மக்களிடம் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்கு படையல்


 நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஒவ்வொரு நாளும் கொடூரமாகவே விடிகிறது. காரணம் சமையல்  எரிவாயு விலை, பெட்ரோல், டீசல் விலை  ஏற்றம் தான்.

பெட்ரோல், டீசல், எரிவாயு மூன்றுமே உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைச் சந்தையில் சிக்கியுள்ளது. இந்தியாவில் விலைவாசி தாறுமாறாக ஏறுவதும் இதனால் தான். ஆனால் லாபம் பார்க்கும் ஊழல் கும்பலின் வசிப்பிடமான ONGC அதிகாரிகளும், அம்பானி( RIL)யும் வங்கி நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

லாபம் எந்த கஜானாக்களில் சேருகிறது என்று சந்தை வெளிப்படையாகத்தான் சொல்கிறது. வாயெல்லாம் பல்லாக மோடியோடு நிற்கும் அம்பானி, அதானியைப் பார்த்தாலே இது தெரியும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பே CAG கணக்குத் தணிக்கை குழு RIL சுருட்டிய சுமார் 92 ஆயிரம் கோடி பணத்தை கட்டு என்று ஓலையை அனுப்பியது.

குஜராத் முதல்வராக இருந்த மோடி முதல் டெல்லி பிரதமரான மோடி வரை இதை கண்டுகொள்ளவே இல்லை.

தவிர, குஜராத் அரசின் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் தான் துரப்பண வேலை செய்தார் அம்பானி. அதானி எனர்ஜியும் குஜராத்தில் அடித்த கொள்ளை ஏராளம். போதாக்குறைக்கு “ஐயோ 300 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் சும்மா கிடைக்கிறதே!” என்று ஸ்டெர்லைட் புகழ் அனில் அகர்வால் (வேதாந்தா) பதறுகிறார்.

மக்கள் மன்றமே இவர்களை வீதியில் நிறுத்து!  விலையை கட்டுப்படுத்து என்று அவர்களிடம் கெஞ்சுவதை விட அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடுகட்டு! என்று புதிய வகையில் சிந்திக்க துவங்குவோம்.

புதிய புத்தன்

ஆதாரம்: ‘எரிசக்தி’ ET PRIME,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here