ருஷம் என்பதற்கு, அதாவது சித்திரை வருடப்பிறப்பிற்கான காரணத்தை விளக்குகிறது அபிதான சிந்தாமனி (1899 வருட பதிப்பு) கலைக்களஞ்சிய நூல்.

வருஷம் – 1. ஒரு முறை நாரதமுனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்ன, அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என,

உடன்பட்டுத் தான் (60,000) வீடுகளிலும் பார்த்து இவர்(கண்ணன்) இல்லாவீடு கிடைக்காததினால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மயல்கொண்டு அவரைநோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங்கொண்டேன் என்றனர். கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.  இவளுடன் கண்ணன் அறுபதுவருஷம்

கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம்பெற்றனர்.

2.(60). பிரபவ, விபவ, சுக்கில, பிர மோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகு தானிய, பிரமாதி, விக்ரம, விஷூ,சித்திரபானு, சுபானு, தாரண,பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர,நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பரர்பவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்.

பிலவங்க,கீலக, சௌமிய, சாதாரண,விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித் தார்த்தி, சௌத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி. இரத்தாக்ஷி, குரோதன, அக்ஷய இவ்விருபதும் அதமவருடங்களாம்.

  1. பூமி தன்னினும் பலமடங்கு பெரிய சூரியனை ஒருமுறை சற்றி வருதற்கு (365 1/4) நாட்கள் ஆகின்றன. அதுவே வருஷம்.

இந்தக் கதையின் ஆங்கில வடிவம் P.V.Jagadisa Ayyar அவர்கள் ஓவியம் வரைந்த South Indian Festivities (1920 ஆம் ஆண்டு பதிப்பு)நூலிலும் உண்டு. அந்தக் கதையினை பின்னூட்டப் பகுதியில் இணைத்துள்ளேன்.

இந்த 60 வருடங்கள் பற்றி குறிப்புகள் உள்ள வரிசையில் நாரத புராணம்,பாகவத புராணம்,ஶ்ரீ விஷ்ணு புராணம்,ஶ்ரீ தேவி பாகவதம்,பிருஹத் சம்ஹிதை என பல புராண நூல்கள் தொடங்கி ஜோதிட நூல்களும் உண்டு.

வருஷத்தோட பெயர்கள்தான் இத்தனை ஆபாசமா சொல்லியிருக்குன்னு பார்த்தா, ஒவ்வொரு வருஷமும் எந்தெந்த வர்ணத்தவருக்கு சாதமா பாதகமா இருக்கும் என்ற குறிப்பும் ஜோதிட நூல்களில் உண்டு, உதாரணத்திற்கு ஒன்று,

“The last year of the last yuga is Kshaya; there Will then be much rain in the land; the Brahmins will be afflicted with fear and farmers will prosper. The Vysyas and Sudras will be happy as also persons that deprive others of their property. Thus have been described briefly the effects of the sixty years of Jupiter’s cycle.”

இது வராஹமிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதையில் (Brihat Samhita,ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஆசிரியர் N.Chidambaram Iyer, 1884 ஆம் ஆண்டு பதிப்பு)60 வருடங்களில் கடைசியாக சொல்லப்பட்டுள்ள அக்ஷய எனும் வருடம் பற்றிய குறிப்பு இது.

இத்தோட நின்றுவிட்டதா? அதுதான் இல்லை, N.P.Subramaniya Iyer அவர்கள் எழுதிய Kalaprakasika எனும் நூல் கிழமைகளில் வர்ணாசிரமத்தின் பாதிப்பைக் கூறுகிறது;

கிழமைகளில்,

ஞாயிறு : பிராம்மணர்களுக்குச் சாதகமானது

செவ்வாய்: க்ஷத்ரியர்களுக்குச் சாதகமானது

சனி: வைசியர்களுக்குச் சாதகமானது

திங்கள்,புதன்,வியாழன்,வெள்ளி: மற்றவர்களுக்கு.

Among malefic days, Sunday is favourable for Brahmanas; Tuesday for Kshathriyas; and Saturday for Vaisyas and other castes.

ஆணுக்கு தனி கோத்திரம்,பெண்ணுக்கு தனி கோத்திரம் இருக்க வேண்டும்,ஒரே கோத்திரம் உள்ள ஆண் பெண் சேர்ந்தால் தீயதை விளைவிக்கும்.

The Gothras of the man and the woman should be different. If it be the same, it will produce evil.

கடகம்,மீனம்,விருச்சிகம் பிராம்மணர்களுக்கானது,

துலாம்,சிம்மம்,தனுசு க்ஷத்ரியர்களுக்கானது,

மேஷம்,மிதுனம்,கும்பம் வைசியர்களுக்கானது,

ரிஷபம்,கன்னி,மகரம் சூத்திரர்களுக்கானது.

மேல் ஜாதி ஆணுக்கும் கீழ் ஜாதிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுதல் கூடாது.

குறிப்பாக கவனிக்க வேண்டியது யாது எனில் ஜோதிட நூல்கள் கூறும் பலன்கள் அனைத்துமே ஆண்களுக்குக்தான், விவாஹத்திற்கான பொருத்தம் கூட ஆண்களுக்குச் சார்பாக எழுதப்பட்டுள்ளதே தவிர ஒரு நூலும் இது பெண்ணுக்கு ஏற்றதா என எந்த ஒரு நாளும் நட்சத்திரமும் நேரமும் ராசியும் குறிப்பிடப் படவில்லை. ஆகவே ஜோதிடம் முழுக்க முழுக்க ஆண் ஆதிக்க வன்மம் சார்ந்தவையே என்பதில் சந்தேகம் இல்லை.

Bangalore Venkata Raman (Editor,The Astrological Magazine) அவர்கள் எழுதிய Hindu Predictive Astrology எனும் நூலில் உள்ள குறிப்பைத் தருகிறேன்;

கிரகங்களின் ஜாதிகள்:

சுக்கிரன் (Venus), குரு(Jupiter) பிராம்மணர்களுக்கு உரிய கிரகங்கள்.

சூரியன்(Sun), செவ்வாய்(Mars) க்ஷத்ரியர்களுக்கு உரிய கிரகங்கள்.

சந்திரன்(Moon) வைசியர்களுக்கு உரிய கிரகம்.

புதன்(Mercury) சூத்திரர்களுக்கு உரிய கிரகம்.

சனி(Saturn) வர்ணமற்றவர்களுக்கு (Antyaja) உரிய கிரகம்.

Planetary Castes.-Venus and Jupiter are Brahmins or holy people; the Sun and Mars are Kshatriyas or belong to the warrior caste; the Moon is Vaisya or trader; Mercury is Sudra or farmer and Saturn is Antyaja or untouchable.

இப்படி ஆபாசமும் வர்ண சாதீயப் பாகுபாடும் கொண்ட வருடம், நாள்,கிரகம், நட்சத்திரம், ராசி, லக்னம் என எல்லாவற்றிலும் ஆண் ஆதிக்கமும் வன்மமும் நிறைந்துள்ளது என்பதே உண்மை. இவற்றைப் புரிந்து கொள்வோர் இந்த மாயையிலிருந்து விடுபட்டு மனிதம் உள்ளவராக சக மனிதரை நேசிப்பவர்களாக மாற இயலும்…

இதையும் படியுங்கள்:

ஆபாசமான கதைகளின் அடிப்படையில் தோன்றிய வருடப் பிறப்பு முக்கியமா அல்லது எல்லா  மதத்தினரும் சமத்துவத்துடன் கொண்டாடும் தைத் திருநாள் முக்கியமா என கேள்வி எழ வேண்டும்!

இல்லைங்க, எனக்கு புராணங்களின் ஆபாசம் முக்கியம், ஆண் ஆபாசமான கதைகளின் அடிப்படையில் தோன்றிய வருடப் பிறப்பு முக்கியமா அல்லது எல்லா  மதத்தினரும் சமத்துவத்துடன் கொண்டாடும் தைத் திருநாள் முக்கியமா என கேள்வி எழ வேண்டும்!ஆதிக்கம் முக்கியம், வர்ண சாதீய அடக்குமுறை முக்கியம், வருடம் ஜோதிடம் நாள் நட்சத்திரம் முக்கியம் என்கிறவர்கள் அவர்கள் வழியிலேயே செல்லட்டும்… அறியாமைக்கு அணை கட்ட இயலாது,ஆனா விழிப்புணர்விற்கு வழி காட்டலாம்!

  • Dhinakaran Chelliah

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here