வேதம் ஆகமம் மனுதர்மம் இவற்றை ஏன் கொளுத்த வேண்டும்?

மக்கள் அதிகாரம் இந்த பார்ப்பன கொடுங்கோன்மையும் சித்தாந்த அடித்தளமாக இருக்கும் வேதங்கள் ஆகமங்கள் மனு தர்மம் இவற்றை தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி கொளுத்த இருக்கிறோம்.

0
215

வேதம் ஆகமம் மனுதர்மம் இவற்றை ஏன் கொளுத்த வேண்டும்?

னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாததாக்கி மீண்டும் கருவறை தீண்டாமையை நிலைநாட்டி இருக்கிறது. ஆகமகோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது ஆலயங்களில் எந்தப் பணிக்கும் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் நியமிக்க முடியாது என்று திட்டவட்டமாக ஆகமகோயில்கள் என்ற பெயரிலான பெருங்கோயில்கள் அனைத்தையும் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைத்து இருக்கிறது உயர்நீதிமன்றம். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து கோயில்களையும் பார்ப்பனர்களிடமே ஒப்படைக்க வேண்டும் இந்து அறநிலையத்துறை சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று முழுக்க முழுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களின் சொத்துக்களையும் பார்ப்பனர்களிடம் ஒப்படைப்பதற்கு மீண்டும் வழக்கு தொடுத்து இருக்கிறார் சுப்பிரமணியசாமி. இன்று இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசியல் சட்டம் குப்பையில் வீசப்பட்டு மனுதர்மமே ஆட்சி செய்கிறது. அதற்கு உதாரணம் பில்கிஸ்பானு வழக்கில் சிறையில் இருந்த 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருக்கிறது . பார்ப்பனர்கள் நல்லவர்கள் அவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று சொல்லி மூன்று பார்ப்பனர்களை விடுதலை செய்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ப்ரீத்தம் லோதி என்பவர் பார்ப்பனர்கள் பொதுமக்களை முட்டாளாக்கி ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்கள். இளம் பெண்களை முன் வரிசையில் அமரவைத்து விழுங்குவது போல் பார்க்கிறார்கள் என பேசியதற்காக அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளும் நமக்குத் தெளிவாக காட்டுவது என்ன என்றால் பார்ப்பனர்கள் செய்யும் குற்றத்துக்கு தண்டனை கிடையாது, பார்ப்பனர்களுக்கு எதிராக பேசினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மனுநீதிதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதே. பார்ப்பன கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தி தனித்து நிற்கும் தமிழ்நாட்டிலும் மனுதர்ம ஆட்சியை நிறைவேற்ற வேண்டும் என்று துடிக்கிறது ஆர் எஸ் எஸ் பாஜக கும்பல். ஆர்எஸ்எஸ் பாஜக பார்ப்பன கும்பல் புனிதம் என்று பிரச்சாரம் செய்கின்ற வேதங்கள் மனுதர்மம் ஆகமங்கள் இவை அனைத்தும் சாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்றன. உழைப்பாளி மக்களை தமிழ் மக்களை சூத்திரர்கள் என்றும் தஸ்யூக்கள், தாசர்கள், இழிந்த மக்கள் என்று பலவாறாக அவமானப்படுத்துகின்றன. இதன் காரணமாகத்தான் 1927 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி மனுதர்மத்தை எரித்தார். அதன் பின்னர் தந்தை பெரியார் பல்வேறு தருணங்களில் வேத ஆகமங்களை மனுதர்மத்தை எரித்தார். இன்று இந்திய ஒன்றியம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிற ஆர்எஸ்எஸ் கும்பல் இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்றும் மனுதர்ம அடிப்படையிலான புதிய சட்டத்தை இயற்றுவோம் என்றும் வெளிப்படையாக பேசுகின்றனர். இந்த நிலையில் மக்கள் அதிகாரம் இந்த பார்ப்பன கொடுங்கோன்மையும் சித்தாந்த அடித்தளமாக இருக்கும் வேதங்கள் ஆகமங்கள் மனு தர்மம் இவற்றை தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி கொளுத்த இருக்கிறோம். மனுதர்மம், வேத ஆகமங்கள் இவைகள் எப்படி ஜனநாயக விரோதமானவை உழைக்கும் மக்களுக்கு எதிரானவை என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் கீழே தருகிறோம் இந்த எடுத்துக்காட்டுகள் கொளுத்த வேண்டியதன் நியாயத்தை உணர்த்தும் என்று நம்புகிறோம்.

 

நாங்கள் நாற்புறமும் அரக்கர்களால் சூழப்பட்டு இருக்கிறோம் அவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்கள் யாகம் செய்யாதவர்கள் அவர்களுடைய ஆச்சாரங்கள் எங்களுடைய போன்று இல்லை அவர்கள் மனிதர்கள் இல்லை பகைவர்களை அழித்தொழிக்கும் இறைவனே இந்த அரக்கர்களை அழிப்பாயாக சூத்திரர்களைப் பற்றி ( ரிக்வேதம் முதல் பாகம் செய்யுள் 100/8 ).

வழிப்போக்கர்களிடம் கொள்ளையடிக்கும் திருடர்களைப் போல் தெய்வம் அற்ற தாசர்களுடைய செல்வங்களை திருடி இந்திரனை போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும் ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பாக்க வேண்டும் (ரிக் வேதம் 1/ 103/ 36)

இந்திரனே ஆந்தையைப் போலும் ஆந்தை குஞ்சை போலும் இருக்கும் தாசர்களை கொள். நாயை போலும் கழுகைப் போலும் உள்ள தாசர்களை நசுக்கி அழி. (ரிக் வேதம் 7 /14/ 22)

அரண்மனை புரோகிதரை நியமிக்காத மன்னனின் படையல்களை கடவுள் ஏற்க மாட்டார். (ஐத்ரிய பிரமாணம் 824)

சூத்திரனுக்கு சொத்து சேர்க்க உரிமை இல்லை. அவன் சொத்து சேர்ப்பது பிராமணன் கஷ்டப்பட வழிவகுக்கிறது. பிராமணன் சூத்திரனின் சொத்தை வன்முறையாலும் கைப்பற்றலாம். (ஆபஸ்த்தம்ப தர்மசூத்திரம்)

சாதிதான் தர்மம். சாதித்தொழிலே குல தர்மம். (ராஜாஜி)

உழைக்கும் மக்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான வேத, மனுதர்ம, ஆகம நூல்களை எரிப்போம். செப்டம்பர்17 பெரியார் பிறந்தநாளில் மக்கள் அதிகாரம் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்ப்பீர்.

கழுத்தை நெரிக்கும் காவிபாசிசம் வீழ்த்த ஒன்றுபடுவோம். அக்8-ல் நடைபெறும் விழுப்புரம் மாநாட்டில் திரளாக பங்கேற்ப்பீர்.

தோழர் காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here