ஜெயிலர் – இரத்த வியாபாரம்  திரைக்கதையை அமைக்கமுடியாத இடத்தில் எல்லாம் இரத்தத்தால் நிரப்புகிறார் இயக்குநர் | படத்தில் எல்லா காட்சிகளிலும் இரத்தம் இருக்கிறது!

ஜெயிலர் இரண்டாம் பாகம் இப்படித்தொடங்குகிறது. வர்மனின் தம்பியான திலீபன் இருவரைக் குழிக்குள் வைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறார். வர்மனைக் கொன்றது யார் ? என்பது தான் பிரதானக் கேள்வி? மூன்று மாதங்கள் தேடியும் அந்தப் பாத்திரம் கிடைக்காததால் குழிக்குள் இறக்கி அவர்கள் தோள்பட்டையை இரத்தக்களரி ஆக்கி சித்திரவதை செய்யத்தொடங்குகிறார் திலீபன். தமிழ் சினிமாவை வன்முரை என்ற குழிக்குள் இறங்கியதில் லோகேஷ் மற்றும் நெல்சனுக்கு பெரும் பங்கிருப்பதாகவே தெரிகிறது.

அந்தக் காட்சியிலிருந்தே இரத்தத்தின் வாடை தொடங்கியது, சில காட்சிகளைத் தவிர்த்து அத்தனை காட்சிகளிலும் இரத்தம் தெறித்துக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட சில காட்சிகளைத் தவிர்த்து அனைத்துக் காட்சிகளிலும் வன்முறை , இரத்தம் தான். முத்துவேல் பாண்டியனாக வரும் ரஜினி அறிமுகக் காட்சியிலிருந்து வன்முறை தொடங்குகிறது. அத்தனை காட்சிகளிலும் இரத்தம் . ரஜினியின் மாஸ்டர் பீஸ் என்று கொண்டாடப்படுகிற “பாட்ஷா ” வில் கூட action இருக்கும் ஆனால் இரத்தம் இருக்கவே இருக்காது.

Breaking Bad போன்ற தொடர்களில் காட்டப்படும் மெக்ஸிகோ மற்றும் போதை உலகம் உண்மையிலேயே அப்படிப்பட்ட உலகம் தான், Breaking Bad இல் ஏன் அந்த chemistry வாத்தியார் meth தயாரிக்கிறார் என்பதற்கு அங்கிருக்கும் பொருளாதாரம் , அங்கு எப்படி எளிய மக்களுக்கான மருத்துவமாக இல்லை என்ற கதை இருக்கும். வெறும் shot கள் update ஆவதாலேயே அது breaking bad தரத்துக்கு நெல்சன் படத்தை எடுக்கிறார் என்று சொல்லிவிட முடியாது.

Netflix இல் வரும் நெடும்தொடர்களில் கொண்டாடப்படும் தொடர்களில் வன்முறைக்கு பின் ஒரு அழுத்தமான மறுக்கவே முடியாத கதை இருப்பதை போல இங்கு கதை களம் ஆழமானதாக இல்லை. இவர்கள் நன்றாக ஒளிப்பதிவு செய்துவிடுவதாலேயே தரமான படமென்று சொல்லிவிட முடியாது. விஷத்தை நல்ல தட்டில் வைத்து கொடுத்துவிடுவதால் , அது விஷமில்லை என்றாகிவிடாது.

படம் தொடங்கி 20 நிமிடங்களில் 9 பேரின் இரத்தம் கேமராவில் தெறித்திருந்தது. திரைக்கதையை அறிவால் நிரப்ப முடியாத இடங்களில் எல்லாம் இரத்தத்தால் நெல்சன் நிரப்பி உள்ளார் என்றே தோன்றுகிறது. படம் பார்த்த நிறைய பேர் முதல் பாதி நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். முப்பது நிமிடங்களுக்கு பிறகு , இரத்தம் படிந்தவர்களின் எண்ணிக்கை நிமிடங்களைத் தாண்டத் தொடங்கியது உணர முடிந்தது.

சில சண்டைக்காட்சிகளில் எல்லாம் சர்வசாதாரணமாக 30 பேர் 40 பேர் கொல்லப்படுகிறார்கள். கேமராவில் இரத்தம் தெறிப்பது தான் நல்ல திரைக்கதை என்று நம் மனது கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ என்ற பயம் வந்து போகிறது. இந்த இரத்தம் பெரிய வணிகமாகிவிட்ட பின்பு , ஒரு கலவரத்தில் இல்லை stampede இல்

43 பேர் இறந்தால் கூட அது ஒரு பெரிய விடயமாக நம் மக்களுக்குத் தெரிவதில்லை.

இதை முற்போக்கு பேசுபவர்கள் கூட இதை அரசியலாகப் பார்த்தால் தவறு சினிமாவாகப் பார்த்தால் சரி என்று புதிய லாஜிக் சொல்கிறார்கள். அவர்கள் மனதும் வன்முறையைக் கொண்டாடுகிறது என்பதை எப்படி புரிய வைக்க முடியும். இதைக் குழந்தைகள் பார்க்கிறார்கள் கைதட்டுகிறார்கள் மனது பதறுகிறது. சரி கொலை என்றால் சரிதான் போல அது தான் கெத்து என்று மனதில் பதிந்துவிடுகிறது.

படிக்க: 

♦ நாங்குநேரி வன்முறைக்கு சினிமா தான் காரணமா?

♦ ஒரு கோபம் எப்படி இருக்க வேண்டும்? (சர்தார் உத்தம் சினிமா)

instagram இல் கொலைகளை செய்துவிட்டு பதியும் மாணவர்களின் செய்தியைப் பார்க்கிறோம் , நிறைய நேரங்களில் நண்பர்களே நண்பனைக் கொல்லும் செய்தியைப் பார்க்கிறோம் DC படம் வந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் ஊரான கிணத்துக்கடவு இடத்தில் ஒரு மாணவர் தனது நண்பர்களால் கொலை செய்யப்பட்டார் அது இன்ஸ்டாவில் பதிவு செய்யும்போது தெரிந்தது. இந்தப் படங்கள் குற்றவுணர்வு என்பதே தேவையில்லை , நமக்குப் பிடிக்கவில்லை என்றால் போட்டுத்தள்ள வேண்டும் என்ற கருத்தை ஒவ்வொரு காட்சியிலும் வைக்கிறார்கள்.

இங்கு சட்டம் தேவை இல்லை , எது சரி எது தவறு என்று பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை . சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லை என்றால் போட்டுத்தள்ளி விடுவார் என்றே சொல்லப்படுகிறது. பழைய படங்களில் இறுதிகாட்சியில் தான் உச்சபடிச்ச சண்டைகள் மற்றும் துப்பாக்கி சூடுகள் வரும். அதுவும் தூரத்திலிருந்து காட்டுவார்கள் . அது மூன்றாம் மனிதர்கள் பார்ப்பதைப்போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இப்போது வாய்க்குள் வைத்து சூப்பர் ஸ்டார் சுடுகிறார் மண்டைக்கு வெளியே குண்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் துப்பாக்கியை எடுக்கும்போது , அதை கொண்டாடும் விதமாக அனிருத் இசை போட்டிருக்கிறார், தமிழ் ரசிகனை சைக்கோவாக மாற்றும் வேலையை ரசித்து ரசித்து செய்திருக்கிறார்கள்.

எனக்கு முன்னாள் உட்கார்ந்திருக்கும் குழந்தைகள் நிறைய வன்முறை காட்சிகளில் குதித்து கைதட்டுவதை பார்க்க முடிந்தது.

நமோ நாராயண நகைச்சுவை ஏற்கனவே அவர் செய்த நாடோடிகள் பாத்திரத்தை நினைவுபடுத்தியது . புதிதாக ஒன்றும் இல்லை. ஆனால் அந்தப் பாத்திரம் ஒரு இடத்தில் விமலாக வரும் யோகி பாபுவை சாட்டையால் முதுகில் அடிக்கிறது , அது ஒரு நகைச்சுவை காட்சியாம். அதாவது இங்கு நகைச்சுவை காட்சி கூட அதிக வன்முறை நிறைந்ததாக இருப்பதைக் காண முடிகிறது. அது ஒரு மூன்றாம் தர நகைச்சுவை காட்சியாகவே மனதில் பட்டது. ரஜினி படங்களை சிறுகுழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற பொறுப்பு ரஜினி என்ற உச்ச நட்சத்திரத்துக்கு வேண்டாமா என்று தோன்றியது.

படிக்க:

♦ மாணவன் தேவேந்திர ராஜா மீதான சாதிவெறி தாக்குதல்! அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் தடுக்கும் வழி என்ன?

♦ இளைய தலைமுறையை காட்சி போதைக்குள் ஆழ்த்தும் சினிமாக்கள்!

நாங்கள் பார்த்த ரஜினிகாந்த் இப்படியானவர் இல்லை அண்ணாமலை படத்தில் நண்பனை பழிவாங்க உச்சத்துக்கு போகும் அண்ணாமலை பின் நண்பனை பழிவாங்க என்னென்னமோ செய்துவிட்டேனே என்று கலக்குவார் காரை நிறுத்திவிட்டு வெளியே சோகத்துடன் நின்று பார்க்கும் காட்சி நினைவுக்கு வருகிறது.

எங்களுக்குத் தெரிந்த சூப்பர் ஸ்டார் ராஜா சின்ன ரோஜாவில் தீமை ஒன்று செய்தீர்கள் தீமை நடந்தது என்று ஒரு பாடல் வழியாக குழந்தைகளுடன் உரையாடி கை சுற்றி ஐஸ் கிரீம் கொடுப்பவர்.

ரஜினி படங்களில் அவர் நட்சித்திரம் என்பதைத்தாண்டி ஒரு எளிய ஆளாக வளம் வருவார். பாம்புக்கு பயப்படுவார் , சாதாரண ஆட்களுடன் சேர்ந்துகொண்டு காமெடி செய்துகொண்டிருப்பார் தேவைப்படும்போது எதிரிகளுக்கு மட்டும் விஸ்வரூபம் காட்டிவிட்டு பின் மறுபடியும் சாதாரண ரஜினியாக பல படங்களில் வருவார். ஆனால் இந்த ஜெயிலர் தாத்தா 2k kid களிடம் செல்லவேண்டும் என்று வன்முறையை ஒரு வழியாக எடுத்துக்கொண்டு விட்டாரோ என்று பயம் வருகிறது.

ஜெயிலர் திரைக்கதை சிறப்பாக இருக்கிறதா ? என்றால் அதே பழைய ஜெயிலர் கதை தான் அங்கு வர்மன் இங்கு அவர் தம்பி திலீபன் பின் அவருக்கு பாஸான போதி கல்பக் எஸ் ஜெ சூர்யா வித்யா பாலன் மற்றும் மிதுன் சக்கரபார்த்தி. போன பகுதியில் வருவதைப்போல மோகன் லால் , சிவராஜ் குமார் , ஜாக்கி ஷெராப்

எல்லாம் தலைவர் குடும்பத்தைக் காப்பதையே முழு நேரத்தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

கூடவே இந்தப் பார்ட்டுக்கு ரித்திக் ரோஷன் வருகிறார். ரீலுக்கு ஏற்றார் போல இவர்களை நடக்கவைத்துவிட்டு அனிருத் BGM போட்டிருக்கிறார். நமோ நாராயண செஸ் காட்சிக்கு திலீபன் கொடுக்கும் கமெண்ட் ரசிக்கும்படி இருந்தது. படம் தொடங்கும் போது ரஜினிக்கு கொடுக்கப்பட்ட animation மற்றும் அனிருத் போட்ட பின்னணி இசை மெய் சிலிர்க்கும் படி இருந்தது. ஒரு ரஜினி ரசிகனாக ஹுக்குமை விட “இன்றைக்கும் என்றைக்கும் ” என்ற பாடல் காலத்தைத் தாண்டி நிற்கும் என்று தோன்றுகிறது.

அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் எல்லாருமே தனது தொழிலில் professionals. வில்லனாக வரும் எஸ் ஜெ சூர்யாவின் பெயர் கல்பக் போதி , போதி என்பது அமைதியை விரும்பும் புத்தரின் தத்துவமாம்.

அதாவது enlightenment என்கிறார்கள். இந்த போதி வன்முறையான போதியாக உள்ளார். நெல்சன் ஒன்றும் அவ்வளவு அப்பாவி அல்ல , தெரியாமல் ஒரு பெயரை வைப்பதற்கு.

படத்தில் முக்கியமான காட்சியை எல்லாம் வசனமாக கடந்து போகிறார்கள் , உதாரணமாக எஸ் ஜெ சூர்யா

ரம்யாகிருஷ்ணனிடம் சொல்லும் உண்மை. மகன் கொலைக்கு காரணம் ஜெயிலர் தான் என்பதை வசனத்திலேயே கடந்து செல்கிறார் இயக்குநர் . அதே நேரம் ஜெயிலர் குடும்பம் ஜெயிலர் நல்லவர் தான் ஜெயிலர் மகனே கெட்டவன் என்பதையும் வசனத்திலேயே சொல்லப்படுகிறது. ஒரு நல்ல திரைக்கதையை இப்படி எழுத மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நம் மண்டையில் இது ஒரு நல்ல திரைக்கதை என்று மண்டை கழுவப்பட்டிருக்கிறது அவ்வளவே..

படத்தில் துப்பாக்கி , இரத்தம் மற்றும் கொலைகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் ஒரு நல்ல காட்சிக்கு கொடுக்கப்படவே இல்லை . படம் எந்த இடத்திலும் உச்சத்துக்கு போகவே இல்லை . ஒரு திரைக்கதையாகவே இது மொன்னையான கதையாகவே இருந்தது. அதைத்தாண்டி கேமரா நகர்வுகள் , மற்றும் இசை ரஜினியின் இருப்பு இதுவே படத்தை பலருக்கு சலிப்புத்தட்டாமல் பார்க்க வைக்கலாம். எனக்கு எல்லாம் சூர் மொக்கையாகவே இருந்தது.

திரைக்கதை வேண்டும் என்ற யோசிக்கும் இடத்தில் எல்லாம் துப்பாக்கிகளை நம்பி இருக்கிறார் நெல்சன். படத்தில் முதல் காட்சியிலிருந்து இரத்தம் தெறிக்கிறது என்றால் படத்தில் திரைக்கதையே இல்லை என்று பொருள் . திரைக்கதை பலவீனமாக இருந்தாலும் கேமரா பரபர என்று பறக்கும் போது எடிட்டிங் அடுத்து அடுத்து என்று செல்லும்போது வேகமாக போவதைப்போல ஒரு தோற்றம் உருவாகிறது அவ்வளவே. இது பழைய ஹரி techniq.

படிக்க:

♦ ’டோரதி’ பற்றி விமர்சிக்கக் கூடாதா?

♦ பாசிச கோமாளி விஜய்யின் மக்கள் விரோத ஆட்சி!

பின்னணி இசையும் கேமராவும் எடிட்டிங்கும் படத்தின் பெரிய பலம் ஒரு மொக்கை படத்தை நல்ல படமாக காட்டுவது இதுதான். தட்டு நன்றாக உள்ளது பரிமாறப்பட்ட உணவு அவ்வளவு ருசியாக இல்லை அதைத்தாண்டி உடலுக்குத் தீங்காகவும் உள்ளது.

நல்ல நல்ல படங்கள் வந்துகொண்டிருக்கிறது , நிறைய புதுமுக இயக்குநர்களை பார்க்க முடிகிறது அப்படி சினிமா ஒரு அடி முன்னுக்குச் சென்றால் சட்டென்று சூப்பர் ஸ்டார்கள் தோன்றி லாஜிக் இல்லாத படத்தைக் கொடுக்கிறார்கள். சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று ஒரு கூட்டம் வரும் , சினிமாவை நாங்கள் சினிமாவாக பார்த்ததால் தான் வோட்டு போடவில்லை சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று சொன்னவர்கள் தான் அதிகம் வாக்களித்துள்ளார்கள்.

வாழ்வில் லாஜிக் முக்கியம். லாஜிக் இல்லாத விடயங்களை ஏற்றுக்கொள்ள மனதை சினிமா பழக்குகிறது. ஏன் முற்போக்கு பேசும் அறிவுஜீவிகளே இதற்கு அடிபணிகிறார்கள். அரசியல் புரிந்தவர்கள் சினிமாவை பார்த்தால் அங்கே ரசித்துவிட்டு வெளியே வந்துவிடுவார்கள் , அரசியல் புரியாதவர்கள் , வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் அரசியலற்ற இளம் தலைமுறை இந்தப் படத்திலிருந்து தான் லாஜிக் இல்லாததை நம்புகிறது.

ஒரு பெரிய ஹீரோ படம் எப்போதும் ஆபத்து. நாயக பிம்பம் எப்போதுமே ஆபத்து. ஒரு நாயகனால் என்னவேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற கதை எப்போதுமே கதை அல்ல எளிய மக்களை வீழ்த்துவதற்கான ஆயுதம். உலகில் ஒரே ஒரு ஆளுக்கு மட்டுமே மூளை உண்டு மற்றவர்கள் எல்லாம் bgm க்கு பின்னால் நடப்பவர்கள் என்ற கதை எப்போதுமே ஆபத்து. நாயக பிம்பம் 80 90 களுக்கு உரியது . அந்த பழைய நாயக பிம்பம் நாயகனிடம் அவ்வளவு வன்முறை இருக்காது. அவன் பத்து பேரை அடித்தால் கூட நிறைய இடங்களில் போனா போகுது என்று வன்முறையை விட்டுவிட்டு மன்னித்து விடும் காட்சிகளை ரஜினிகாந்த் , விஜயகாந்த் படங்களில் பார்க்க முடியும்.

ஜெயிலரில் ரஜினி மட்டுமே பல பேரைக் கொல்கிறார் . பேரன் கழுத்துக்கு மேலே கத்தி வருகிறது பேரனிடம் இருந்து இரத்தம் வருகிறது , ரஜினி அவர் தலையை சீவுகிறார். ரஜினி படங்களிலேயே குழந்தைளுக்கு வன்முறையை நேரடியாகச் சொல்லும் படம் ஜெயிலர் தான். இன்னும் எத்தனை நாட்களுக்கு தலைவர் கண்ணு பாரு தலைவர் முடி பாரு என்று பேசிக்கொண்டிருக்கப்போகிறோம்..

நம்மை மூளைச்சலவை செய்வதில் இந்த மாஸ் ஹீரோக்கள் பங்கு பெரியது. நான் சினிமா பற்றி எழுதவேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கண்முன்னே இப்படி நடக்கும்போது எழுதாமல் இருக்க முடியவில்லை.

முகநூல் பதிவு: தோழர் கார்த்திக்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here