சென்னை மாம்பலத்தில் உள்ள கோ-சோலையில் ஜனவரி 15 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குனர் ‘காமகோடி’ கீழ்க்கண்டவாறு உரையாற்றியுள்ளார்.
‘கோமியம் சிறந்த மருத்துவக் குணம் உடையது. இது காய்ச்சலைக் கூட குணமாக்கும்” என்று பலவாறு உரையாற்றி இருந்தார். இதன் உட்பொருள் ‘நாட்டு மக்கள் மாட்டு மூத்திரத்தை குடியுங்கள்’ என்பதே ஆகும்.
இவர் சென்னை ஐஐடி-யில் இயக்குனராக பணிபுரிகிறார். ஐஐடி என்பது அகில இந்திய அளவில் தொழில்நுட்பத் துறையில் பயிற்றுவிக்கும் உயர்கல்வி நிறுவனம். அப்படிப்பட்ட துறையின் இயக்குனரே இவ்வளவு பிற்போக்குத்தனமான – கீழ்த்தரமான – அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறியிருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. இவரது பெயரோ ‘காமகோடி’! இதன் மூலமாகவே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். ஆம், உறுதியாக இவர் ஒரு சங்கிதான்.
இந்தப் பிரச்சாரத்தை அவர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்துத்துவ அமைப்புகளில் பங்கேற்று அதன் பொறுப்புக்களில் இருந்து கொண்டு பிரச்சாரம் செய்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்று’… என்று கடந்து போய்விடலாம்.
ஆனால் இவர் ஐஐடி இயக்குனராக இருந்து கொண்டு இப்படிப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசுவதற்கு – ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கு இவருக்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது. எனவே இவரது உரைக்கு மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தனது வன்மையான கண்டனத்தை இதன் மூலம் பதிவு செய்கிறது. தமிழ்நாடு அரசு இவரது அறிவியல் பூர்வமற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதோடு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக சில மாணவர் அமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில், கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகும் என அறிவியலுக்கு எதிரான – ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தை காமகோடி பேசி இருக்கிறார்; அறிவியல்படி கோமியம் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப் பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்கு மேலும் தீங்கு விளைவிக்கக் கூடிய – நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும். இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில் அறிவியலை ஊக்குவிக்க வேண்டிய இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனரே அறிவியலுக்கு எதிராகப் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘பசுக்கள் – எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது; இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது; மனிதர்கள் கோமியத்தை குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கோமியத்தை மனிதர்கள் குடிக்கலாம் என எப்போதுமே பரிந்துரைக்க முடியாது’ எனக் கூறியுள்ளது.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, “ஐஐடி இயக்குனர் இதுபோன்ற ஆதாரம் இல்லாத கருத்துக்களை தெரிவிப்பது தவறு; கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளது என்றால் அதனை ஆராய்ச்சி செய்து ஆதாரப்பூர்வமாகப் பேசுங்கள்; அப்படி இல்லை என்றால் இது அரசியல் சார்புடையதாக மாறிவிடும்” – என்று கூறியுள்ளார்.
படிக்க: ♦ பசுவின் சாணமும் மூத்திரமும் உனக்கு! பசுவின் கறி எனக்கு!
நிலைமைகள் இவ்வாறிருக்க, இந்த காமகோடி என்பவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் நமது தமிழ்நாட்டின் ஆளுநருமான R.N.ரவியைப் போலவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக, இந்துத்துவ மதவெறி பிடித்த பிராணியாக இருப்பார் போலும்.
அதனால் தான் வடநாட்டில் நாம் கண்முன் காணும் மாடுகள் மூத்திரம் பெய்யும் பொழுதே அதனை இரு கரங்களால் ஏந்தி காட்டுமிராண்டிகள் போல் பருகுகின்ற சங்கித்துவ கருத்தியலாளர்களும், அல்லது மூடநம்பிக்கையாளர்களும், சாணத்தை ருசித்து சாப்பிடுகின்ற பிராணி வகைப்பட்டவர்களையும் நாம் தொடர்ந்து கண்டு அவதானித்து வருகிறோம்.
“ஐஐடி இயக்குனர் இதுபோன்ற ஆதாரம் இல்லாத கருத்துக்களை தெரிவிப்பது தவறு; கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளது என்றால் அதனை ஆராய்ச்சி செய்து ஆதாரப்பூர்வமாகப் பேசுங்கள்; அப்படி இல்லை என்றால் இது அரசியல் சார்புடையதாக மாறிவிடும்”
அறிவியல் சார்ந்து உலகினை நோக்கும் இந்திய நாட்டினராக இருந்தாலும் சரி; உலகின் வெவ்வேறு நாடுகளில் உள்ளோராயினும் சரி; இந்த இழி நிலையை – கேவலத்தை – அசிங்கத்தை – அவமானகரமான செயல்களை என்னவென்று கருதுவார்கள்?
இந்து மதம் என்ற போர்வையில் காட்டுமிராண்டி காலத்தில் கூட நடைபெறாத சம்பவங்களை இவர்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பார்களேயானால் இவற்றை எவ்வளவு காலம் நாட்டு மக்கள் சகித்துக் கொண்டிருப்பது?
படிக்க: ♦ உணவு பாசிசம்: அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை!
உணவு வகையில் மாட்டுக்கறி உண்பது கொலை செய்யக்கூடிய அளவிற்கான பெரும் குற்றமாம். ஆனால் அந்த மாட்டுக் கழிவுகளான அதன் மூத்திரத்தையும், சாணத்தையும் குடிப்பதும், உண்டு ருசிப்பதும், மிக உயர்ந்த வடிவிலான விஞ்ஞான முறைமையாகுமாம்! எவ்வளவு கேவலம்?
பிறகு எதற்கு நாடு முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் கோடி ரூபாய் செலவில் எண்ணற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உருவாக்க வேண்டும்? மக்கள் அனைவரையும் கால்நடைகள் அடைக்கப்படும் தொழுவங்களிலும், குறிப்பாக பசுக்களை அடைக்கும் கோ-சோலைகளிலும் நோய்வாய்ப்படும் மக்களை வரிசைக் கிரமமாக நிற்கச் செய்து மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் செய்தும், ஆர்எஸ்எஸ்- பாஜகவின் ‘அறிவியல்’
கருத்துப்படி மாட்டுச் சாணத்தையும்
உண்ணச் செய்யுங்கள்!?
போகிற போக்கைப் பார்த்தால், இவர்கள் ஆட்சியில் நீடிக்கும் வரை நாட்டு மக்களை இன்னும் எவையெவைற்றையெல்லாம் குடிக்கச் சொல்லப் போகிறார்களோ? எதை எதை உண்ணச் சொல்லப் போகிறார்களோ பேரபாயமாக உள்ளது. மக்களே, எச்சரிக்கை!
இந்த லட்சணத்தில் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பெரும் பதவியான இயக்குனராக காமகோடி என்ற காட்டுமிராண்டி பணியாற்றிக் கொண்டு மக்களை மாட்டு மூத்திரத்தைக்
குடிக்கப் பரிந்துரைப் பாரேயானால் இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களை கல்வி நிறுவனங்களில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டுமா? வேண்டாமா?

ஆளுநர் பதவியை ஆர் எஸ் எஸ்-ன் ஆர்.என்.ரவி கையில் வைத்துக் கொண்டு தன் ஆளுகைக்கு உட்பட்ட அல்லது உட்படாத அனைத்திலும் நுழைந்து எப்படி ஆர்.எஸ்.எஸ் – பாஜக – இந்துத்துவா ‘சித்தாந்தங்களை'(?)ப் பரப்பி ஆள் பிடிக்கிறாரோ, அதேபோல சென்னை ஐஐடி இயக்குனராக காமகோடி இருந்து கொண்டு மாணவ – மாணவியரிடம் இந்த கேடுகெட்ட ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவா பாசிச கொள்கைகள் அடங்கிய கருத்துக்களைத் தானே தொடர்ந்து விதைத்துக் கொண்டிருப்பார்? அந்தக் கொள்கைகளுக்கு ஆள் பிடித்துக் கொண்டிருப்பார்! யாராவது மறுக்க முடியுமா?
இப்படிப்பட்ட அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி கொண்டு, மக்களின் வரிப் பணத்தில் சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு இப்படி பாசிச ஆர் .எஸ். எஸ். – பாஜக – இந்துத்துவ கொள்கைகளை பரப்புவார்களே யானால், அதற்கு ஆள் பிடிப்பார்களேயானால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இதேபோல அக்கிரமங்கள் நடக்கும் அனைத்து மாநில மக்களும் ஒன்றிய அரசின் இப்படிப்பட்ட தில்லு முல்லு மோசடிகளுக்கு வேட்டு வைக்கும் வகையிலான போராட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
இந்தியாவில் அனைத்துத் துறைகளும் காவிமயமாக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக நான்கு கால் பாய்ச்சலில் வேலை செய்து கொண்டிருக்கக் கூடிய சூழலில், மக்களும் அதனை உணர்ந்து அந்த பாசிச சக்திகளை முறியடிக்க களம் காண வேண்டும்! சமர் புரிய வேண்டும்! வெற்றி பெற வேண்டும்!
- எழில்மாறன்
ஆர்,.எஸ் .எஸ் -காமகோடியின், அறிவியலுக்கு புறம்பான இந்த முட்டாள்தனத்தை தோலுரிக்கும் விதமாக இக்கட்டுரை உள்ளது வாழ்த்துக்கள்.
அறிவியலுக்கு புறம்பாக பேசும் காமக்கோடி இது போன்றஆள்கள் இன்னும் எத்தனை நிறுவனங்களில் இருக்கிறார்களோ ஒவ்வொன்றாக வெளி வருகிறது மாணவர்களின் மூளையை சலவை செய்யஇவர்கள் கிளம்பி விட்டார்கள் பகுத்தறிவு கொண்ட சிந்தனையாளர்கள் மாணவர்கள் நாம் கிளம்ப வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது
பார்ப்பன குமபல் அதிகார பீடங்களை கைப்பற்றிக் கொண்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. இதனை அம்பலப்படுத்தும் விதமாக எழில்மாறன் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள் ♥️