டந்த ஜூலை 2022 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து 148 லட்சம் கோடி ரூபாய்களை ஜிஎஸ்டி வரியாக புடுங்கியுள்ளது. இது 2021 ஜூலை மாதத்தில் பிடுங்கிய வரியைக் காட்டிலும் 28% அதிகம் ஆகும்.

பெரும்பான்மை மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் அத்தியாவசியமான பால், பாலாடை, பால்பவுடர் துவங்கி அரிசி வரை அனைத்தின் மீதும் ஜிஎஸ்டி வரியை போட்டு கொள்ளையடிக்கும், சொந்த நாட்டு மக்களை வரி வசூல் மூலம் சுரண்டி கொழுக்கின்ற கொள்ளைக்காரனாக பாரதிய ஜனதா கட்சி வலம் வருகிறது.

25 கிலோ பண்டல் செய்யப்பட்ட அரிசி மீது ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி போட்டதால், மூட்டைக்கு 50 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விலையேற்றம் செய்யப்பட்டு உழைக்கும் மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தின் வயிற்றிலும் அடிக்கிறது.
ஜிஎஸ்டி வரிக்கொள்ளையை கண்டித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், மாநிலம் முழுவதும் உள்ள 3500 அரிசி ஆலைகள் உட்பட அனைத்து ஆலைகளும் கடந்த 15 தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 500 அரிசி ஆலைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு 52,500 டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே கொரோனோ நோயினால் வாழ்வை இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்கள், அரிசி விலை ஏற்றதால் கடும் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என்ற நிலையை உணர்ந்த அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் இந்திய ஒன்றிய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்முயற்சியுடன் மாற்று ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக 25 கிலோவிற்கு மேல் உள்ள அரிசிக்கு வரி கிடையாது என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு 25 கிலோ மூட்டை பதிலாக 26 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை தயாரித்துள்ளனர். இதில் திருப்பூர் மற்றும் காங்கேயத்தைச் சேர்ந்த அரிசி ஆலை அதிபர்கள் இந்த பதில் நடவடிக்கையை மேற்கொண்டு மோடி – நிம்மி முகத்தில் கரியை பூசி உள்ளனர்.


இதையும் படியுங்கள்: ஒன்றிய அரசே ! ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களிடம் அடிக்கும் வரிக்கொள்ளையை நிறுத்து!


பொன் முட்டையிடும் வாத்து என்பதால் வயிற்றை கிழித்து முட்டையை எடுத்த முட்டாள்களைப் போல, உழைக்கும் மக்கள் வயிற்றை அறுத்து வரியை பிடுங்குவதன் மூலம் நாட்டை முன்னேற்றுவதாக கூறிக் கொள்கிறது மோடி அரசு.
இவ்வாறு வசூலிக்கப்படும் வரி மாநிலங்களுக்கு திருப்பிக் கொடுப்பதில்லை. கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களுக்கு தங்கள் மூலம் வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து ஒரு சிறிய தொகை திருப்பித் தரப்பட்டது.
ஆனால் இந்த தொகை அனைத்தும் கார்ப்பரேட் கூட்டாளிகளான அம்பானி, அதானி காலடியில் கொட்டி, நாட்டின் இயற்கை வளங்களையும், விவசாய விளைப் பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கொள்ளையடிப்பதற்கும் பொதுத்துறை நிறுவனங்களை கூறு போட்டு வாங்கி கொள்வதற்கும் அரசே கடனாக வழங்கி வருகிறது என்பதுதான் உண்மை.

நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் பேசுகின்ற கம்யூனிஸ்டுகளையும், புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் நகர்ப்புற நக்சல்கள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி சுட்டு தள்ளுவதற்கு உரிமை இருக்கிறது என்று பேசுகிறார் ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி.

ஆனால் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி இரண்டு குடும்பங்கள் இந்தியாவை ஆட்டி படைப்பதற்கு, நிழல் ஆட்சி நடத்துவதற்கு கும்பல் ஆட்சி நடத்துவதற்கு பணிந்து சேவை செய்யும் ஆர் எஸ் எஸ் தேசபக்தி கொண்ட அமைப்பு என்று கூச்சல் இடுவதை இனியும் நாம் சகித்துக் கொண்டு இருக்க முடியுமா?

  • அருண்மொழி தேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here