த்திய பிரதேசம் மாநிலம் தான் பூண்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாநிலம். கடந்த 2011- 2012 ஆம் ஆண்டுகளில் 11.50 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி 2020 – 2021 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19.83 லட்சம்  மெட்ரிக் டன்னாக இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மாநிலத்தின் மால்வா-நிமத் பகுதியில் அதிகமாக பயிரிடப்படுகிறது. மாநில அரசின் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தின் கீழ் பூண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பூண்டை விவசாயிகள் ஆற்றில் கொட்டும் வீடியோ வைரலானது வீடியோ வைரலாகவில்லை என்றால் நமக்கு இந்த விஷயமே தெரிய வந்திருக்காது. சேஹொர் மற்றும் ராஜ்கர் மாவட்டங்களை பிரிக்கும் பார்வதி ஆற்றில்தான் விவசாயிகள் பூண்டை மூட்டை மூட்டையாக பிரித்து கொட்டினார்கள்.

இதேபோல் பத்னாவர்  தாலுகாவில் உள்ள நாக்தா கிராமத்தில் பூண்டு விலை சரியாக போகாததால் சாம்பல் ஆற்றில் டிராக்டர் கொண்டுவந்த பூண்டு மூட்டைகளை ஆற்றில் கொட்டியுள்ளார்கள் விவசாயிகள்.

“ஒரு கிலோ பூண்டை உற்பத்தி செய்ய எங்களுக்கு ரூபாய் 30 லிருந்து 40 ரூபாய் வரை ஆகும். ஆனால் வியாபாரிகள் வாங்குவது ரூபாயை 1-லிருந்து 4 என்ற வரம்பில் தான் இது எங்களுக்கு பெரிய நஷ்டம். இதனால்தான் பூண்டை ஆற்றில் கொட்டுகிறோம்”

நாட்டின் மிகப்பெரிய பூண்டு சந்தையான மண்ட்சவூர் மண்டி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது. இங்கு 1 கிலோ பூண்டின் விலை அதிகபட்சமாக 1 ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக 50 பைசாவுக்கும் விற்பனையானது. “ஒரு கிலோ பூண்டை உற்பத்தி செய்ய எங்களுக்கு ரூபாய் 30 லிருந்து 40 ரூபாய் வரை ஆகும். ஆனால் வியாபாரிகள் வாங்குவது ரூபாயை 1-லிருந்து 4 என்ற வரம்பில் தான் இது எங்களுக்கு பெரிய நஷ்டம். இதனால்தான் பூண்டை ஆற்றில் கொட்டுகிறோம்” என புல்மோக்ரா கிராமத்தை சேர்ந்த ஜாம்ஜெட்கான் என்ற விவசாயி கூறுகிறார்.

மேலும், விவசாயிகள் கூறுகையில் பவுந்தர் திட்டம் (உற்பத்தி மற்றும் விற்பனை விலைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதற்காக) இப்போது செயல்படவில்லை என்று கூறுகிறார்கள். பவுந்தர் திட்டத்தின் கீழ் பூண்டின் விலையை 1 குவிண்டாலுக்கு ரூபாய் 4000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறார்கள். இந்த விலை வீழ்ச்சியை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினால் இதை என்ன என்று கூட அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு 1 கிலோ பூண்டின் விலை ரூபாய் 300 வரை விற்பனையானது. ஆனால் இன்று 1 கிலோ 50 பைசாவிலிருந்து அதிகபட்சமாக 8 ரூபாய்தான். தான் விளைவித்த பொருளுக்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர்.

கடந்த 1 ஆண்டாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் முக்கியமான கோரிக்கை (MSP) ‘குறைந்தபட்ச ஆதார விலை’ அதை இன்றுவரை நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது ஆளும் பாசிச பாஜக.

உற்பத்தி அதிகமானதால் விலை குறைந்து போனது என அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூறும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொழிற்சாலைகளில் நடக்கும் அதிக உற்பத்தியால் கார் போன்ற வாகனங்களின் விலை குறைந்து போவதில்லை. ஆனால் விவசாயிகளுக்கு மட்டும் இந்த அவல நிலை. விவசாயிகளை ஒழித்துக்கட்ட திட்டமிட்டே இந்த விலை குறைப்பு நடத்துகிறார்கள்.

கடந்த 2017 ஆம் குறைந்தபட்ச ஆதார விலைக்காக (MSP) போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்றது தற்போது ஆண்டு கொண்டிருக்கும் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான இதே பாஜக அரசு.

இதையும் படியுங்கள்: குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்கக் கோரி ஆர்பாட்டங்கள்!

பூண்டின் உற்பத்தி அதிகம் ஆனாலும் அதைப் பதப்படுத்துவதன் மூலம் பாதுகாக்க முடியும். மேலும் பூண்டையும் மதிப்புக் கூட்டுப் பொருள் ஆக்குவதன் மூலம் விவசாயிகளை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற முடியும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயிப்பதன் மூலம் அவர்கள் நஷ்டம் அடைவதை தடுக்க முடியும். ஆனால் இது பற்றி எந்த அக்கறையும் அரசுக்கு இல்லை.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என கூறி ஆட்சிக்கு  வந்த பாசிஸ்ட் மோடி விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றி விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்க கடுமையாக உழைக்கிறார். கார்ப்பரேட் நலனில் அக்கறை செலுத்தும் காவி கும்பலுக்கு விவசாயிகளின் மீது இம்மி அளவும் அக்கறை கிடையாது. இந்த கும்பலுக்கு பாடம் புகட்ட விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் தான் புரிய வைக்கும். விவசாயிகளுடன் அனைவரும் கரம் கோர்த்து துணை நிற்போம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here