சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் போரில் முதல் வெற்றி!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தில்லை கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க முடியாது என தீட்சிதர் பார்ப்பனர் கும்பல் அறிவித்திருந்தனர். தமிழ் நாட்டில், தமிழன் கட்டிய கோயிலில், தமிழர்கள் தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டதை ஏதிர்த்து எமது மக்கள் அதிகாரம் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கட்சிகள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த போராட்டத்தில் மார்ச்-02 க்குள் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தமிழக அரசின் அரசாணைப்படி தீட்சிதர்கள் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் எமது அமைப்பு கோயிலுக்குள் சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பாடுவோம் என கெடு விதித்து இருந்தோம்.

கொரானா பரவலுக்கு முன்பு என்ன நடைமுறை இருந்ததோ அதனையே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் சிதம்பரம் வட்டாட்சியர் தீட்சிதர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் தீட்சிதர்கள் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை உள்ளது என ‘பொய்யாக’ தெரிவித்துள்ளனர். எனவே, தடையாணை இருந்தால் அதனை 26-02-2022 மாலை 07:00 மணிக்குள் காட்ட வேண்டும். 01 ஆம் தேதிக்குள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் தீட்சிதர்களுக்கு அறிவித்துள்ளார்.

இது மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ள மார்ச் 2 அறிவித்துள்ள போராட்டத்திற்கு கிடைத்த முதல் சிறு வெற்றி!

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here