கீச்சுகீச்செனும்
சின்னச் சிட்டுக்களாக நாம்
சிறார்களாக இருந்தபோது
பறந்து திரிந்துவிளையாண்ட காலம்,
பத்துக்கு ஒன்பதும் கற்பனைதான்.

” போ ரைட் ” விசில்கொடுத்து
பஸ்ஸில் போவோம்
ரயில்உருவாக்கி சிக்குபுக்கு போவோம்
ஏரோப்பிளேன், கப்பலில் போவோம்
ரயில் ரிதமுள்ள சினிமாப் பாட்டுங்களைக்
கைகொட்டி ஆடிப்பாடிக் கேட்போம்
கடிதம் போடுவோம் கடிதம் பெறுவோம்
அம்மா–அப்பா சமைத்து விளையாடுவோம்
ஃபோன் பேசுவோம்
தந்திபோல் சேதிவரும் அழுவோம்
எல்லாமே கற்பனைதான்,
அதெல்லாம் குற்றமற்ற சுகம் !

இப்போ
அரசியலில் விளையாடுறாங்க,
8 கோடி மக்களின்
வாழ்க்கையை உருட்டிவிட்டு
அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும்
எதிர்காலத்தோடு விளையாடுறாங்க.

ஜனநாயகம் என்றால்
பொதுச் சாசன சமவிதிகளில்தானே
ஆடவேண்டும்?
எதற்கு ஆனாவும் மோவன்னாவும்
தமிழ்மக்களுக்கு எதிரா விளையாடுறாங்க ?
எதற்காக இந்தி திணிக்கிறாங்க,
மக்களைக் கேக்காமலேயே வெளயாடுறாங்க ?

கொடுமை,
வெங்கொடுமை !

இப்ப பாருங்க,
இந்தி திணிப்புக்கு எதிராக
கடிதவிளயாட்டு விளயாண்டு
தீர்த்துவிட முடியுமா ?

தமிழகம் தபால் போடும்போதெல்லாம் —
ஒன்றியம் கை கழுவிவிட்டு
பிறகே வாங்குகிறது;
இது அவாளது சுத்த தந்திரம் !

தபால்கள் எழுதி
சிக்கலான தேசிய இனப்பிரச்சினையைத்
தீர்த்த உலகவரலாறு உண்டா ?

அடுத்து விரைந்தொரு
சபைத்தீர்மானமும் போட்டு
முதலைஆளுநர் வாயிலும் போட்டு
இப்படியெல்லாம்
தீர்க்க முயலுகிறார்களாம்;

தீர்க்கிறார்களா,
நடிக்கிறாங்களா ?

எங்கள் விளையாட்டிலாவது ஒரு 10 %
எதார்த்தம் என்கிற நடப்பு உண்மை உண்டு.
இவங்க 100 % கற்பனையா
ஆடுறாங்களே, இதிலே
நம்மள எல்லாம்
விளையாட்டுப் பொம்மையாவேற ஆக்கிட்டாங்களே !

ஆமா ,
இவுக நம்மள பொம்மையா ஆக்கிட்டதே நிசமெண்டால்
இதுக்கு எதுக்காவ பீட்டரே உன்னோட
கவிதையும் கிவிதையும்
உரையும் வீச்சும் மூச்சும் கீச்சும்…?

  • பீட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here