ன்னரை லட்சம் பேரின்
125 டெசிபல் கரகோஷம்
உத்தரகாண்ட் சுரங்கத்தில்
அடைபட்டு கிடக்கும்
40 தொழிலாளர்களின்
காதுகளில் கேட்கப் போவதில்லை!

அகமதாபாத்தில் வானத்தில்
விமானப்படை வேடிக்கைகள்…
ஆழ்துளையில் குழந்தைகள்
சுரங்கத்தில் தொழிலாளர்கள்
இந்தியாவின் வாடிக்கைகள்.

♦  இதையும் படியுங்கள்: உத்தரகாசி சுரங்க விபத்து: இமயமலையில் தொடரும் துயரம்!

சுரங்கத்தின் இருட்டில்
உணவின்றி, நீரின்றி
சாவின் அருகில் சென்று கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு
அகமதாபாத் ஸ்டேடியத்தில்
நாட்டு பிரதமர்
ஆர்ப்பரித்த செய்தி
எட்டியிருக்க வாய்ப்பில்லை.

மணிப்பூர் எரிந்த போது
மன்னர் வாசித்த பிடிலின் ஓசை
உத்தரகாண்ட் சுரங்கத்தில் பட்டு
நாடு முழுக்க எதிரொலிக்கிறது.

சிறு கோப்பை நீரை கூட
தொழிலாளிக்கு கொடுக்க
முடியாத நாடு,
உலகக் கோப்பையை வென்று என்ன பயன்?

இந்தியா தோற்றது கிரிக்கெட்டில் மட்டுமல்ல…

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here