கலவர இந்துமுன்னணியை தடை செய்! மாவட்ட ஆட்சியரிடம் மனு!

திருச்சி மாவட்ட ஆட்சியரிம் மனு அளிக்க வந்த தோழர்கள்

மிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச கும்பல் ஆட்சியதிகாரத்தை பிடிப்பதற்காக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் பிரச்சினைகளில் இரு தரப்பினரிடையே மோதலை உண்டாக்கும் விதமாக இந்துமதவெறி அரசியலை கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை அமைப்பான இந்து முன்னணி.

மண்டைக்காடு கலவரம் தொடங்கி பல கலவரங்கள் உருவாததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்துமதவெறி அமைப்பான இந்துமுன்னணி. இதற்கு முன்பு சென்னிமலையில் கலவரம் செய்ய முயன்று தோற்றுப் போன இந்து முன்னணி, இப்போது திருப்பரங்குன்றத்தில் மதவெறி அரசியலை செய்து வருகிறது.

இந்த போக்கு தமிழ்நாட்டில் சகோதரத்துடன் வாழும் மக்களிடையே பிளவை உண்டாக்குவதோடு, கலவரத்தை உருவாக்கி தமிழ்நாட்டின் சமூக அமைதியை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. இதன் அடிப்படையில் கலவர இந்துமுன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் மகஇக, புஜதொமு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் கலந்துக் கொண்டனர்.

000

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பிரச்சனைக்கு காரணமான இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தலைமையில் அதன் தோழமை மற்றும் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து இன்று  (07.02.2025) காலை 11.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றோம்.

மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் (DRO)புகார் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமை தாங்கினார். ம.க.இ.க மையக் கலைக்குழு பொறுப்பாளர் தோழர் லதா, பு.ஜ.தொ.மு மாவட்ட மாவட்டத் துணைத் தலைவர்கள் தோழர்கள் ஆனந்த், செந்தில், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு  சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் மணலிதாஸ், முன்னாள் தலைவர் தோழர் செல்வராஜ், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் செழியன், பொருளாளர் தோழர் கார்க்கி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தில்லைநகர் பகுதி பொறுப்பாளர் தோழர் தில்லைமுரசு, ரெட் பிளாக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் A.C.ராமலிங்கம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம், வி.சி.க, ரெட் பிளாக் கட்சி, மக்கள் உரிமை மீட்பு இயக்கம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் என நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளாக பங்கேற்றனர்.

தகவல்:

ம.க.இ.க
பு.ஜ.தொ.மு
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 8056905898,
8098604347.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here