
“நான் இந்தியாவின் பிரதமாராகிவிட்டால் அமெரிக்கர்கள்தான் விசாவுக்காக இந்தியத் தூதரக வாசலில் தவம் கிடப்பர்” என்று அகிலஉலக விஸ்வகுரு 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் அடித்து விட்டார். அப்போது அவருக்கிருந்த செல்வாக்கு மற்றும் ஊடக வெளிச்சத்தினால் உண்மையிலேயே அப்பாவி இந்தியர்கள் பலர் நம்பிவிட்டனர். அதிலும் சிலர் “வெயில், வியர்வை அலர்ஜி உள்ள நம்ப அம்பிகளை கால்கடுக்க நாள்கணக்கில் வெயிலில் நிற்க விடும் மிலேச்சர்களை நன்னா பழிக்குப்பழி வாங்கிடலாம் ஓய்” என்று பூணூலை உருவிக்கொண்டிருந்தனர். ஆனால் விஸ்வகுரு இந்தியாவின் பிரதமராகி 10 ஆண்டுகள் கடந்தபின்னரும் அம்பிகளின் சோகக்கதைதான் தொடர்கிறதேயொழிய எந்த மிலேச்சனும் இந்திய தூதரகங்களில் வரிசையில் நிற்கவில்லை.
2014 -ஆம் ஆண்டில் தொடங்கிய மோடியின் பொற்கால ஆட்சியில் இதுவரை சுமார் 13,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். இது சட்டபூர்வமான குடியேற்றம் பற்றிய விவரம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 90000-க்கும் மேல் உள்ளனர் என்றால் உலகம் முழுவதிலும் இந்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டும் எனலாம். ஒருபுறம் மோடியின் பொற்கால ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியுரிமையைத் துறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. மறுபுறம் எப்படியாவது இந்தியாவைவிட்டு வெளியேறி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக புகுந்து பிழைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதன் அண்டைநாடான மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்ததாக உள்ளது.

எப்படியாவது onsite transfer வாங்கி தனது கனவு உலகமான அமெரிக்காவைப் பார்த்துவிடவேண்டும் என்ற வேட்கையுடன் வாழும் அம்பிகளும் பிறரும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் அங்கேயே செட்டில் ஆவதற்கு ஆராய்ந்து கண்டுபிடித்த ஒரு வழிதான் green card பெற்றுக்கொள்வதும் அங்கேயே திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதும். அமெரிக்காவில் இருக்கும்போது குழந்தை பெற்றுக்கொண்டால் அமெரிக்க சட்டப்படி அக்குழந்தை தானாகவே அமெரிக்க குடிமகனாகிவிடும். அதன் அடிப்படையில் அதன் பெற்றோரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாகிவிடுவார்கள். இதற்குத்தான் தற்போது ஆப்பு வைத்திருக்கிறார் பாசிசக் கோமாளி டிரம்ப்.
தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை இரத்து செய்வேன் என்றும், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களைக் கண்டறிந்து நாடுகடத்துவேன் என்றும் தேர்தல் பரப்புரைகளில் பிரச்சாரம் செய்தார். அதற்குப் பின்னரும் பெரும்பாலான அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப்-க்குத்தான் ஆதரவு அளித்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இந்தியாவில் உள்ள மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களையும், பழங்குடியினரையும் அகதி முகாம்களில் அடைக்கும் நோக்கத்தோடு CAA, NRC, NPR சட்டம் கொண்டுவரப்பட்டபோது அமெரிக்காவில் வசிக்கும் இதே தேஷ்பக்தாள்கள் அவற்றிற்கு ஆதரவாகப் பேரணி நடத்தினர். ஆனால் தற்போது பிப்ரவரி 20-க்குப் பிறகு அந்நியநாட்டு பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது என்ற நிர்வாக உத்தரவை டிரம்ப் பிறப்பித்ததும் தற்போது விழிபிதுங்கி குழந்தைகளை குறைப்பிரசவத்தில் வெளியே எடுத்துவிட மருத்துவமனை வாசலில் கால்கடுக்க நிற்கின்றனர்.
படிக்க:
♦ பிரிக்ஸ் நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்! சரியும் உலக மேலாதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சி !
♦ டிரம்ப் 2.0: வெடிக்க காத்திருக்கும் அபாயங்கள்!
இந்த வெளிநாடுவாழ் தேஷ்பக்தாள் கும்பல்தான் மோடி இந்தியாவை ஒரு சொர்கபுரியாகி மாற்றிவிட்டார் என்று மோடி அமெரிக்கா போனபோதெல்லாம் முண்டியடித்துக்கொண்டு “பாரத் மாத்தாக்கி ஜெய்” கோசம் போட்டுக்கொண்டிருந்தது. இந்தியாவில் உள்ளவர்களுக்கு தேசபக்தி விபூதி அடித்துக்கொண்டு பிறப்பின் அடிப்படையில் சாதிஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதனத்தை அமெரிக்காவரை பரப்பிக்கொண்டிருந்த இந்தக் கும்பல் இன்று பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கிடையாது என்று டிரம்ப் அறிவித்தவுடன் மோடியின் ஆட்சியில் பூலோக சொர்க்கமாக மாறியுள்ள இந்தியாவுக்குத் திரும்பமனமில்லாமல் மருத்துவமனை வாசல்களில் தவம் கிடக்கிறது.
ஆகமொத்தம் அமெரிக்காவில் வசிக்கும் தேஷ்பக்தாள்கள் குறைப்பிரசவத்தில் குழந்தை பெறுவதன்மூலம் உள்ள சிக்கல்களை எதிர்கொண்டு “ரிஸ்க்” எடுக்க விரும்புகிறார்களேயொழிய யாரும் மோடியின் “விக்ஷித் பாரதத்துக்கு” திரும்பி வந்து “ரஸ்க்” சாப்பிடத் தயாரில்லை.
– ஜூலியஸ்