உரைவீச்சு:
” மோ “,
ஒரு யுகபுருஷனாம் !


வர் ஒரு புருஷனாம்!
அவர் ஒரு மகாபுருஷனாம்!
அவர் ஒரு யுகபுருஷனாம்!

பலப்பல கடவுள்களின் கூட்டத்தால்
பலி மாடாய்க்
குருதி பீறிட வெட்டப்பட்டவரே
“புருஷன்” என்பவர் —
இவை ‘ வேத மந்திரங்களில் ‘
விரிவாகச் சொல்லப்படுகிறது;
இந்தப்பலியில் ஆதியில் விளைந்ததே
பிரபஞ்சமும் மனிதன் உட்பட
எல்லா ஜீவராசிகளும்,
அப்படி வந்த புருஷனே
“மோ”.

வேத, வருண– சாதிகளில் வார்ப்பாகி
உலக – உள்ளூர் கார்ப்பரேட் யுகச்
சந்தைக் கடவுளையே
எப்போதும் கொண்டாடிக்
குளிப்பாட்டிக் குளிரூட்டி
நடைமுறைப் பரிவர்த்தனையில்
மகாபுருஷனாய் அறியப்பட்ட
‘சூரியனே’ “மோ” !

கார்ப்பொரேட்–காவி என்ற
கலப்பின ஒட்டு ரகத்தின் அடையாளமாய்த்
தோன்றிய இன்றைய காலகட்டத் தலைவனாகிய
மகாபுருஷனே
இந்த “மோ”!

ஆர்எஸ்எஸ்ஸில் அச்செடுத்து,
“பரதக்கண்ட அணு”வாகவே
தன்னைப்பாவித்து அலைந்து திரிந்து
குஜராத்தை
கொலைக்கள ரத்தபூமி மாடலாக்கி,
வருங்கால அகண்டபாரத லட்சியத்திற்காகவே வாழ்கிற,
இந்நாட்டுக்கு “பாரத்” என்ற
முதல்அடிக்கல்லை
ஊன்றியகாரணத்துக்காகவே
“யுகபுருஷா, யுகபுருஷா”
என்று துதிபாடப்படுகிறார்
இந்த “மோ”! @

உ.பி-யில் தலித்துகள்மீது
சாட்டையடி விழுந்தபோதும்,
மொத்த மணிப்பூருமே
இன்றுவரை எரிகின்றபோதும்
வாயடைத்துக் கிடக்கிற ஆள்,
“சனாதனம் ஒழிக!” என்று
தமிழகப் போர்முழக்கம் கிளம்பியதுமே
“உடனே பதிலடி கொடுங்கள்”
என்று பதறித் துடிக்கிறார், கதறுகிறார்.
இதனால்தான் ” யுகபுருஷா,
யுகபுருஷா ” என்று
துதிக்கப் படுகிறாரோ
இந்த ” மோ “?

“மோ” ஒரு புருஷன்!
“மோ” ஒரு மகாபுருஷன்!
“மோ” ஒரு யுகபுருஷன்!
தன் எதிர்ப்புரட்சி ஆட்டத்தில்மட்டுமே குறியாக உள்ளவரை
அரசியல்மொழியில் சுருங்கச் சொல்வோம் :
“மோ” ஒரு பாசிச புருஷன்!!

  • புதிய திருமூலன்

அடிக்குறிப்பு :

@ ஆஸ்திரேலியப்பிரதமர் அவரை ‘பாஸ்’ ( BOSS)என்று அழைத்தபோது ரசித்து தானே கைதட்டிக் கொண்ட வக்கிரக் கோமாளி ; இவர் தனக்கு அந்தரங்கச் செயலாளராகத் தானே நியமித்த மிஸ்ரா என்ற புல்லுருவி இவருக்கு ” யுக புருஷா ” என்று பட்டம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 

♦ உரைவீச்சு : (மகாராஷ்டிரா விழாவில்) நரபலி நாயகர்கள்!

♦ உரைவீச்சு | ஆயுதபூஜை : புராணக் குப்பைகள் மட்டுமல்ல, களப்பலிகேட்கும் வெறிக்கூச்சலும் கூட !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here