னவழிப்புப் போரினால் தாக்குதலுக்குள்ளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், காயம்பட்டவர்களின் அடைக்கலமாக இருக்கும் அல்-ஷிபா மருத்துவமனையை நாகரிக உலகில் எங்குமே நடைபெறாதவிதமாக ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேலிய ராணுவம். வெட்கக்கேடான இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லாத இஸ்ரேலிய இனவெறி சியோனிஸ்டுகள் பல்வேறு பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முதலில் அல்-ஷிபா மருத்துவமனையை ஏவுகணைகளால் தாக்கி நூற்றுக்கணக்கானோரை கொன்றுவிட்டு ஹமாஸ் தான் மருத்துவமனையை குண்டுவீசித் தகர்த்ததாகப் பொய்ச்செய்திகளை வெளியிட்டது. அம்மருத்துவமனை ஹமாஸின் மையமாக இருந்ததாகவும், அந்த மருத்துவமனையின் MRI scan கருவிக்குப் பின்பகுதியில் துப்பாக்கிகளையும், சீருடைகளையும் ஹமாஸ் பதுக்கிவைத்துள்ளதாகவும், ஒரு மெக்சிகோ-இஸ்ரேலிய நடிகையை செவிலியராக நடிக்கவைத்து ஹமாஸ் தங்களை பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்திருந்ததாகவும், அங்கு தொங்கும் ஒரு காலண்டரில் அரபி மொழியில் வாரநாட்களை எழுதிவைத்திருந்ததை தீவிரவாதிகளின் பெயர்கள் என்றும் பரப்பிவிட்டது.

இவையெல்லாம் அப்பட்டமான பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் சத்தமின்றி அந்த வீடியோக்களை தனது சமூக ஊடகங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் நீக்கியுள்ளது. ஆனால் சியோனிஸ்டுகளின் கூட்டாளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இப்பொய்களைத் தொடர்ந்து பரப்பிவருகின்றன. இதில் அமெரிக்க அதிபரான ஜோ பிடென் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய குழந்தைகளை தலையை அறுத்து, நெருப்பில் எரித்துக்கொன்றனர் என்ற உலகறிந்த பொய்களைத் தொடர்ந்துகூறிக்கொண்டே இருக்கிறார். போலியானதென்று அம்பலமானதால் சியோனிஸ்டுகளே நீக்கிவிட்ட வீடியோக்களை உலகமக்கள் நம்பவேண்டும் என்று அமெரிக்காவும் NATO நாடுகளும் கூப்பாடு போடுகின்றனர்.

இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் வீடியோக்களின் உண்மைத்தன்மையைப் பற்றி எந்தவித சோதனைக்கும் உட்படுத்தாமலேயே யூதவெறியர்களால் நடத்தப்படும் மிகப்பெரும் செய்தி ஊடகங்கள் பொய் செய்திகளை பரப்பிவருகின்றன. இதைப்பற்றி கேள்வி எழுப்பப்படும் போது, அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ல் தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா, இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டார்களா இல்லையா? அதனால் இஸ்ரேலின் இதுபோன்ற நடவடிக்கைகள் சரியானதே என்று திமிராக பதில் கூறுகின்றனர்.

ஈராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் உள்ளது என்று புனைக்கதைகளை பரப்பி தனக்கு அடிபணியாத அதன் அதிபரான சதாம் உசேனைத் தீர்த்துக்கட்டிய அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தாங்கள் கூறியது பொய்யென்றும் தங்கள் குறி சதாம் உசேன் தான் என்றும் பின்னர் அறிவித்தன. அதைப்போலவே ஹமாஸ்தான் எங்கள் குறி என்று சொல்லி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து காசா பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதே சியோனிஸ்டுகளின் நோக்கமாக உள்ளது. அதைத்தான் இஸ்ரேலின் பிரதமரான போர்க்குற்றவாளி நெதன்யாகுவும் கூறியுள்ளார்.

பாலஸ்தீன மக்களை கரப்பான்பூச்சிகளென்று இழிவுபடுத்தி, உலகத்தில் வாழத்தகுதியற்றவர்கள் என்று கருதி இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் நடத்தும் பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையை இதுவரை ஒருவார்த்தைகூட கண்டிக்காமல் சியோனிஸ்டுகளுக்கு அமெரிக்க, கனடா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆயுதங்களைக்கொடுத்து பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவிக்க பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

கண்முன்னே நடக்கும் ஒரு இனவழிப்பை, தங்களை தற்காத்துக்கொள்ள வாய்ப்பில்லாத பச்சிளம் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் மீது நடக்கும் கொடூரத் தாக்குதலைக் கண்டு நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு, மருத்துவமனைகளையும், ஆம்புலன்சுகளையும், அகதி முகாம்களையும், கார்களில் தப்பியோடும் மக்களின் மீதும் குறிவைத்துத் தாக்கி பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபடும் இஸ்ரேலிய இனவெறி சியோனிஸ்டுகளைத் தடுத்துநிறுத்தவும், தனது தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும் வக்கற்ற ஐ.நா-வும், தங்களது சொகுசுவாழ்க்கை மட்டுமே முக்கியமாகக் கருதும் அரபுலக நாடுகளும் பாலஸ்தீன மக்கள் முன்னும், அப்பட்டமான போர்க்குற்றங்கள் புரிந்துவரும் சியோனிஸ்டுகளை எதிர்க்கும் உலகமக்கள் முன்னும் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here