
அதிகாரவர்க்கங்கள் துப்பாக்கிகளால் மட்டுமே இயங்குவதில்லை. அதிகாரவர்க்கம் தனக்கான கருத்துக்களை உருவாக்கும், கருத்துக்களை உருவாக்குவதற்கு ஊடகங்களை , சோசியல் மீடியாவை பயன்படுத்திக்கொள்ளும். “பாசிசம் ” அதிகாரவர்க்கத்திடம் இருக்கிறதா ? அது சமூகத்திலும் பரவும். அதுவே இயல்பு. இதை எப்படி புரிந்துகொள்ளலாம் “durandhar ” என்ற இசுலாமிய வெறுப்புப் படத்தை ரமலானின் போது ரிலீஸ் செய்வார்கள் , படமும் 1000 கோடி வசூலைத் தொடும். இதன் வரலாற்று பின்னணியைப் பார்த்தால் நேற்று வந்த கமல் தயாரித்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் தொடங்கி பின்னோக்கி போனால் பல கமல் , மணிரத்தின படங்களில் கொண்டு போய் சேர்க்கும். அது அப்படியே ரோஜா படத்துக்குச் செல்லும்.
ரோஜா ” படம் ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறதென்றால் , இசுலாமியர்கள் தீவிரவாதிகள் தானே என்ற கருத்து மனதில் ஊட்டப்படுகிறது என்றால், அதேவருடம் டிசம்பர் மதம் நடந்த பாபர் மசூதி இடிப்பின் போது இந்துக்கள் மனநிலை எப்படி இருக்கும் , அதாவது ரோஜா போன்ற படங்கள் இவர்களை எப்படி தயார் செய்திருக்கும். அவர்கள் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக மாற்றியிருக்கும். பாபர் மசூதியை இடித்தவர்களின் இந்துத்துவ மனநிலை எப்படி இருக்கும், traine செய்யப்பட்ட நாய் போன்றதாக இருக்கும்.
கடி என்றால் கடித்துவிடும் நாய்களின் கூட்டு மனநிலை தான் பாபர் மசூதியை இடிக்கச்சொல்லியிருக்கும்.
நாமெல்லாம் மனதளவில் வலதுசாரிக் கருத்துக்களால் traine செய்யப்படுகிறோம். அடிப்படை வாதம் , வெறுப்பரசியல் எல்லாம் நம் மனதுக்குள் வந்து விடுகிறது. அது லட்சக்கணக்கான மக்களிடம் பரவவும் செய்கிறது.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணபடுத்தப்படும் போதும் , வடக்கில் நம் மக்கள் கறி சாப்பிட்டார்கள் என்பதற்க்காக கொலை செய்யப்பட்டபோதும் , ஏன் நம்மூரில் ஆணவக் கொலைகள் நடக்கும் போதும் , சாதி ரீதியாக ஒடுக்கப்படும் போதும் நம் பொது சமூகம் ஏன் அமைதியாக உள்ளது. நம் மனது பாசிசதிற்கு traine
ஆகிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறில்லையா என்று கேட்டுப்பாருங்கள் “இந்தியா இந்துக்களின் நாடு ” என்று நன்றாக பேசிக்கொண்டிருக்கும் நண்பனே மனம் மாறியிருப்பான்.
ஆம் நாம் பாசிசம் என்ற கருத்தியலில் நாய்கள் போன்று traine செய்யப்படுகிறோம், யாராவது அதை எதிர்த்து கேள்வி கேட்டால் ஒரு பத்து நாய்கள் சேர்ந்து விரட்டி போட்டுத்தள்ளிவிடுமல்லவா ? அதைப்போல mob ஆக சேர்ந்து மாற்றுக்கருத்துக்களை குரல்வளையை அடித்துநொறுக்குகிறோம். இந்த பாசிசம் மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குவதில்லை.
விஜய் ரசிகர்கள் விடயத்துக்கு வருவோம் , விஜய் டெபாசிட் வாங்க மாட்டார் அதிகபட்சம் 40 – 50 லட்சம் வாக்குகள் ஒட்டுமொத்தமாக வாங்கலாம். அது, சில தொகுதிகளில் டெபாசிட் கூட பெற்றுத்தரலாம் என்பது வேறு விடயம் . ஆனால் விஜய் ரசிகர்களிடம் பேசிப்பாருங்கள் குறிப்பாக ” கரூர் ” சம்பவம் , அவர்கள் மொத்தமாக சேர்ந்து கடிக்க வருவதைப் பார்த்திருக்கிறேன். ரூட் மீடியா வைத்து மற்ற நடிகர்களை , அவர்கள் குடும்பங்களை organize ஆக கடிக்கவைக்கும் கூட்டம் . ஒரு நேரத்தில் ரூட் நிறுவனமே தேவைப்படாது, ரசிகர்களே tune ஆகி கடிக்கத்தொடங்குவார்கள்.
மக்களின் மனநிலை என்ன தெரியுமா ? அதாவது விஜய் ரசிகர்கள் விஜயை அரண் போன்று காப்பவர்களின் மனநிலை என்ன தெரியுமா ? நம் ஆள் தவறே செய்திருக்கலாம் ஆனால் எங்க அண்ணனை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தனது வீடுகளில் ஆட்கள் இறந்திருந்தால் கூடச் செல்கிறார்கள். கூட்டம் கூடுகிறது , அந்தக் கூட்டத்தில் சாவதை பெருமையாக நினைக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.
சென்னை நகர வீதிகளில் நாய்கள் தொல்லை இப்போதும் அதிகம் ஒரு நான்கு நாய்கள் தெருவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எவ்வளவு வீரதீர சூரனும் அவர்களிடம் தோற்றுப்போவார்கள்.
அந்த mob mentality சில நேரங்களில் தெருவில் அவர்களுக்கு சோறு வைப்பவர்களேயே கடிக்கத்தொடங்கும். இத்தனைக்கும் நாய்களை அவர்களே traine செய்திருப்பார்கள்.. வடிவேலு படத்தில் வரும் நகைச்சுவை போல
“தேவைப்பட்டா எங்க அண்ணனையே பொளப்போம் டா ” என்பதைப் போல அந்த mob mentality என்பது யாரைக் கடிப்பது ? எனும்போது எஜமானனை கடிக்கத்தொடங்குகிறது. தனியாக இருந்தால் ஒரு நாயின் குணம் , கூட்டமாக இருந்தால் mob mentality
இதில் எல்லாம் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் “கொத்தடிமைத் தனமாக ” நம் மனது டாக்ஸிக் சூழலுக்கு ஏற்றவாறு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும். நம் மனிதர்கள் ஏன் mob ஆகச் செயல்படுகிறார்கள், ஒரு அளவில் தாங்கள் பின்பற்றும் கருத்து அதாவது பாசிசக் கருத்தை சரியென்று நம்பவைக்கப்படுகிறார்கள்.
பின் மக்களை ஒடுக்க துப்பாக்கிகள் தேவை இல்லை , பாசிஸ்ட்களுக்கு அரணாக பாசிசத்தால் வீழ்த்தப்படும் மனிதர்களே நிற்பார்கள், இதில் தான் ரசிகர்மன்ற மனநிலை முதல் மதவாதிகள் வரை மனிதர்கள் கொத்தடிமை மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதன் தொடர்ச்சி தான் cult , அதாவது தீவிர சாமியார்களை விட்டுக்கொடுக்கவே கொடுக்காத பக்த கோடிகளை பார்க்க முடியும், சங்கரன்கள் முதல் நித்யானந்தா வரை ஓஷோ முதல் இஷா வரை இதுதான் கதை. எப்போதுமே எதிரிகளை கடிப்பதற்கு ஒரு படை உருவாக்கிவிடுவது , அந்தப் படையை உளவியலாக எவ்வ்ளவு கட்டமைக்கிறார்களோ அந்த அளவு விசுவாசத்தை அந்த கொத்தடிமை நாய் மனநிலையிலிருந்து கொண்டு வரமுடியும்.
“எக்கோ ” மலையாளப் படம் இந்த உளவியலைச் சொல்கிறது “நாய்களை ” ட்ரெயின் செய்வது போலத் தான் அடிமைத்தனமும் விசுவாசமும் கட்டமைக்கப்படுகிறது என்ற மனிதகுல உண்மையை நுட்பமாக கதையாய்ச் சொன்னால் எழுதும் போதே கொஞ்சம் புல்லரிக்கத் தான் செய்கிறது. மனிதர்களின் நுட்பமான அதிகாரத்தை அந்தத் தளத்தை அந்த லேயரை படம் நுட்பமாகப் பேசுகிறது. என்ன மாதிரி writing ?
நாம் இந்தப் படத்தை வெறும் திரில்லர் என்றெல்லாம் கடந்து போகமுடியாது . ஒரு ஆழ்ந்த நுட்பமான உணர்வுகளை இந்தப் படம் கடத்துகிறது. இங்கு காட்டப்படும் , அடிமைப்படுத்தப்படுவதும் ,, விசுவமாய் இருப்பதும் வெறும் நாய்கள் அல்ல , அந்த நாய்களை மனிதர்களாக நாம் மாற்றிப்பார்த்தால் வேறொரு கதை உள்ளுக்குள் சொல்லப்பட்டதை நாம் புரிந்துகொள்ள முடியும் . அதே அடிமை நாய்களை அப்படியே ” மதவாதம் ” கொண்டு பொருத்திப்பார்த்தால் வேறொரு அரசியல் பாலஸ்தீனம் , காஸா , காஷ்மீராக கதை மாறுகிறது. அந்தக் கதையை நாயகியான பாட்டியின் பார்வையில் நாய்கள் எல்லாருமே பெண்கள் என்று பார்த்துவிட்டால் பெண்ணியக்கதையாக மாறுகிறது. இன்னொரு பக்கம் பாசிசம் கம்யூனிசம் என்று வைத்துப்பார்த்தால் வேறொரு தளமாக கதை விரிகிறது.
படிக்க:
♦ பாலியல் வக்கிரவெறியில் திளைத்து நிற்கும் சினிமா கழிசடைகளை எவ்வாறு தண்டிப்பது?
♦ விஜய் ரசிகர்கள் கூட்டம் படிப்பினை பெற வேண்டும்!
முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். நீங்கள் உங்கள் தேவைக்காக நாய்களை அடிமையாக வளர்ந்துகொண்டே வந்தீர்கள் என்றால் ஒரு நேரத்தில் உங்களையும் நாய் கடித்துப்போட்டு சென்றுவிடும் என்ற தத்துவமும் எக்கோவில் பார்க்க முடிகிறது. இன்று விஜய் ரசிகர்கள் , விஜய் மனைவி சங்கீதாவை இன்டர்நெட்டில் உளவியல் தாக்குதல் நடத்தும்போது இதை புரிந்துகொள்ள முடியும்.
ஒரு படைப்பு ஒரு குறியீடுதளத்தில் வெவ்வேறு அர்த்தங்களை பார்வையாளனுக்குக் கடத்துவதை நாவல்களில் பார்த்ததுண்டு என்பதால் தான் நாவல் ஒரு மேம்பட்ட படைப்பாக இருக்கும் என்று நினைத்ததுண்டு . எக்கோ
அது எல்லாவற்றையும் தாண்டுகிறது. சினிமாவில் கூட அது சாத்தியம் தான் என்று சொல்கிறது . மற்ற நுட்பங்களை விட ஒரு கதைக்கான முக்கியத்துவம் சினிமாவில் என்ன என்பதை உரக்கச் சொல்கிறது.
சிலர் இந்தப் படம் theater material என்கிறார்கள். திரையரங்கில் பார்ப்பதற்கு உண்டான பிரமாண்டம் , பிரமிப்பு எல்லாம் இந்தப் படத்தில் உள்ளது என்னமோ உண்மை தான் , ஆனால் இந்தப் படம் பிரமாண்டம் இல்லையென்றாலும் , ஏன் செல்போனில் பார்த்தால் கூடச் சிறந்த கதை தான், அதன் உள்ளடுக்குகள் வெறும் தொழிநுட்பத்தை மட்டும் நம்பவில்லை , மக்களின் ஆழமான உணர்வுகளைத் தொடும் , தத்துவமாக விரித்துப்பார்க்கும் craft ஐ கொண்ட படமாக விரிக்கிது. சேட்டன்கள் எப்படி இவ்வளவு ஆழமாக படமெடுக்கிறார்கள்? ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பாக எக்கோ என் மனதுள் பட்டது.
எக்கோ என்றால் எதிரொலி, “every action has an equivalent and opposite reaction ” என்பதை வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று கூடச்சொல்லலாம், நாம் விதைக்கும் பாசிசம் நாம் விதைக்கும் அதிகாரம் பூமராங் போல எதிரொலியாக நம்மைக் கட்டுப்படுத்தும் என்றால் அதுவே எதிரொலி அதுவே எக்கோ.
நன்றி,
தோழர் கார்த்திக்
முகநூல் பதிவு







ஒரு திரைப்பட கதையின் வாயிலாக பாசிச கூட்டமும் லும்பன்களாக செயல்படும் ரசிகர் கூட்டமும் எவ்வளவு பயங்கரமானது என்பதை சமூக புரிதலோடு யதார்த்தத்தோடு ஒவ்வொரு பூக்களாக எடுத்து தொடுத்தால் மாலையாக வருமோ அதுபோல் பாசிச கொடும்கோளர்களின் அடியாள் படைகளை பற்றி தெளிவாக பதிவு செய்திருக்கிறது இக்கட்டுரை.