்தியர்கள் என்றாலும் அவர்கள் வேறு வர்க்கம். அங்கு உழைப்பதற்கு செல்ல பல்வேறு வழிமுறைகளை கையாண்டு, ’சட்டவிரோதமாக குடியேறியவர்கள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு, துரத்தப்படுகின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான் நமது வர்க்கத்தை சார்ந்தவர்கள்.
இனிமேலாவது அமெரிக்காவில் குடியேறிய தமிழர்கள் முன்னுரிமை பெற்று விட்டார்கள்; அமெரிக்காவில் இந்தியர்கள் எம்பி ஆகிவிட்டார்கள்; அமெரிக்காவில் இந்தியர்கள் மேலதிகாரிகள் ஆகி விட்டார்கள் என்று கூச்சலிடுவதை நிறுத்துங்கள்.
வாழ்வதற்கு வழி இல்லாமல் வேலை தேடி, சொந்த இடத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்ற கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளிகளாகவும் உலகம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். இது மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்க துப்பில்லாத முதலாளித்துவ சமூக அமைப்பின் தோல்வி என்பதை புரிந்து கொண்டு அவர்கள் முகத்தில் காரித் துப்புங்கள்.
அமெரிக்க ஜனாதிபதியான உலகின் கொடிய பயங்கரவாதி ட்ரம்ப் பதவியேற்ற போது வாழ்த்து தெரிவித்த இந்திய ஒன்றிய பிரதமரான பாசிச மோடி வெக்கங்கெட்ட முறையில் அமெரிக்காவை துதி பாடுவதும், ஆர்எஸ்எஸ் பாஜகவில் உள்ள பார்ப்பன சங்கி கும்பல் அமெரிக்காவை பற்றி உயர்வாக பேசுவதும் அருவருப்பானது என்பதை அவர்களுக்கு புரியும் மொழியில் உணர்த்துவோம்.
சல்லடையாக துளைக்கப்பட்ட காசா நகரத்தை அமெரிக்கா எடுத்துக் கொள்ளும் என்றும், அங்கே உள்ள 20 லட்சம் பேர் காசாவை விட்டு வெளியேற வேண்டும். அதனை புனர் நிர்மாணம் செய்து அமெரிக்கா நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதையும், அதனை இஸ்ரேலின் பாசிச பிரதமரான நெதன்யாகு ஆதரித்திருப்பதும் உலகம் எத்தகைய கொடுமையான பயங்கரவாதிகளின் கையில் சிக்கியுள்ளது. இதற்குப் பெயர்தான் மனித குலத்துக்கே எதிரான பாசிச பயங்கரவாதம் என்பதை மீண்டும் மீண்டும் பெரும்பான்மை மக்களிடம் கொண்டு செல்வோம்.
அமெரிக்க பயங்கரவாதம் இப்போது பாசிச பயங்கரவாதமாக உக்கிரமடைந்துள்ளது என்ற உண்மையை இந்திய உழைபாளி மக்களுக்கு உணர்த்துவோம். ”இந்திய உழைப்பாளி களுக்கு அவமானத்தை தேடித்தந்த பாசிச மோடியே, அதன் கொத்தடிமை அமைச்சர் கூட்டமே பகிரங்க மன்னிப்பு கேள்” எனப் போராடுவோம்!
- மருது பாண்டியன்.