காதிபத்திய முதலாளித்துவம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விநியோகம், பரிமாற்றம், நுகர்வு உள்ளிட்ட பொருளுற்பத்தி முறையை துரிதப்படுத்துகிறது.. கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்கு பொருத்தமாக பெருவீத உற்பத்தியை, மீமிகு உற்பத்தியாக அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

நவீன தொழிற்சாலைகளில் ரோபோட்டிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவத்துறையில் சோதனை மற்றும் ஆய்வு முடிவுகளை துல்லியமாக தெரிவிக்கின்ற முறைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட தானியங்கி சாதனங்கள், அணியக்கூடிய சாதனங்கள் போன்ற அனைத்திலும் பயன்படக்கூடிய அனலாக் டிஜிட்டல் கன்வெர்ட்டர் தற்போது அதி நவீன முறையில் வேகமாக செயல்படக் கூடியதாக  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அனலாக் டு டிஜிட்டல் கன்வெர்ட்டர், அல்லது ஏடிசி, என்பது அனலாக் முறையில் உருவாக்கப்படும் சிக்னலை டிஜிட்டல் பைனரி குறியீட்டில் மாற்றம் செய்யப் பயன்படுவதாகும். அதே போல் டிஜிட்டல் டு அனலாக் அல்லது டிஏசி என்பது டிஜிட்டல் சிக்னலை அனலாக் சிக்னலாக மாற்றுவதாகும். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பொருத்தமாக புதிய வேகத்துடன் இந்த ADC, DAC மாற்றப்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் அனைத்து அனலாக் ஃபோட்டோ எலக்ட்ரானிக் சிப் (ACCEL) உருவாக்கப்பட்டுள்ளது‌. தற்போதுள்ள சிப்புகளை விட அதிக வேகம் மற்றும் ஆற்றல் திறனுடன் கணினியை பயன்படுத்துவதற்கு பொருத்தமாக  உருவாக்கியுள்ளனர். உலகிலேயே முதல் முறையாக இத்தகைய நவீன தொழில்நுட்பத்தை சீனா கண்டறிந்துள்ளது. உலக மேலாதிக்க போட்டியில் அமெரிக்காவுடன் தொடர்ந்து போட்டியிடும் சீனாவின் இந்த நவீன தகவல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பானது பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட போகிறது.

அனலாக்-டு-டிஜிட்டல் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பத்தை சீன ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது அதன் ஆராய்ச்சிகள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய ஆய்வில், ஃபோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் வடிவில் உள்ள ஒளியின் நன்மைகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு ஒருங்கிணைந்த ஒளிமின்னணு செயலியை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.  இது “எலக்ட்ரானிக் மற்றும் லைட் கம்ப்யூட்டிங் இணைக்கும் அனைத்து அனலாக் சிப்” அல்லது ACCEL என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தற்போதுள்ள ADC முறையைக் காட்டிலும் ஒரு வாட்டுக்கு 74.8 பீட்டா வேகத்திலும், ஒரு நிமிடத்திற்கு 4.6 பெட்டா வேகத்திற்கும் தரவுகளை மாற்றுகின்ற வகையில் இந்த நவீன செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் நெட்வொர்க்குகளுடன் ஒப்பிடக்கூடிய துல்லியமான அளவிலான பொருட்களை ACCEL அடையாளம் கண்டு வகைப்படுத்த முடியும் என்று சோதனைகள் காட்டுகின்றன. மேலும், இது தினசரி வாழ்க்கையின் பல்வேறு காட்சிகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை 3,000 மடங்கு வேகமாகவும், சிறந்த கிராபிக்ஸ் செயலாக்க அலகு (GPU) ஐ விட 4,000,000 மடங்கு குறைவான ஆற்றல் நுகர்வுடன் வகைப்படுத்துகிறது.

அனலாக் மற்றும் டிஜிட்டல் சிக்னல்கள் இரண்டு வகையான தகவல்களைக் கொண்டு செல்லும் சமிக்ஞைகள். அனலாக் சிக்னல்கள் தொடர்ந்து மாறுபடும், ஒளியின் கதிர்கள் ஒரு படத்தை உருவாக்குகின்றன, அதே சமயம் டிஜிட்டல் சிக்னல்கள் பைனரி எண்களைப் போலவே தொடர்ச்சியற்றவையாகவே உள்ளது.

தற்போதுள்ள முறையைக் காட்டிலும் ஒளிப் படங்களை அறிந்து கொள்வது  மற்றும் பலவிதமான பொருட்களை கண்டறிதல் போன்ற பார்வை அடிப்படையிலான கம்ப்யூட்டிங் பணிகளில், சுற்றுச்சூழலில் இருந்து வரும் சிக்னல்கள் அனலாக் ஆகும், மேலும் அவை AI நரம்பியல் நெட்வொர்க்குகள், தரவுத் தொகுப்பில் உள்ள வடிவங்கள் மற்றும் உறவுகளை அடையாளம் காண பயிற்சி பெற்ற அமைப்புகளால் செயலாக்க டிஜிட்டல் சிக்னல்களாக மாற்றப்பட வேண்டும்.

இருப்பினும், அனலாக்-டு-டிஜிட்டல் மாற்றமானது, நரம்பியல் நெட்வொர்க்கின் செயல்திறனின் வேகம் மற்றும் செயல்திறனைக் கட்டுப்படுத்தும் நேரத்தையும் ஆற்றலையும் எடுத்துக்கொள்கிறது.  இதனை மாற்றி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனலாக் லைட் சிக்னல்களைப் பயன்படுத்தும் ஃபோட்டானிக் கம்ப்யூட்டிங், சிக்கலைத் தீர்ப்பதற்கான மிகவும் நம்பிக்கைக்குரிய அணுகுமுறைகளில் ஒன்றாக உள்ளது என நேச்சர் இதழ் தெரிவிக்கிறது.

80களில்  ஏகாதிபத்திய முதலாளித்துவம் தனது உற்பத்தி முறையை நவீனப்படுத்துவதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களை நவீனப்படுத்தியது. அதனை கொண்டு காலனி, அரைக் காலனி, நவீன காலனி நாடுகளில் புதிய வடிவிலான மறுகாலனியாக்க சுரண்டலை தீவிரமாக்கியது.

இதையும் படியுங்கள்: 

சாட் ஜிபிடி புதிய தொழில்நுட்பம்! முதலாளிகளுக்கு பணம் காய்க்கும் மரம்!
 ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது? பாகம் 2

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் சுரண்டல் மற்றும் மீமிகு உற்பத்தி பல மடங்கு பெருகியுள்ள இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் தொழில்நுட்பம், டேட்டா மைனிங் போன்ற அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி கொழுப்பதற்கு பயன்படுத்தப்பட போகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நவீன தொழில்நுட்பத்தை கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் நலனுக்கு சேவை செய்வதாக மாற்றுவதற்கு சோசலிச சமூக அமைப்பினால் மட்டுமே முடியும் என்பது தான் உண்மை.

  • இரா.கபிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here