சாதிநூல் பதிப்பு 1875

திருவாரூர் ஞானப்பிரகாச சுவாமிகளால் ஆரிய பாஷையிலுள்ள ஆகம புராண இதிகாச நூல்களின் ஆதாரங்களில் உள்ளவற்றைத் திரட்டி இயற்றப்பட்டு, 1875 ல் அச்சிடப்பட்ட நூல்தான் “சாதிநூல்” எனும் அரிய பொக்கிஷம். இந்நூலைப் பற்றி எழுத பலநாட்களாக நினைத்திருந்தும் அதற்கான வாய்ப்பு இன்றுதான் அமைந்தது.

வேத நூல்கள், உபநிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகம நூல்கள், தர்மசாஸ்திரங்கள், எண்ணற்ற வைதிக நூல்கள் கூறும் நால் வர்ணப் பிரிவுகளும், அதிலிருந்து உண்டான முக்கியமான சங்கர (கலப்பு) சாதிகளும் கூறப்பட்டிருந்தாலும், அவற்றிலிருந்து இன்றைய தேதியில் காணப்படும் நூற்றுக் கணக்கான சாதிகளின் உற்பத்தி எவ்வாறு உண்டானது என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும்.வேத நூல்கள் தொடங்கி பக்தி இலக்கியம் வரை வர்ணத்தையும் சாதியையும் பற்றித் தெளிவான விளக்கங்களும் குறிப்புக்களும் இருந்தாலும் ஆங்கிலேயர்களே இன்றைய சாதி உருவாக்கத்திற்குக் காரணம் என பொய்யான தகவல்களைப் பரப்புகிறவர்களும் உண்டு.இந்தப் பொய்யான கூற்றை உடைத்துத் தகர்க்கிறது “சாதிநூல்” எனும் அரிய ஆவணம்.

இந்நூலில் உள்ள பாடல்கள் கீழ்வரும் தனித்தனி தலைப்புகளில் உள்ளன;
சுத்தசாதி யுற்பவம்,சங்கரசாதி யுற்பவம்,அநுலோம ருற்பத்தி,பிரதிலோம ருற்பத்தி, அந்தராள ருற்பத்தி,களவிற்பிறந்த வநுலோம ருற்பத்தி,களவிற்பிறந்த பிரதிலோம ருற்பத்தி,அநுலோமரிற் பிறந்த விராக்திய ருற்பத்தி,பரதிலோமரிற் பிறந்த விராக்திய ருற்பத்தி, சுருதிமானிற் பிறந்த விராக்திய ருற்பத்தி,பட்டசாலிய னிரும்பூதியிற் பிறந்த விராக்திய ருற்பத்தி,சைவ தீக்ஷைக்குரியவர் மூவரென்பது(இருபிறப்பாளர்கள் மட்டுமே தீக்ஷைக்குரியவர்கள்),சாதிய்யர்வு முறை,சாதி தாழ்வு முறை.

இந்த நூல் ‘சூத சம்ஹிதை’ நூலில் உள்ள ‘ஜாதி நிர்ணயம்’எனும் ஆதார நூலை பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறது.இந்த நூலில் உள்ள தகவல்களை தனிப் பதிவில் எழுத இருக்கிறேன்.

சாதி நூல் குறிப்பிடும் நால் வர்ண சுத்த சாதி வகையினரைத் தவிர, அநுலோம சாதி வகை, பிரதிலோம சாதி வகை, அந்தராள சாதி வகை,விராக்திய சாதி வகை இவர்களுக்குள் ஏற்படும் கலப்பு சாதியினரை பட்டியலிட்டுக் கூறுகிறது. இந்த நூலில் அநுபந்தப் பகுதியில் மட்டும் 11 சாதித் தொகைகளையும்,96 சாதிகளின் வகைகளையும் குறிப்பிடுகிறது.

இந்நூல் அநுபந்தம் பகுதியில் உள்ள சாதி வகைகளின் பட்டியலை அப்படியே கீழே தருகிறேன்;

நால்வகை சுத்தசாதி(The four pure castes):

1. பிராமணர், பார்ப்பார், brahmans
2.சத்திரியர், அரசர், சான்றோர், the royal or
military race
3. வைசியர், செட்டிகள், cultivators, merchants and herdsmen
4. சூத்திரர், வேளாளர், servile caste

நால்வகை சங்கரசாதி(Four sorts of mixed castes):
5. அநுலோமர், mixed race of high-caste men character marrying low-caste women
6. பிரதிலோமர் mixed race of low-caste men marrying high-caste women
7. அந்தராளர், mixed caste of illegitimate origin
8.விராத்தியர், mixed breed of miscellaneous character

அநுலோமர்(Mixed castes of high-rank):
9. தெலுங்க வேதியர், Telugu brahmans
10. கோயிற் கணக்கர், writers of higher sort
11. பண்டிதமறையோர், brahmans practising
medicine. &c.,
12. ஓச்சர், drummers, and temple priests 13. மருத்துவர், வைத்தியர், doctors of medical practice
14. கொந்தக வேளாளர், a tribe authorised to perform brahmanical and royal duties 15. சவள வேளாளர், those authorized to pu nish with a bearded dart
16.சேனைக்கடையர், military bazaarmen.

பிரதிலோமர்(Mixed castes of low-rank):
17. சூதர்,புராணிகர், bards, encomiasts.
18. வைகானசர், கத்தா, a class of priests.
19. சாலியர், பட்டாசாலியர், & class of weavers
20. சேடர், a branch of the weaving class. 21. சேணியர், another branch of the weaving class.
22. யாழ்ப்பாணர், minstrels
23. ஆயர்,இடையர், shepherds
24. பழையர், கள்விலைஞர், சௌண்டிகர், toddy sellers
25. பறையர், சண்டாளர், புலைஞர், pariahs of base rank

அந்தராளர்(Castes of illegitimate origin):
26. கானீனர், children born during the
mother’s pretended maiden-hood
27. குண்டகர், தோப்புவாணியர், children of a
brahman woman by another braman while the husband is living
28. கோளகர்,பெருங்காயவாணியர், a brahman widow’s illegitimate children
29. திண்டிமாக்கள் a panegyrical class
30. மாவுத்தர்,யானைப்பாகர், elephant drivers
31.சாமந்தர்,a class of captains of armies
32. அபிடேகர் (active)
33. பட்டபந்தனர், races attending a ruler’s coronation
34. மல்லர்கள், pugilists
35.கவரைகள்,a class of gem merchants
36. பரிக்குலத்தவர், a tribe engaged in breaking or training horses

களவிற்பிறந்த வநுலோமர்(Anuloma class of clandestine origin):
37. காணியாளப் பார்ப்பார், சவன்னர்,brahmans engaged in news bearing and guarding
38. காணியாளர், a sort of doctors and astrologers.
39. அபிடேகர் (passive), a class of petty rulers.
40. கைக்கோளர், rope and fag makers for temples.
41. நட்டுவர்,dancing and music masters
42. குயவர்,கும்பகாரர், potters.
43. ஊர்க்கணக்கர், writers
44. சுருதிமான்,a class of hunters
45. கடிகைப்புலவர், a class of poets
46. கோமுட்டி, a class of merchants
47. பொன்வாணிபர், traders of precious metals
48. பாய்வாணிபர், traders of mats

களவிற்பிறந்த பிரதிலோமர்(Prethiloma class of clandestine origin):
49. சாரதிகள், ரதகாரர்,horse tamers, charioteers
50. வலையர் (வலையம், circuit), a tribe of wild people dealing with vegetables
51. அம்பட்டர், a higher sort of barbers
52. வேடுவர், வேடர், hunters
53. ஈரங்கோலிவண்ணார், கோவில் வண்ணார். a particular class of washermen attached to temples
54.முச்சியர், painters
55.உறைகாரர், காரோடர், sheath makers
56. தூதர், ஒற்றர், messengers, spies.
57. அத்திதாரிகள், elephant bearers.
58. உப்புவாணிபர், salt sellers. 59.எண்ணெய்வாணிபர். oil mongers.
60. கூத்தாடிகள், dancers and actors
61. கழாயர், கழைக்கூத்தாடிகள், rope dancers.
62. இளமை வண்ணார், பறைவண்ணார், a base. order of washermen

அநுலோம விராத்தியர்(Mixed breed of the Anuloma class):
63. நட்டுவர், dancing and music masters
64. தறியாளர், weavers attached to the temple.
65. கரையார், தோணியியக்குவார், boatsmen
66. சிற்பர்,mechanics, artisans
67. மரவர், makers of wooden measures and vessels
68. பூவாணிபர், garland sellers
69. பட்டணவர், மீன்வாணிபர், fishmongers
70. தட்டார். gold-smiths.
71. கொல்லர், black-smiths.
72. கன்னார்,braziers.
73. கல்தச்சர், masons.
74. மரத்தச்சர், carpenters.
(70,71,72,73,74- இவர்கள் கம்மாளர் Smiths
ஆவர்)
75. மீன்பள்ளி, பள்ளர்,* fisher caste.
(இவர்களை மலையாளம், யாழ்ப்பாண தேசங்களில், ‘நளப் பள்ளரென்றும், தீயப் பள்ளரென்றும், சொல்லுகிறார்கள்).

பிரதிலோம விராத்தியர்(Mixed breed of the Prethiloma class):
76. காவற்பள்ளி, படையாட்சி, a class of
warriors
77. நெய்யற்சிற்பியர், தையற்சிற்பியர், curtain and flag makers, and tailors
78. குறவர், புலையர், a class of foresters and hunters
79. சுண்ணாம்புப் பரதவர்,
சுண்ணாப்பரவர்,chunnam mongers.
80. மீன்பரதவர், செம்பரவர், a tribe ·of fisher men.
81.அநுலோமவண்ணார்,washermen of the
Anuloma class
82. மேலோர்வண்ணார், பாண்டிவண்ணா ர், washermen serving noble-families
83. நீலவண்ணார், washermen using
indigo.
84. சுபாசர், வெட்டியார், a class dealing with dead bodies
85. நக்கவாரிகள், தோட்டிகள், scavengers
86. ஊத்தைப்பறையர், a class of pariahs eating dead bodies
87. ஒட்டர், a caste of diggers and miners.
88. பிரதிலோம வண்ணார், தீண்டாவண்ணார், washermen of the Prethiloma eclass
89. கருவர். those dealing with ingredients for magical preparations
90. சக்கிலிகள், தோல்வினைஞர், workers in
leather

சுருதிமான்விராத்தியர்(Mixed-bread of the Suruthiman class):
91. அரிப்பர், அரிப்புக்காரர், sifters
92. பாமரர்,வலைகாரர், a tribe of country people who use nets in chase
93. கடையர், (கடை, low rank,) வலையர், a tribe of fishermen.

பட்டசாலிய னிரும்பூதி விராததியர்(Mixed breed of Pattasali, and frumbutti class):
94. செப்புக்கன்னார், copper-smiths
95, இருளர், & caste of mountaineers
96. கணிதர், a class of astrologers

குறிப்பு: சூத சம்ஹிதை நூல் குறிப்பிடும் ஸவர்ணன்,நிஷாதன்,கும்பகாரன்,பாரசவன்,
பிங்களன்,ரதகாரன்,போஜன்,அவிரன்,தௌஷ்யந்தன்,க்ஷத்தா,சாலிகன்,புளிந்தன்,உக்ரன்,சண்டாளன்,வேளவன்,சக்ரீ,மாணவிகன்,ஸமுத்ரன்,அதோநாபிதன்,பாகலப்தன்,ரஜகன்,ச்வபசன்,தந்தகவேளகன்,பைரவன்,கனகன்,சர்மகாரன்,கல்லன்,மத்தன்,மல்லகன்,பிச்சலன்,கர்ணன்,த்ரமிலன்,ஸூதன்வா,ஸூதன் இப்படி பல சாதி வகைகள் “சாதிநூலில்” இடம்பெறவில்லை.தவிர “சாதிநூல்” சைவ ஆகம நூல்களில் உள்ளவற்றை மையமாக க் கொண்டு எழுதப்பட்டுள்ளது. வைணவம் மற்றும் மற்றைய பிரிவு நூல்கள் குறிப்பிடும் சாதிகளின் விவரங்கள் இந்நூலில் இல்லை.

சாதிநூலில் உள்ளபடிதான் நால்வர்ணத்திலிருந்து நூற்றுக்கணக்கான சாதிகள் பிரிந்தன. இன்று நாம் காணும் அனைத்து சாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் மேலே குறிப்பிட்டுள்ள நால் வர்ண சுத்த சாதி,அநுலோம சாதி,பிரதிலோம சாதி,அந்தராள சாதி,விராக்திய சாதி வகைகளிலிருந்தும் அவற்றின் கலப்பு சாதிகளிலிருந்து பிரிந்தவைகள் என்பதை “சாதிநூல்” முதல் ஏனைய வைதிக சனாதன நூல்களை வாசிக்கிறவர்கள் அறிவர்.இனிமேலாவது இன்றைய சாதிகளின் உருவாக்கம் ஆங்கிலேயர்கள் எனும் தவறான கருத்தைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்.

உண்மை எப்போதும் கசப்பானதுதான், அதைப் புரிந்து விழிப்புணர்வுடன் செயல்படுவதே சமூக மேம்பாட்டிற்கு உதவும்.

  • தினகரன் செல்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here