விளையாட்டு மைதானத்தில்
தேசியக் கொடியை ஆட்டுவார்கள்
ராமர் கோவில் மணியையுமா ஆட்டுவார்கள்?

கிரிக்கெட் கிரவுண்டில்
சக்தே இந்தியா பாட்டு கேட்டது
ஜெய் ஹோ போட்டார்கள்
ஏ.ஆர். ரஹ்மானின்
வந்தே மாதரமும் கேட்டது

நிச்சயம் விளையாடுமிடத்தில்
உற்சாகம் தேவை

ஆனாலும் அகமதாபாத்தில் உள்ளது
நரேந்திர மோடி மைதானமாயிற்றே

ஆதிபுருஷ் மியூசிக் ஜோடி
சஞ்சித் பல்ஹாராவும்
அங்கித் பல்ஹாராவும்
ஜெய் ஸ்ரீராம் இசைத்தார்கள்

டிவியில் கிரிக்கெட்
பார்ப்பவர்களுக்கு குழப்பம்

நடப்பது
உலகக் கோப்பையா?
அயோத்தி பிரீமியர் லீகா?

ராமன் கிரிக்கெட்
ஆடினாரா?

ராமன் பாணம் போடுவார்!
பவுலிங் போடுவாரா?

அக்னி அஸ்த்திரம் போடுவார்!
யார்க்கர் போடுவாரா?

விளையாட்டு மைதானம் எது?
பஜனை மடம் எது?

வழக்கமான
இந்திய மயக்கம்

கடைசியாக,
அப்பாவி குஜராத்திகள்
நப்பியதுபோல்
பும்ராவுக்குள்
ஸ்ரீமான் ராமபிரானது
ஆவி நுழைந்துவிட்டதா?

‘ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம்’

ஆர்ப்பரிப்பது
கிரிக்கெட் ரசிகர்களில்லை

ஆதிபுருஷின்
அனுமன் சேனா

பாகிஸ்தான் டீமிடம்
‘இன்று போய் நாளை வா!’
சொல்கிறார் ஆதிபுருஷ் பிரபாஸ்

பெவிலியனுக்கு திரும்பும்
முகமது ரிஸ்வானுக்கு
ராவணன் ஜாடையா?
இல்லை..
ராவணனாக நடித்த
சைஃப் அலி கான் ஜாடையா?
தெரியவில்லை

இந்தியா தேசபக்தியை
காட்டுகிறேனென்று
கிரிக்கெட்டை காட்டுகிறது

கிரிக்கெட்டை
காட்டுகிறேனென்று
ஆதிபுருஷை காட்டுகிறது

பார்ப்பவர்களுக்கு
முட்டிக் கொண்டு வர

டாய்லெட் எங்கே?
தூய்மை பாரதத்திடம் கேட்டால்

சீக்கிரமே ராமர் கோவில்
திறப்புவிழா!
இன்விடேஷனை நீட்டுகிறது.

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here